அந்நியபாஷை குழப்பம்

பாஸ்டர்.ராஜமணி அவர்கள் எருசலேமிலும்,செசரியாவிலும்,எபேசுவிலும் அந்நியபாஷை பேசினார்கள். இதை அந்நியபாஷை அடையாளத்துக்கு சாட்சி என்கிறார். அதோடு பெந்தேகோஸ்தே சபை மக்கள் பேசும் அந்நியபாஷையும் பாஸ்டர்.ராஜமணியாகிய நான் பேசும் அந்நியபாஷையுமே சாட்சியாகும். இதற்கு மேல் வேறு எங்கும் விளக்கத்திற்கு அலையவேண்டியதில்லையே? என்று எழுதியுள்ளார்.

இவர்கள் பேசியது அந்நியபாஷையே இல்லையே? அது வெறும் உளரல்தானே, இன்று பெந்தேகோஸ்தே சபைகள் யாவும் பேசுவது அந்நியபாஷையே அல்லவே! வெரும் உளரல்கள்தானே. பெந்தேகோஸ்தே சபையில் உள்ள சின்ன பிள்ளைகள் பெந்தேகோஸ்தே ஆராதனை முடித்து வீட்டில் வந்து தங்கள் பாஸ்டர் அந்நியபாஷை பேசுவதை போல் உளரி காண்பித்து சிரிக்கிறார்கள். எங்கள் பாஸ்டர் எப்போதும் தளபுள இக்கரபுளா ஷக்கர பலா என்று இதையேதான் எப்போதும் பேசிக்கொண்டே எங்களையும் பேச சொல்லுவார் . நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே பாஸ்டர் பேசுவதைபோல் பேசுவோம். பள்ளிக்கூடத்திலும் பேசுவோம்,ஸ்கூல் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போது பேசுவோம், அப்போது அதே சபையை சேர்ந்த மற்ற பையன் கூறுவானாம், டேய் நம்மைவிட அந்த பையன் பாஸ்டர் பேசுவதை அப்படியே மிமிக்கிரி செய்து காட்டுவான். பாஸ்டர் பேசுவதை அப்படியே பேசுவான். அந்த குறிப்பிட்ட 3 வார்த்தைகளை தவிர அந்நியபாஷையாக எங்கள் பாஸ்டர் வாயிலிருந்து புதிதாக ஒரு வார்த்தையும் வந்ததில்லை. இதுதான் இன்றைய பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் பேசும் அந்நியபாஷை. இவர்கள் சபையில் வளர்ந்த பள்ளி பிள்ளைகளுக்கு விளங்குகிறது. இது போலியான பாஷை என்பது. ஆனால் சபை மக்களுக்கு இன்னும் விளங்கவில்லை. இதை பரிசுத்தாவியானவர் பேச வைக்கிறார் என்று இவர்கள்கூறுவதான் கொடுமை.

பாஸ்டர்.ராஜமணி அவர்கள் எழுதிய பொய்:

எருசலேமில் கூடியிருந்த அப்போஸ்தலர் இயேசுவின் தாயாகிய மரியாள் மற்றும் சீஷர்கள்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினபோது அவர்கள் வௌ;வேறு பாஷைகளை பேச தொடங்கினார்கள். இவர்கள் அந்நியபாஷைகளை பேசத் தொடங்கினபோது அங்கே பாஷைகளை புரிந்துக்கொண்ட எவருமே இல்லை என்று பகிரங்கமாக அவர் எழுதியது உண்மையை மறைக்கும் மிகப் பெரிய பொய் ஆகும். மேலும் அவர் எழுதியதாவது. சீஷர்கள் அந்த இடத்தில் அந்நியபாஷைகளை பேசியது யாரிடம் பேசினார்கள்?

நூற்றிருபது பேரும் அந்நியபாஷைகளில் பேசின சத்தம் உண்டானபோதுதான் ஆட்கள் அங்கு வந்துகூட ஆரம்பித்தார்கள் என்று வேதம் வாசிக்காதவரைப்போல எழுதியிருக்கிறார். அவர்களெல்லாரும் ஆராதனைக்கு வருவதுபோல் வந்து உட்கார்ந்து செய்தி கேட்க வரவில்லை. இது என்ன கூச்சல் என்று வேடிக்கை பார்க்க வந்தார்கள் என்று இவ்வளவு அனுபவம் உள்ள பாஸ்டர் எழுதலாமா? இப்படிப்பட்ட ஒரு அபத்தமான விளக்கம் பாஸ்டர்.ராஜாமணி அவர்களிடமிருந்து நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.

இவர் எழுதியதற்கு கீழே எழுதும் என் விளக்கத்தையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். அப் 2:6ல் அந்த சத்தம் உண்டானபோது திரளான ஜனங்கள் கூடிவந்தார்கள் என்று தெளிவாக எழுதியதை பாஸ்டர்.ராஜமணி அவர்கள் ஏன் மறைக்கிறார்?. அதற்கு பதிலாக அந்நியபாஷையில் பேசிய சத்தம் உண்டானபோதுதான் ஆட்கள் வந்துகூட ஆரம்பித்தார்கள் என்று எப்படி தைரியமாக வசனத்தை மாற்றி பொய்யாய் எழுத இவருக்கு தைரியம் வந்தது?. மேலும் அவர் எழுதியதாவது அந்த வீட்டின் எதிரே கூடிய அவர்களெல்லாம் ஆராதனைக்கு வருவதுபோல் வந்து உட்கார்ந்து செய்தி கேட்க வரவில்லை. இவர்கள் வௌ;வேறு பாஷையில் பேசியதை இது என்ன கூச்சல் என்று வேடிக்கை பார்க்கவே வந்தார்கள் என்று எழுதியுள்ளார். இவர் சபையில் அந்நியபாஷை என்ற பெயரில் போடும்கூச்சலைப்போல இது என்று நினைத்து எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் AOG, TPM, IPC சபை பாஸ்டர்களுக்கு டாக்டர்.புஷ்பராஜாகிய நான் தாழ்மையாய் கேட்டுக்கொள்வது, உங்கள் கையில் உள்ள வேத புத்தகமும், பாஸ்டர்.ராஜாமணி பாஸ்டர் அவர்கள் கையில் உள்ள வேத புத்தகமும் ஒன்றுதானே . மேலே பாஸ்டர் அவர்கள் வேத வசனத்தை மறைத்தது வசனத்தில் இல்லாததை பொய்யாய் கூறியதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? தயவுசெய்து பதில் எழுதுங்கள். வெவ்வேறு பாஷைகள்- பல்வேறு பாஷைகளில் பேசினார்கள்.

எருசலேமிலிருந்த ஜனங்கள் யாவரும் அந்தமேல் அறைவீட்டின்முன் ஓடிவந்து பார்க்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள் என்று எழுதியிருக்கிறது. அப் 2:4.

வரம் Gift கொடை - பரிசு:

இங்கு பரிசுத்த ஆவியானவர் அந்த சீஷர்களுக்கு தந்தருளிய வரத்தின்படியே (பரிசு) சீஷர்கள் யாவரும் வெவ்வேறு பாஷைகளில் பேசினார்கள் என்று எழுதப்பட்டது. வரம் புவைக வேறு- அடையாளம் வேறு என்பதை இதை வாசிக்கும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சீஷர்கள் மேல்அறையில் காத்திருந்தபோது பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படவில்லை என்பதை TPM சபைக்காரர்கள் குறிப்பாக கவனிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காத்திருப்பு கூட்டத்தில்தான் பரிசுத்த ஆவியானவர் நிறைவு கிடைக்கும் என்பது ஏமாற்று உபதேசம் ஆகும்.

சீஷர்கள் ஜனங்கள் முன்வந்து நின்றபின்தான் பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை நிறைக்கிறார். அடுத்தது சீஷர்கள் ஒரு பாஷையில் பேசவில்லை. ஒரே வாயிலிருந்து பல பாஷைகளில் ஆவியானவர் தந்த வரத்தினால் பேசினார்கள் என்று எழுதியிருக்கிறது. அப்படியே கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கிய விஷயம். சீஷர்கள் வெவ்வேறு பாஷையில் பேசும்போது அந்தந்த பாஷைக்குரிய நபர்கள் அங்கு நிற்கிறார்கள்? அங்கு நிற்கும் விதவிதமான பாஷைக்காரர்களுக்கும் சீஷர்கள் பேசுவதன் அர்த்தம் புரிகிறது. விளங்காத பாஷையில் சீஷர்கள் பேசவில்லை. இந்த இடத்தில் பவுல் கூறியதை ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது. 1கொரி 14:10 உலகத்திலே எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது. அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாமல் இல்லை.

1 கொரி 14:11ல் பேசும் அந்த பாஷையை மேல்வீட்டின் முன் நிற்கும் சீஷர்களுக்கு விளங்காமல் இருந்தால் அந்த பாஷைகளை பேசிய சீஷர்களுக்கோ (பாஸ்டருக்கோ) முன்பாக நிற்பவன் அந்நியனாக இருப்பானே? பேசுகிற சீஷனும் அல்லது அந்நியபாஷை பேசும் (பாஸ்டரும்) சபை மக்களுக்கு அந்நியனாக இருப்பார்களே? என்கிறார் (வசனத்தை விளங்க வைக்க இடைசேர்க்கை செய்வேன்). 1 கொரி 14:9ல் நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் பேசாவிட்டால், நீங்கள் பேசியது இன்னது என்று எப்படி தெரியும்?

பெந்தேகோஸ்தே சபையினர் அறிந்துக்கொள்ளவேண்டியது:

அந்நியபாஷை பேசுகிறேன் என்று பேசிய உங்களுக்கும் புரியாத கேட்கிற ஜனங்களுக்கும் விளங்காத பாஷை என்ற பெயரில் பேசி உளராதீர்கள். கர்த்தர் எங்களை பேச வைத்தார் என்று பழியை ஆவியானவர் மேல் போடாதீர்கள். ஆவியானவர் எதையும் தெளிவாக ஒழுங்காக செய்வார். உங்களை ஜெபத்தில்கூட உளரவைக்கமாட்டார் என்பதையும் உணருங்கள். அப்படி ஜெபத்தில் அந்நியபாஷை பேசியதாக வேதத்தில் எங்கும் இல்லை. சம்பவம் நடந்த அந்த சூழ்நிலையில் பேதுரு ஜனங்களிடம் கூறும்போது இப்போது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதை (பரிசுத்த ஆவியானவர்) பொழிந்தருளினார் மக்கள் காண்கிறது என்ன? எதை மக்கள் கண்டார்கள்? என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடியுங்கள்.

காண்கிறது:

மோசே காலத்தில் முட்செடியில் அக்கினி ஜீவாலை வழியாக கர்த்தர் மோசேயுடன் பேசியதைப்போல் இன்று சீஷர்கள்மேல் தீ ஜீவாலை எரிகிறதை மக்கள் கண்டார்கள். நாம் ஆராதிக்கும் தேவனின் ஆட்கள்தான் இவர்கள் என்பதை தீ ஜீவாலை உறுதிப்படுத்தினது. இதைத்தான் நீங்கள் கண்டது என்று பேதுரு கூறினார்.

கேட்கிறது:

அந்நியபாஷை சத்தத்தை அல்ல. ஒரே ஒரு சீஷன் வாய்வழியாக பற்பல பாஷைகளில் பேசுகிறதை கேட்டார்கள். வெவ்வேறு பாஷையில் பேசினார்கள். அந்தந்த பாஷையை அறிந்தவனுக்கு இவர்கள் பேசினதின் அர்த்தம் விளங்கினது. அந்த குறிப்பிட்ட பாஷையை அறியாதவர்களுக்கு சீஷர்கள் அந்நியபாஷையில் பேசியது குடிகாரன் போதையில் பேசுவதைப்போல் இருந்தது. வெவ்வேறு பாஷைகளில் பேசின சீஷர்கள் பிரசங்கம் செய்யவில்லை. தேவ மகத்துவத்தை பேசினார்கள் என்று எழுதியிருக்கிறது. அதை குறிப்பிட்டு அந்த யூதர்கள் கூறியாதவது தேவ மகத்துவத்தை இவர்கள் பேசுகிறதை கேட்கிறாமே என்றார்கள்.

இந்த தேவ மகத்துவம் என்றால் என்ன?

யூதர்களின் முற்பிதாக்கள் தங்கள் தலைமுறை பிள்ளைகளுக்கு கர்த்தர் நம்முடைய முற்பிதாக்களை எப்படியெல்லாம் அற்புதங்களின் வழியாக வழி நடத்தினார் என்பதையும், எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து கர்த்தர் தம் மக்களை விடுவித்து கடலை பிளந்து வானத்திலிருந்து சைவ உணவு, அசைவ உணவு வரவழைத்து, (Poison) விஷ ஊற்றுகளைகூட ஊற்று தொடங்கும் இடத்திலிருந்தே அதிலிருந்த விஷத்தை ஒரு மர கொம்பினால் முறித்து மக்கள் குடிக்கும் மதுர நீராக மாற்றி, தாகம் தீர்த்து உயிர்பிழைக்க வைத்ததையெல்லாம், எண்ணி எண்ணி அதை பாடலாக்கி 40 வருடங்கள் பாலைவனத்தில் நடந்து செல்லும்போது தங்கள் கால்வலியை மறக்க அன்று அற்புதங்கள் செய்துவிடுவித்த கர்த்தரை புகழ்ந்துகொண்டே பாடிய பாட்டின் வரிகள்தான் சீஷர்கள் ஆவியின் நிறைவில் அவரவர்களுக்கு விளங்கும் பாஷையில் தேவ மகத்துவத்தை விவரித்து பேசினதை கேட்டதாகும்.

கைதிகள் பாடமறுத்த தேவ மகத்துவ பாடல்கள். சங் 137

இந்த தேவ மகத்துவத்தின் பாடல்களை தலைமுறை தலைமுறையாக பாடி தங்கள் பிள்ளைகளுக்கும் முற்பிதாக்கள் கற்றுக்கொடுப்பார்கள் அந்த மகத்துவத்தை கேட்பதே ஒரு இன்பம். யூதர்கள் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டபோது அதிகாரிகள் கைதிகளை நடத்திகூட்டி செல்லும் வழியில் கைதிகள் இளைப்பாற பாபிலோன் ஆறுகளின் கரையில் உட்கார்ந்து ஒய்வுவெடுக்கும்போது அந்த அதிகாரிகள் யூத கைதிகளை நோக்கி நீங்கள் உங்கள் முற்பிதாக்கள் உங்கள் தெய்வம் செய்த கிருபைகளை பாடலாக பாடுவீர்களாமே?அந்த பாடலை நீங்கள்பாட நாங்களும் கேட்க ஆசைப்படுகிறோம் என்றார்கள். வாழ்க்கையை இழந்து போர் கைதிகளாக பயணித்துக்கொண்டிருக்கும் யூதர்கள் இனி என்ன நடக்கப்போகிறதோ? எப்படி நம்மை கொடுமைபடுத்துவார்களோ? என்ற கவலையிலும் பயத்திலும் இருந்த அந்த சூழ்நிலையில் அந்த மக்களின் அன்றைய மனோ நிலைமையத்தான் சங்கீதக்காரன் 137ம் சங்கீதத்தில் பாடலாக, கவியாக எழுதி வைத்தான்.

சங் 137 பாபிலோன் ஆறுகள் அருகே (By the Rivers of Babilon) நாங்கள் உட்கார்ந்து கர்த்தரின் கிருபையோடு சீயோனில் கர்த்தரரோடு வாழ்ந்த அந்த இனிமையான வாழ்க்கையை நினைத்து அழுதோம், கர்த்தருக்கு கீழ்படியாமல்போனதால் தானே அடிக்கடி இப்படி எதிரிகளிடம் அகப்பட்டு வாழ்க்கையை இழக்கிறோம் என்று அழுதுக் கொண்டிருக்கும்போது, எங்களை சிறைப்பிடித்தவர்களும், எங்களை பாழாக்கினாவர் களுமான அந்த அதிகாரிகள் எங்களை அந்த பாடலை (தேவ மகத்துவத்தை) பாட சொன்னார்கள். ஆண்டவர் செய்த கிருபைகளை நினைத்து அந்த (மங்கள பாட்டை)பாட சொன்னார்கள்.

உயிருள்ள எங்கள் தெய்வத்தின் பாடலை விக்கிரங்களை ஆராதிக்கும் அந்த அந்நிய தேசத்தில் பாடுவதெப்படி? என்று புலம்பினார்கள். அந்த சம்பவத்தை தான் 137ம் சங்கீதத்தில் வாசிக்கிறோம். அந்த தேவ மகத்துவங்கள் தான் எருசலேமில் சீஷர்கள் வாயிலிருந்து வெளிவந்தது ஆகும். அதை கேட்ட மாத்திரத்தில் இது நம்ம பாட்டு நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த பாட்டு இந்த மகத்துவங்கள் அந்நியதேசத்தாருக்கும், விக்கிரகத்தை வணங்குபவர்களுக்கும் வேற்று இனத்தவர்களுக்கும் தெரியவே தெரியாது. இப்பாடலை குறித்து புறஜாதி அதிகாரிகள் கேள்விபட்டு 137ம் சங்கீதத்தில் யூதர்களை சிறை பிடித்த அதிகாரிகள் பாட சொன்னபோது கூட யூதர்கள் அந்த பாட்டை பாடவில்லை. இந்த தேவ மகத்துவம் யாருக்கும் தெரியாது.

ஆனால் இந்த சீஷர்கள் தேவ மகத்துவம் கூறுவதை நாம் கேட்கிறாமே? அப்படியானால் இவர்களும் நம் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வத்தை ஆராதிப்பவர்கள்தான். ஆகவே இவர்கள் வாயிலிருந்து இதற்குமேல் வேறு என்ன தெய்வ வார்த்தை வெளிவரப்போகிறது என்பதை கேட்போம் என்று அந்த ஜனங்கள் ஆவலாய் நிற்க.

அப்போது தான் பேதுரு எழுந்து நின்று விளக்கம் கொடுத்து பேச தொடங்குகிறார். இந்த தேவ மகத்துவத்துக்கு உரிமையுள்ளவரான பிதாவானவர் அனுப்பின மேசியாதான் இயேசுகிறிஸ்து. நம்மை எல்லாரையும் இரட்சிக்க வந்த அந்த இயேசுவைத்தான் நீங்கள் எல்லாரும் சேர்ந்து கதற கதற சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டீர்கள். ஆனால் பிதாவோ அவரை உயிரோடு எழுப்பி அவர் எங்களுக்கும் தரிசனம் தந்து இன்றும் நம் மத்தியில் உயிரோடு இருக்கிறார். நீங்கள் கொலை செய்த இயேசுவை இப்போதும் நீங்கள் இரட்சிக்க வந்த மேசியா அவர்தான் என்று ஏற்றுக்கொண்டால் அவர் சிந்தின இரத்தம் உங்கள் கொலை குற்றத்தை மன்னிக்கும் என்று நீங்கள் நம்பினால், கர்த்தர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார் அதன்மூலம் அவர் மேலும் மகிமைப்படுவார். அதை கூறத்தான் எங்களை இங்கு உங்கள் மத்தியில் அனுப்பினார் என்று பிரசங்கித்து முடித்தார்.

அன்று மட்டும் அந்த ஒரு நிகழ்ச்சியில் பரிசுத்த ஆவியானவரின் அந்த முதல் இறக்கத்தில் காணப்பட்ட தீ நாளங்களும் தீ ஜீவாலைகளும் கேட்கப்பட்ட இடிமுழக்க சத்தத்தையும் அவர்கள் கண்டார்கள். கேட்டார்கள். ஒரு நபரின் வாய் வழியே பல பாஷைகள் வெளிவந்து தங்களை விளங்க வைத்ததை அறிந்து பேதுரு நிகழ்த்திய அந்த முதல் பிரசங்கத்தில் 3000 ஆயிரம் பேர் மேசியா இயேசுதான் என்று ஏற்றுக்கொண்டு தங்கள் தவறை பேதுருவின் பிரசங்கத்தின் மூலம் உணர்ந்து இருதயத்தில் குத்தப்பட்டு உடனே இனி நாங்கள் என்ன செய்யவேண்டும்?என்று கேட்க, ஞானஸ்நானம் ஆலோசனை பேதுரு மூலமாக பெற்று முதல் கிறிஸ்தவ சபை உருவானது.

இதுதான் புதிய ஏற்பாட்டு யுகம்:

இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பெந்தேகோஸ்தே சபைகள் இன்னும் பழைய ஏற்பாட்டு பிரசங்கத்தையே பிரசங்கித்து, பழைய ஏற்பாட்டு காலத்தில் மக்கள் செய்த ஆர்ப்பாட்டம்போல் கைகளை தட்டியும் கைகளை உயர தூக்கிபிடித்து டாட்டா காண்பிப்பதைபோல் ஆட்டியும் ஆர்பரித்து சிலர் நடனமாடி, சிலர் சிரித்து, சிலர் பாடல் பாடும்போது கூவி விசில் அடித்து இப்படியாக போலி பரவச உணர்ச்சிகளில் பரிசுத்த ஆவி என்ற பெயரில் சபைமக்களை பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் வழிநடத்தி வசனத்தைவிட்டு மக்களை விலக்கி பரவசப்படுத்தி சபை மக்களை தன் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் சபைகளில் காணப்படும் பாடல் வாத்திய கருவிகளின் கவர்ச்சி மக்களை வசனத்தைவிட்டு விலக்கிப் போட்டது. இதுதான் இன்றை பெந்தேகோஸ்தே சபையின் நிலை. பாஸ்டர்.ராஜாமணி அவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும் என்று பவுல் 2 கொரி 13:1ஐ சுட்டிக்காட்டி வக்கீல்கள் தங்கள் வாத திறமையால் நம்ப வைப்பதுபோல் எழுதியுள்ளார். மேலே குறிப்பிட்ட வசனத்துக்கும், அந்நியபாஷைக்கும் சம்பந்தமேது? மேலும் அவரின் கூற்றின்படி பார்த்தால் இவர் சுட்டிக்காட்டிய 3 சாட்சிகளில் இவரின் முதல் பொய் சாட்சியே அடிப்பட்டு போயிற்றே?

எருசலேமில் சீஷர்கள் பேசியது வெவ்வேறு பாஷைகள் என்றும் அது பரிசுத்த ஆவியனாவரின் நிறைவுக்கு அடையாளம் அல்ல அது வரமாக அருளப்பட்டது என்றும் வசன தெளிவோடு எழுதப்பட்டுள்ளதே? பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் அப் 2ம் அதிகாரத்தில் சீஷர்கள் பற்பல பாஷைகளில் பேசினபோது அந்த இடத்தில் அந்த பாஷையை அறிந்தவர்கள் எவருமே இல்லை என்று இந்த வேத பண்டிதருக்கு அப்படி கூற எப்படி தைரியம் வந்தது?

AOG சபையில் உள்ளவர்கள் சபை பாஸ்டர்மார்கள் அத்தனை பேர்களுக்கும், சவால்விட்டு கூறினேன். பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் கூறியது பொய்யா? இல்லையா? என்று கேட்டேன். இதுவரை ஒரு பாஸ்டர்களும் பதில் கூறவில்லை. பதில் கூறமுடியாது. அவர்கள் யாவரும் வெட்கி தலைகுனிந்து அமைதியானார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய தென்னிந்திய பாகங்களிலிருந்து யாரும் நான் எழுதி கேட்டதற்கு பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்கவும் முடியாது.

அவர் அப்படி எழுதியது அந்நியபாஷைக்கு அர்த்தம் கேட்கக்கூடாது என்ற கருத்தை சபை மக்களிடம் திணிக்க அவர் பேசிய துணிகர பொய் ஆகும். பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் விஷயத்தில் இப்படி பொய் என்ற வார்த்தையை உபயோகித்து எழுதி விட்டோமே என்று ஆரம்பத்தில் மனவேதனைடையந்தேன். ஆனால் எனக்குள் உள்ள ஆவியானவர் தெளிவாக என்னை உணர்த்தியதால் குற்றமற்ற மனசாட்சியுடன் அவர் கூறியதை கண்டித்து எழுதினேன். இப்போதும் கூறுகிறேன். வேதத்தில் இல்லாத அந்நியபாஷைக்கு அவர்கள் ஏன் இந்த அளவு வக்கீல்களைபோல வக்காலத்து வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.