ஆசிரியர்: கே. நரசிமுடு
மொழியாக்கம்: ஜோசப் கோவிந்த்
இந்த படைப்பில் தேவன் இருக்கிறார் என்பதற்கு மிக முக்கியமான சான்றுகள் உள்ளன. ஒன்று: சிருஷ்டி (படைப்பு) மற்றொன்று தார்மீக மதிப்புகள் தேவன் இருக்கிறார் என்பதற்கு இது போன்ற முக்கியமான சான்றுகள் நம் கண் முன்னே இருந்தாலும் & தெரிந்தாலும் சிலர் தேவன் இல்லை என்று சொல்லி தர்க்கம் செய்பவர்கள் நாத்திகர்கள் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் மனிதன் என்பவன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. அதனால் தான் வேதம் அவர்களை, இவ்விதமாக சொல்லுகிறது. “தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்." (சங்கீதம் 14:1). தேவன் இருக்கிறாரா? ஒருவேளை தேவன் இருந்தால், அவர் எப்படி இருப்பார்? நான் யார்? ஏன் என்னைப் படைத்தார்? மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா? ஒருவேளை மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருந்தால், நான் எங்கு செல்வது? இப்படிப்பட்ட மனித அறிவுக்கெட்டாத கேள்விகளுக்கு பதில் வேண்டுமென்றால் மனிதன் தேவனிடமே கேட்க வேண்டும். தேவன் மனிதனுக்கு தோன்றுவதில்லை. பின்பு நாம் அறிவது எப்படி? எனவே தேவன் இருப்பதையும் அறிய, நம்மைப் பற்றி அறிய, அவருடன் பேச, ஏதாவது ஒரு புத்தகம் கொடுத்திருக்க வேண்டும். அது மனிதர்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுதப்பட வேண்டும்.
அந்த புத்தகம் எதுவென்றால் “பரிசுத்த வேதாகமம்” மனிதனுக்கு தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்வதற்கு தேவன் கொடுத்த ஒரே புத்தகம் வேதாகமம் தான். அந்த வேதத்தில் நான் ஒருவரே தேவன் என்றும், என்னைத் தவிர வேறு தேவன் இல்லை என்று அவரைக்குறித்து தெளிவாக சொல்லியுள்ளார். பொதுவாக நாம் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் போது, சில வேற்று மதத்தவர்கள் எங்களுக்கு பல கடவுள்கள் இருப்பதாகவும், எங்களுக்கு வேறு தேவர்கள் தேவையில்லை என்றும், எங்களுடைய தேவனே பெரியவர், என்றும் எங்களுடைய மதமே மட்டுமே பெரிய மதம் என்றும் உங்கள் மதத்தை பற்றி எங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்று நமக்கு அறிவுறுத்துவார்கள். சொல்லப்போனால் நாம் அப்படிச் சொல்லவில்லை.
ஏனென்றால் நாம் அறிவிக்கும் தேவன் வேறொரு தேவன் அல்ல, அவர் மட்டுமே ஒரே மெய்யான தேவன், சிலர் தவறாக எண்ணுவதுப் போல் ஊருக்கு ஒரு தேவன், மாநிலத்துக்கு ஒரு தேவன், நாட்டுக்கு ஒரு தேவன் என்று இல்லை. தேவன் என்பவர் ஒருவர் மட்டுமே. அவர் இந்த வானத்தையும் பூமியையும் படைத்தவர். வேதம் போதிக்கும் தேவன் அவரே! எங்களுடைய மதம் பெரியது என்று நாம் சொல்லவில்லை. தேவன் ஒருவராக இருக்கும்போது, அந்த தேவனை அறிவிக்கும் மதமே உண்மையான மதம் என்பதை நாம் பறைசாற்றுகிறோம். அந்த தேவன் தன்னை வேதத்தில் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
உலகில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் “பரிசுத்த வேதாகமம்” தனித்துவம் வாய்ந்தது. அதன் செய்தி மொத்தம் 66 புத்தகங்களில் ஒருங்கிணைத்து சேர்க்கப்பட்டுள்ளது. மேய்ப்பர்கள், அரசர்கள், போதகர்கள், அறிஞர்கள், மீனவர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு எழுத்தாசிரியர்களால் 1,500 ஆண்டு இடைவெளி காலத்தில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் கி. மு. 1400 முதல் கி. மு. 400 வரையில் உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் கி. பி. 40 முதல் கி. பி. 95 வரையில் உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்டன. உலக வரலாற்றில் பலரின் வாழ்க்கையை மாற்றியது இந்த வேத புத்தகம். பரிசுத்த வேதாகமம் என்பது 3,658 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். வரலாற்றில் வேறு எந்த புத்தகமும் இவ்வளவு மொழிகளில் மொழிபெயர்க்கப் படவில்லை இது அரியதோர் சாதனை. அதேபோல், வேதம் உலகில் பலரை மாற்றிய புத்தகம். உதாரணமாக; ஒரு நாத்திகர் “நியூ ஹெப்ரைட்ஸ்” என்ற தீவில் ஒரு குழுவைச் சந்தித்தார், அங்கு ஒரு வயதான மனிதர் வேதத்தைப் வாசிப்பதைதைப் பார்த்து, ஒருவித அதிருப்தியுடன் அவர் இந்த புத்தகத்தை இன்னும் வாசிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்புகிறார். அவருடைய கேள்விக்கு அவர்களின் பதில்; இந்த புத்தகத்தை வாசிப்பதால் தான் நீ இன்னும் உயிருடன் இருகிறார். இல்லையேல் நீ எங்களுக்கு உணவாக இருந்திருப்பாய். என்று பதிலளித்தார். ஏனென்றால், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, “ஜான் ஜி பாட்டன்” என்ற மிஷனரி அந்த மனிதர்களை சாப்பிடும் கூட்டத்தின் மத்தியில் வந்து வேதத்தின் மூலம் அவர்களிடையே மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். இவ்வகையில் வேதாகமம் காட்டுமிராண்டிகளை கூட மாற்றிய நிகழ்வுகள் ஏராளம் உண்டு. வேதாகமம் 24,733 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட புத்தகமாகவும் உள்ளது. இனி இந்த வேதத்தின் அங்கீகரிக்கப்பை பற்றி விரிவாக அராய்ந்து அறிந்துக் கொள்வோம்.
வேதம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது? அது எப்போது நடந்தது?
இந்த வேதாகமத்தில் ஏன் 66 புத்தகங்கள் மட்டும் அதாவது பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் உள்ளன? இந்த எண்ணிக்கையோடு ஒன்று கூடவோ அல்லது ஒன்று குறையவோ இல்லாமல் 66 புத்தகங்கள் மட்டும் இருப்பது ஏன்? இந்த 66 புத்தகங்கள் என்கிற விடுபட்ட எண் பைபிளில் எங்காவது எழுதப்பட்டுள்ளதா? அல்லது மனிதர்களால் தீர்மானிக்கப்படுகிறதா? அல்லது அதை தேவன் முடிவு செய்தாரா? இப்போது இந்த விஷயங்களை பற்றிப் பார்ப்போம்.
முதலில் பழைய ஏற்பாட்டை பார்ப்போம்.
முக்கியமாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மேசியா வருவார் என்றும், அவர் பாவிகளுக்குப் பரிகாரம் செய்வார் என்ற செய்தி எழுதப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி இதில் 39 புத்தகங்கள் உள்ளன. இது சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்து கி. மு. 400 வரையிலான வரலாற்றைக் தெரியப்படுத்துகிறது, மேலும் எதிர்காலத்தை குறித்த தீர்க்கதரிசனம் சொல்லுகிறது, உதாரணமாக மேசியா மற்றும் அவரது நித்திய ராஜ்யம் பற்றியும். ஆதியாகமம் முதல் மல்கியா வரை அவை அனைத்தும் எழுதப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டை விட இந்த பழைய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை பற்றிய சர்ச்சைகள் மிகக் குறைவு. இந்த பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி வரலாறுகளாகவே உள்ளது. சொல்லப்போனால், மனித படைப்பின் தொடக்கத்தில் எழுத்து வடிவம், எழுத்துமுறை இல்லை. ஆகவே, அந்த நாட்களில் தேவனுடைய மக்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வாய் வழி செய்தி வார்த்தையின் மூலம் தகவல்களைக் கொடுத்து வந்தனர். ஆதியில் மனிதன் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் வாழ்நாள் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். ஏனென்றால், எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டத்தில் பல தலைமுறைகள் கடந்து சென்றால், ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தகவல் அனுப்புவதில் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால்தான் தேவன் அவர்களுக்கு நீண்ட ஆயுட்காலத்தை கொடுத்தார் என்று நினைக்கிறேன். கவனிக்கவும்; ஆதாம் மாரித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு தேவன் ஏனோக்கை கொடுத்தார். ஆதாம் பல வருடங்கள் வாழ்ந்ததால், படைப்பின் தொடக்கத்திலிருந்து நடந்த அனைத்தையும் ஏனோக்கிடம் கூறினார்.
இவ்வாறே மோசேயின் தலைமுறை வரை பிதாகள் மூலமாக அந்த சங்கதிகள் அனைத்தும் அனுப்பப்பட்டது. அதனால்தான் மோசே வேதத்தின் தேவனை முன்பே அறிந்திருந்தார். அந்த காரணத்திற்காக தான், தேவன் மோசேக்கு தரிசனமான போது, "ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின்" தேவன் என்று தன்னை அறிமுகப்படுத்தியபோது, மோசே பணிந்து வணங்கினான். அப்போதிருந்து, தேவன் ஒவ்வொரு தலைமுறையிலும் தனக்கானவர்களை ஏற்ப்படுத்தி, அவர்களைக் கொண்டு வேதத்தை எழுத வைத்தார். முதன் முதலில் மோசேயினால் எழுதப்பட்டது பின்னர் பல தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது. அவர்களால் செய்யப்பட்ட அற்புதங்களினால் அவர்கள் சொன்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதன் மூலம், அவர்கள் எழுதிய வேதம் தேவனால் ஏவப்பட்டது என்று தேவன் உறுதிப்படுத்துகிறார். இந்த பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்தோடு முடிகிறது. கர்த்தராகிய இயேசு பிறந்த சமயத்தில், யூதர்களின் கைகளில் ஆதியாகமம் முதல் மல்கியா வரையிலான வேதம் அவர்களிடம் இருந்தது. அவற்றை வேதவாக்கியங்களாக உறுதிப்படுத்தினார். 39 புத்தகங்கள் உடைய பழைய ஏற்பாடாக நமது வேதத்தில் அவை உள்ளன.
ஒரு சந்தர்ப்பத்தில், இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு வேதத்தின் முழுமையான தொகுப்பைப் பற்றி கூறினார், "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 5: 17,18) என்று சொன்னார். இயேசு கிறிஸ்துவின் ஊழியம் நாட்களில், பழைய ஏற்பாட்டு வேதங்கள் பல வழிகளில் அது தேவனால் ஏவப்பட்ட வேதம் என்று அவரால் உறுதிப்படுத்தப்பட்டதை சுவிசேஷங்களில் வாசிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பரிசேயர்களுடனும், சதுசேயர்களுடனும் அவர் வாக்குவாதம் செய்தபோதும், அவர் வேதத்தைப் பற்றி எந்த கருத்து வேறுபாடும் தெரிவிக்கவில்லை. இன்றைய சம காலத்து யூதர்களிடம் இன்னும் அந்த பழைய ஏற்பாட்டு வேதம் உள்ளது.
குறிப்பு: யூதர்களின் வேதத்தில் நம்மிடம் இருப்பது போல் 39 புத்தகங்கள் இருக்காது. காரணம் என்னவென்றால் சாமுவேல், இராஜாக்கள் மற்றும் நாளாகமம் ஆகிய இந்த புத்தகங்கள் இரண்டு இரண்டாக நம்மிடம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு அவை ஒரே புத்தகமாக இருக்கும். இதனால் அவர்களின் வேதமும் நமது வேதமும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் செய்தியின் அடிப்படையில் ஒன்றுதான். அவர்களின் வேதத்தில் என்ன உள்ளதோ நம்முடைய வேதத்திலும் அவையே உள்ளன. இதில் எந்த மாற்றமும் இல்லை.
இரண்டாவதாக புதிய ஏற்பாட்டை பார்ப்போம்:
பழைய ஏற்பாட்டில் தேவன் எதை வாக்குறுதியளித்தாரோ அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டில் நிறைவேறியது. அவர் தீர்க்கதரிசனம் உரத்ததுப் போல், இரட்சகர் பாவிகளுக்காக வந்தார். அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து மக்களின் பாவங்களுக்கான பரிகாரத்தை செய்தார். அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர் மீண்டும் நியாயாதிபதியாக வருவார் என்று புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் சுமார் 65 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது. இந்த புதிய ஏற்ப்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் ஒரு குறிக்கோளும் ஒரு நோக்கமும் இருந்தது. மற்றும் அது மல்கியாவுடன் முடிவடைந்தது போல், புதிய ஏற்பாடும் வெளிப்படுத்தல் புத்தகத்தோடு முடிவடைகிறது. பழைய ஏற்பாட்டை எழுததுவதற்கு தேவன் தீர்க்கதரிசிகளை நியமித்தது போல், புதிய ஏற்பாட்டு புத்தகங்களை எழுத அப்போஸ்தலர்களை நியமித்தார். அவர்கள் மூலமாகத்தான் வேதாகமம் முழுமை பெற்றது.
(மாற்கு 16:20) “அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.”
அப்போஸ்தலர் 14:3 “அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.”
(வெளிப்படுத்தல் 22: 18-19) “இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.”
இந்த புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் அப்போஸ்தலர்களால் எழுதப்பட்டது மற்றும் அவர்களின் மேற்பார்வையின் கீழ். அந்த புத்தகங்களை எருசலேமில் இருந்து சிதறிய சபை உட்பட மற்ற சபையாரால் வாசிக்கப்பட்டது.
(கொலோசெயர் 4:16) “இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.”
(1 தெசலோனிக்கேயர் 5:27) “இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
அதனால் தான் அவற்றையெல்லாம் ஒரு புத்தகமாக இணைக்க சிறிது காலம் பிடித்தது. ஆயினும் சில போலி நிருபங்கள் அப்போதே எழுதப்பட்டுள்ளன. எனவே அங்கீகாரம் என்பது மிகவும் அவசியமாகிவிட்டது. 27 புத்தகங்களையும் புதிய ஏற்பாடாக எவ்வாறு அங்கீகாரிக்கப்பட முடிந்தது? சிலர் பரிசுத்த ஆவியானவர் மனித ஞானத்திற்கு அப்பாற்பட்ட முறையில் போதித்ததால் சபை மூப்பர்கள் இதைச் செய்தார்கள் என்று சொல்லுவார்கள், ஆனால் அது உண்மையல்ல.
அவை புத்தகத்தின் தரநிலை ஆசிரியர் ஒரு அப்போஸ்தலரா? அல்லது அப்போஸ்தலருடன் நெருங்கிய தொடர்புடையவரா? அப்போஸ்தலர்கள் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட புத்தகமா? ஆதி சபை எழுதியவர்களை அங்கீகரித்ததா? என்று இவையெல்லாம் கருத்திக் கொண்டு அந்த புத்தகங்களை புதிய விதிகளாக முடிவு செய்யப்பட்டுள்ளன.
அதுவே 27 புத்தகங்கள்;
1. இயேசு கிறிஸ்துவின் சீஷரான மத்தேயு எழுதிய சுவிசேஷம்: 1
2. பேதுருவின் மேற்பார்வையில் மாற்கு எழுதிய மாற்கு சுவிசேஷம் (அப்போஸ்தலர் 12: 11,12), (1 பேதுரு 5:13): 1
3. அப். பவுலின் மேற்பார்வையில் லூக்கா எழுதிய லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் (கொலோசெயர் 4:14), (2 தீமோத்தேயு 4:11), (பிலேமோன் 1:24) : 2
4. இயேசு கிறிஸ்துவின் சீடரான யோவான் எழுதிய யோவான் சுவிசேஷம், மூன்று நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்தல் புத்தகம்: 5
5. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய நிருபங்கள், அவை கர்த்தராகிய பேதுருவின் சீடரால் வேதவாக்கியங்களாக உறுதிப்படுத்தப்பட்டன. (2 பேதுரு 3:15-16) : 13
6. தீமோத்தேயுவின் நெருங்கிய நண்பர் ஒருவர் எழுதிய எபிரேயர் நிருபம் (எபிரெயர் 13:23) தீமோத்தேயுவுக்கு நெருக்கமாக இருந்திருந்தால், அப். பவுலும் நெருக்கமாக இருப்பார். : 1
7. இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களான யாகோப்பு மற்றும் யூதா எழுதிய நிருபங்கள்: 2
8. அப். பேதுரு எழுதிய நிருபங்கள் : 2
என்பதை கவனிக்கவும் இந்த அங்கீகாரம் கி. பி. 400 ஆம் ஆண்டு காலத்தில் நடக்கவில்லை. கி. பி. 100 முதல் 165 வரை வாழ்ந்து இரத்த சாட்சியான ஜஸ்டின், என்பவர் அந்தக் காலகட்டத்திலே நமக்கு நான்கு சுவிசேஷங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். கிளெமென்ட் ஆஃப் ரோம் (கி. பி. 95) இந்த காலகட்டத்தில் இவற்றில் எட்டு புத்தகங்களைக் குறிப்பிடுகிறார். யோவானின் சீடறான போலிகார்ப் என்பவர் (கி. பி. 108) 15 புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். ஹிப்போலிடஸ் (கி. பி. 170 - 235) 22 புத்தகங்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே, எபிரேயர் நிருபம், யாக்கோபு நிருபம், பேதுருவின் இரண்டாவது நிருபம், யோவானின் இரண்டு, மூன்று மற்றும் நான்கு புத்தகங்கள் சர்ச்சைக்குரியவை. முன்பு அவையும் வேதம் என்பது ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டது.
இறுதியாக; வேதாகமம் நம்பகமானது. ஏனெனில்:
1. யூதர்கள் மட்டுமே தங்கள் தலைமுறைகளின் பட்டியலின் நினைவகத்தை எழுதி வந்தனர். உதாரணமாக; நம்முடைய தாத்தாவின் பெயர் தெரியும், முடிந்தால் அவர்களுடைய தாத்தாவின் பெயரையும் நாம் தெரிந்து வைத்திருக்கலாம். அதைத் தாண்டி நம்முடைய தலைமுறையை குறித்து நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் யூதர்களின் வம்ச தலைமுறையின் பட்டியலை பார்க்கும்போது, ஆதாமிலிருந்து அவர்களின் இனத்தின் தோற்றம் மற்றும் ஆபிரகாமிலிருந்து ஒவ்வொரு தலைமுறையின் பெயரையும் நாம் காண்கிறோம். தேவன் தம்முடைய வார்த்தையை எழுத வைக்க அவர்களை நியமித்ததால் இது அவர்களுக்கு சாத்தியமானது.
2. அந்த வரலாற்றின் இடங்கள், அரசர்கள் மற்றும் பிரபலமானவர்களின் பெயர்கள் இதில் எழுதப்பட்டு உள்ளன. உதாரணமாக; லூக்கா எழுதுகிறார், "திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்த காலத்தில்" (லூக்கா 3:1) . இது லூக்கா உருவாக்கி எழுதவில்லை. அவர்கள் இவர்கள் வரலாற்றில் இருக்கிறார்கள் என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன.
3. முன்னறிவிக்கப்பட்டு நிறைவேறிய பல தீர்க்கதரிசன சம்பவங்களை இதில் காண்கிறோம். உதாரணமாக, ஏசாயா கி. மு. 700 இல் தீர்க்கதரிசனம் கூறினார், "கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்." (ஏசாயா 44. :28). ஆனால் இந்த சைரஸ் என்ற அரசன் கி. மு. 539-530 க்கு இடையில் ஆட்சி செய்தார். அதாவது, இந்த சைரஸுக்கு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பெயர் உட்பட, தீர்க்கதரிசனம் கூறப்பட்டது. கி. மு. 700 இல் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் என்பது எவ்வளவு உண்மையோ, சைரஸ் கிமு 539-530 இல் ஆட்சி செய்ததும் உண்மையாக இருக்கிறது. வேறு எந்த வேதத்திலும் இத்தகைய சான்றுகள் காணப்படவில்லை. அப்படி எழுதப்பட்டாலும், அவை ஒரே காலத்தில் எழுதப்பட்டவை என்பது நிரூபிக்கப் படவில்லை. ஏனென்றால், எதிர்காலத்தில் ஏற்கனவே நடந்த காரியங்களைக் குறிப்பிடுவதன் மூலம் அந்த வேதம் அப்போது இருந்ததா? இல்லையா? என்று சிலர் சொல்ல முயன்றனர், ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடியவில்லை. அதேபோல, அவர்களின் தேவர்களின் அவதாரங்களை எடுக்கப் போவதாக எழுதியதோடு, அந்த அவதாரங்களை தங்கள் தேவர்கள் எடுத்ததாகவும் எழுதிக் கொண்டார்கள். அவை வரலாற்று ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் வேதாகமத்தில் அப்படி இல்லை. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் வரலாற்றில் நிரூபிக்கபட்டுள்ளது.
நமது இரட்சிப்புக்கு வேதம் போதுமானது:
லூக்கா 16: 27-31 அப்பொழுது அவர் கூறினார் – “அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்."
இந்த சந்தர்ப்பத்தில், அந்த செல்வந்தன் லாசருவை தனது சகோதரர்களிடம் அனுப்பும் என்ற சந்தர்ப்பத்தின் போது, ஆபிரகாம் அவனிடம் சொன்னது, அவர்களுக்கு மோசே மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை கேட்டு மனந்திரும்ப வேண்டும் என்றும், அவர்களுடைய வார்த்தைகளை கேட்டு மனமாற்றம் அடையாதவர்கள் (இரட்சிக்கப்படாமல்) அவர்களின் வார்த்தைகளின்படி லாசரஸ் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அற்புதத்தைக் கண்டாலும் நம்பமாட்டார்கள். ஏனென்றால் இயேசு கிறிஸ்துவாலும் அப்போஸ்தலர்களாலும் பல அற்புதங்களைக் கண்டவர்கள் கூட நம்பி இரட்சிக்கப்படவில்லை. அதாவது, இரட்சிப்புக்கு தேவனுடைய வார்த்தை ஒன்றே போதுமானது. அதனால்தான், "ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்." (யாக்கோபு 1:21) என்று எழுதப்பட்டுள்ளது.
2 தீமோத்தேயு 3:16-17 ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”
எனவே விசுவாசிகள் முற்றிலும் தேவனுடைய வார்த்தையின் மீது சார்ந்திருக்க வேண்டும், மற்றவர்களின் அனுபவங்களில் & சாட்சிகளில் நாம் சார்ந்திருக்க வேண்டாம். பிற்காலத்தில் அனுபவங்களை நம்பி வாழும் ஒரு தலைமுறை உருவாகும் என்பதை அறிந்த பேதுரு இவதமாக எழுதியிருக்கிறார், "நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” (2 பேதுரு 1:17-19).
இறுதியில், மனிதர்களின் அனுபவங்களை விட தேவனுடைய வார்த்தையில் கவனம் செலுத்த அவர்களுக்கு கற்பிக்கிறார். உதாரணமாக; இயேசு கிறிஸ்து ஒருவருக்கு கனவில் தோன்றி ஏதாவது செய்யும்படி கேட்டார் என்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே கூறுகிறார், "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." (யோவான் 12:48). அதாவது, கடைசி நாளில், கனவுகள் என்பது நம்முடைய கற்பனையிலிருந்து பிறப்பதால், கனவில் சொல்லப்பட்ட வார்த்தைகளின் அடிப்படையில் அல்ல, அவருடைய வார்த்தையில் எழுதப்பட்ட வார்த்தைகளின் அடிப்படையில் அவர் நம்மை நியாயந்தீர்ப்பார்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். சில காலத்திற்கு முன்பு நான் தேவனை அறியாத ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் உறவினர் ஒருவருக்கு நற்செய்தியைப் அறிவித்து அவரை திருச்சபைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு நாள் அவர் என்னுடன் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், இயேசு கிறிஸ்து அவருக்குத் தோன்றி அவரை ஆசீர்வதித்தார் என்று சொன்னார். நீங்கள் முன்பு சாய்பாபாவை வழிபட்டீர்களா? அல்லது அவரையும் பார்த்தீர்களா? என்று கேட்டேன், அவர் ஆம் என்றார்.
அதாவது கடந்த காலத்தில் அவர் தனது கற்பனையில் சாய்பாபாவை பார்த்தது போல் இயேசு கிறிஸ்துவையும் தற்போது பார்கிறார். தான் சொல்லுவது பொய்யல்ல என்கிறார். அதேப்போல இயேசு கிறிஸ்துவைக் கூட பார்க்கவில்லை மன ரீதியான உளவியலில் இதற்குப் பல விளக்கங்கள் உள்ளன. தற்சமயம் தரிசனங்களையும் கனவுகளையும் காண்பவர்கள் அனைவரும் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள். அவர்கள் தரிசனங்களையும் கனவுகளையும் பெறுகிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் அவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை அல்ல. அவர்கள் கற்பனையில் உருவானவை மட்டுமே!
வருந்தத்தக்க வகையில் உண்மை என்னவென்றால், பலர் இந்த அனுபவங்களினாலே! ஈர்க்கபடுகிரார்கள். தேவனுடைய வார்த்தையை விட மனிதன் சொல்லும் வார்த்தைகளிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்கள். அதனால் தான் நாம் முழுக்க முழுக்க தேவனுடைய வார்த்தையை நம்பியிருக்க வேண்டும், கற்பனை அல்லது அனுபவத்தில் அல்ல. நம்மை நியாயந்தீர்க்கிறவரின் வார்த்தைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
2 பேதுரு 1:19 “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். நீங்கள் அதை இலக்காகக் கொண்டால் அது உங்களுக்கு நல்லது.