வேதாகம வரலாறுகள்

பிலிப்பியர்

ஆசிரியர்
பவுல் இதை எழுதினதாகக் கூறுகிறார் (1: 1) மற்றும் மொழி, பாணி, மற்றும் வரலாற்று உண்மைகளின் அனைத்து உள் குணாதிசயங்கள் ஆகியவை இதை உறுதிப்படுத்துகிறது. ஆரம்பகால சபை, பவுல் ஆசிரியர் என்றும் அதிகாரம் பற்றியும் தொடர்ந்து பேசுகிறது. பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்துகிறது (2: 1-11). பிலிப்பியர் நிருபத்தை எழுதும்போது பவுல் கைதியாக இருந்தபோதிலும் அவர் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தார். பிலிப்பியர் நிருபம் நமக்கு, துன்பங்கள் மற்றும் பாடுகளுக்கு நடுவில் இருந்தாலும் கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக இருக்க முடியுமென கற்றுக்கொடுக்கிறது. நாம் கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் நம்பிக்கையின் காரணமாக நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 61 க்கு இடையில் எழுதப்பட்டது.
ரோமாபுரியில் சிறைச்சாலையில் இருக்கும்போது பவுல் பிலிப்பியர் நிருபத்தை எழுதினார் (அப்போஸ்தலர் 28: 30). பிலிப்பியர் சபையிலிருந்து கிடைத்த நிதி உதவியுடன் ரோமில் இருந்த பவுலிடம் வந்த எப்பாப்பிரோதீத்துவிடம் பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதம் கொடுக்கப்பட்டது. (பிலிப்பியர் 2: 25; 4: 18). ஆனால் ரோமிலிருந்த சமயத்தில் எப்பாப்பிரோதீத்து நோயுற்றார், அது அவருடைய பயணத்தைத் தாமதமாகி, கடிதத்தின் வழங்குவதை (2: 26-27) தாமதப்படுத்தியது.
 
யாருக்காக எழுதப்பட்டது
மக்கெதோனியா மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிலிப்பி நகரில் உள்ள கிறிஸ்தவ சபை.
 
எழுதப்பட்ட நோக்கம்
பவுல் தான் சிறைச்சாலையில் இருந்தபோது காரியங்கள் எப்படி இருந்தது என்பதையும் (1: 12-26), அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்தது மற்றும் அவருடைய விடுதலை ஆகியவற்றைக்குறித்து சபையானது அறியும்படி பவுல் விரும்பினார். (பிலி 2: 23-24). சபையில் சில குழப்பம் மற்றும் பிரிவு இருப்பதாகத் காணப்பட்டது, எனவே அப்போஸ்தலன், ஒற்றுமையை நோக்கிய ஒரு கண்ணோட்டத்தில் மனத்தாழ்மையை ஊக்குவிக்க எழுதுகிறார் (2: 1-18; 4: 2-3). போதக இறையியல் அறிஞரான பவுல், (3: 2-3) எதிர்மறையான கள்ள உபதேசங்களையும் மற்றும் சில குறிப்பிட்ட தவறான போதகர்களின் விளைவுகளைத் தலைகீழாக்குமாறு எழுதுகிறார். பவுல், எப்பாபிரோதீத்துவின் ஆரோக்கியத்தையும் திட்டங்களையும் பற்றி அறிக்கை கொடுக்க தீமோத்தேயுவை உற்சாகப்படுத்த எழுதினார் (2: 19-30) மற்றும் பவுல் தன்னைக் குறித்த சபையின் அக்கறைக்காகவும், அவர்கள் கொடுத்த நன்கொடைகள் (4: 10-20) ஆகியவற்றிற்காகவும் நன்றி தெரிவிக்க பவுல் எழுதினார்.
 
மையக் கருத்து
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
 
பொருளடக்கம்
1. வணக்கவுரை — 1:1, 2
2. பவுலின் சூழ்நிலை மற்றும் சபையை உற்சாகப்படுத்துதல் — 1:3-2:30
3. தவறான போதனைக்கு எதிரான எச்சரிக்கைகள் — 3:1-4:1
4. இறுதி அறிவுரைகள் — 4:2-9
5. நன்றி சொல்லுதல் — 4:10-20
6. இறுதி வாழ்த்துக்கள் — 4:21-23

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.