வேதாகம வரலாறுகள்

எபேசியர்

ஆசிரியர்
எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபத்தின் ஆசிரியர் அப்போஸ்தலனாகிய பவுல் என்று எபேசியர் 1:1 கூறுகிறது. எபேசியர் நிருபமானது திருச்சபையின் ஆரம்ப நாட்களில் பவுல் எழுதியதாகக் கருதப்பட்டது, மேலும் அப்போஸ்தல பிதாக்கள்-ரோமாபுரியின் கிளெமென்ட், இக்னேசியஸ், ஹெர்மஸ் மற்றும் பாலிகார்ப் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டது.
 
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60 காலகட்டங்களில் எழுதப்பட்டது.
ரோம சிறையில் இருந்தபோது பவுல் அதை எழுதியிருக்கலாம்.
 
யாருக்காக எழுதப்பட்டது
முதன்மை பெறுநராக எபேசிய சபை இருந்தது. அவரது உத்தேசிக்கப்பட்ட வாசகர்கள் புறஜாதிகளே என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார். எபேசியர் 2:11-13 ல், தன்னுடைய வாசகர்கள் “பிறப்பால் புறஜாதிகள்” (2:11) என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார், எனவே, யூதர்கள் “வாக்குத்தத்த உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாக” (2:12) கருதுகிறார்கள். இதேபோல், எபிரெயர் 3:1 ல் பவுல் தன் உத்தேசிக்கப்பட்ட வாசகர்களிடம், “புறஜாதிகளாகிய உங்கள் நிமித்தம் தான் ஒரு கைதி” என்று கூறுகிறார்.
 
எழுதப்பட்ட நோக்கம்
கிறிஸ்துவின் முதிர்ச்சிக்கு ஒப்பாக முதிர்ச்சியடைய விரும்பும் அனைவருமே இந்த நிருபத்தைப் பெறுவார்கள் என்று பவுல் எண்ணினார். எபேசியரின் நிருபத்தில் தேவனுடைய உண்மையான பிள்ளைகளாக வளர தேவையான ஒழுக்கம் இருக்கிறது. மேலும், எபேசியர் நிருபத்தைக்குறித்த ஒரு ஆய்வு, ஒரு விசுவாசியை உறுதிப்படுத்த மற்றும் பாதுகாக்க உதவும், அதன்மூலம் அந்த நபர் தேவன் கொடுத்த அழைப்பு மற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். எபேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு திருச்சபையின் தன்மையையும் நோக்கத்தையும் விளக்குவதன் மூலம் கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர்கள் பலப்படுவதற்கு பவுல் நோக்கம் கொண்டிருந்தார். பவுல் எபேசிய நிருபத்தில் ஏராளமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், முந்தைய மதங்களில் பயன்படுத்தப்பட்ட, தலை-உடல், முழுமை, இரகசியம், காலம், அதிபதி, முதலியவை அவருடைய புறஜாதி கிறிஸ்தவ வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். கிறிஸ்துவானவர், தெய்வங்கள் என்பவைகள் மற்றும் ஆவிக்குரிய உயிரினங்களுக்கும் மேலாக உயர்ந்தவராகவும் மேலானவராகவும் இருக்கிறார் என்பதை அவரது வாசகர்களிடம் நிரூபிக்க அவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார்.
 
மையக் கருத்து
கிறிஸ்துவில் ஆசீர்வாதம்
 
பொருளடக்கம்
1. சரீரமான சபை அங்கத்தினர்களின் சத்தியங்கள் — 1:1-3:21
2. சரீரமான சபை அங்கத்தினர்களின் கடமைகள் — 4:1-6:24

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.