வேதாகம வரலாறுகள்

கலாத்தியர்

தலைப்பு: 

கலாத்தியர் என்ற பெயர் ஆசியா கண்டத்தில் இருக்கும் ஒருபகுதியின் பெயர் – அங்கே இருக்கும் சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபம் இது. ஒன்றுக்கும் மேலான பட்டணங்களில் இருக்கும் சபைகளுக்கு பவுல் எழுதின ஒரே ஒரு நிருபம் இது (1:2; 3:1; 1 கொரி.16:1).

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி 

கலாத்தியர் நிருபத்தை பவுல் தானே எழுதினேன் (1:1;5:2) என்று உரிமை பாராட்டுவதை கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. கலாத்தியாவிற்கு மிக அருகில் இருந்த சிசிலியா மாகாணத்தின் எல்லைக்குள் இருந்த தர்சு பட்டணத்தில் தான் பவுல் பிறந்தார். பிரபலமான கமாலியேலிடம் அமர்ந்து பழைய ஏற்பாட்டின் வேதாகம வாக்கியங்களில் முற்றிலுமான பயிற்சிபெற்றவர். ரபீமார்களின் பாரம்பரியத்தை எருசலேமில் இருந்து கற்றவர் (அப்.22:3). பரிசேயர்களின் தீவிர மரபுவழிதனை பின்பற்றுபவர்களில் ஓர் அங்கத்தினர் (அப்.23:6), முதல் நூற்றாண்டில் உதயமாகிய யூதமதத்தின் ஜொலிக்கும் நட்சத்திரமாக பவுல் திகழ்ந்தார் (1:14; பிலெமோன் 3:5,6). 

எருசலேமில் இருந்து தமஸ்குவிற்கு கிறிஸ்தவர்களை துன்புறுத்துவதற்காக சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு உயிர்த்தெழுந்த மகிமையடைந்த இயேசு தரிசனமானதினால், பவுலின் வாழ்க்கைப் பாதை திடீரென்று திடுக்கிட வைக்கும் மாற்றத்திற்கு உள்ளானது. அந்த வியத்தகு சந்திப்பு கிறிஸ்தவத்தை அழிக்கும்படி எழுந்த முதன்மை துன்புறுத்துபவரை எல்லோரைக்காட்டிலும் மிகப்பெரிய மிஷனரியாக மாற்றியது. பவுலின் மூன்று மிஷினரி கடற்பயணங்கள் மற்றும் அவர் ரோமாபுரிக்கு சென்று வந்தது, அதுவரை கிறிஸ்தவ விசுவாசம் பாலஸ்தீன தேசத்தில் சில யூத விசுவாசிகள் சிறிய கூட்டத்தில் மட்டும் இருந்தது என்பதனை பேரரசு முழுவதும் பரந்த நிகழ்வாக மாற்றினது. பவுல் புறஜாதியாருக்கும் உடன் ஊழியர்களுக்குமாக என 13 நிருபங்களை தெய்வீக ஊக்கம் பெற்று எழுதியுள்ளார். அதில் ஒன்று கலாத்தியருக்கு எழுதின நிருபம். 

இரண்டாம் அதிகாரத்தில், அவர் எருசலேம் ஆலோசனை சங்கத்திற்க்கு சென்று வந்ததை குறிப்பிடுகிறார்; எனவே, இந்த நிருபம் அந்த சம்பவத்திற்குப் பின் எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஆனேக அறிஞர்கள் சங்கம் கூடிய காலம் கி.பி.49 எனகின்றனர். எனவே கலாத்தியர் நிருபம் எழுதப்பப்ட்டது அந்நாட்களுக்கு சற்றே காலம் கடந்து எழுதப்பட்டு இருக்க வேண்டும். 

பின்னணி மற்றும் அமைப்பு

பவுலின் நாட்களில், கலாத்தியா என்ற பட்டணத்தின் பெயர் தெளிவான இரண்டு அர்த்தங்களை கொண்டிருந்தது. கண்டிப்பான பூர்வ இனத்திற்கு உரிய அர்த்தம் சின்ன ஆசியா பகுதியில் கலாத்தியர்கள் வாழ்ந்த பகுதியை குறித்தது. அவர்கள் செல்டிக் இனத்தவர் (நாகரீக ஃப்ரான்ஸ்) பகுதியில் இருந்து குடிபெயர்ந்து இந்த இடத்தில் மூன்றாம் நூற்றாண்டில் குடியேறி இருந்தனர். இரண்டாவது, ரோமர்கள் கலாத்தியரை கி.மு.189-ல் மேற்கொண்டு இருந்தனர். ஆனால், கி.பி 25 வரை அவர்கள் ஒரளவிற்கு சுதந்திரம் தந்திருந்தனர். எப்பொழுது கலாத்தியா அருகில் இருந்த சில நிலபரப்புகளையும் (லிக்கவோனியாவின் பகுதி, பிரிக்கியா மற்றும் பிஸிதியா) சேர்த்துக்கொண்டதோ, அப்போது ரோம மாகாணமாக மாறினது. அரசியல் ரீதியில், கலாத்தியா என்றாலே பூர்வ குடிமக்கள் குடியிருந்த பகுதி மட்டும் அல்லாமல், ரோம மாகாண பரப்பு முழுவதையும் குறித்தது. 

பவுல் கலாத்தியாவின் தெற்கு பகுதிகள் - அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா மற்றும் தெர்பா (அப்.13:14-14:23) ஆகிய பட்டணங்களில் சபைகளை ஸ்தாபித்திருந்தார். இந்த பட்டணங்கள் ரோம மாகாண கலாத்திய எல்லைப் பகுதிக்குள் இருந்த போதிலும், பூர்வ கலாத்திய மக்கள் குடியிருந்த பிரதேசமாக இல்லை. ஜனத்தொகை குறைவாக இருந்த கலாத்தியாவின் வடக்கு பகுதியில் பவுல் சபைகளை ஸ்தாபித்ததற்கான குறிப்பு எங்கும் இல்லை. கலாத்தியா என்ற வார்த்தை இந்த இரண்டு பகுதிகளையும் குறிப்பதால் கலாத்தியாவின் நிருபத்தை யார் பெற்றார்கள் என்று தீர்மானிப்பது கடினமாக உள்ளது. சிலர் கண்டிப்பாக வடக்கு பகுதியில் இருந்த கவுல் என்றபூர்வ குடியில் வழிவந்த கலாத்தியருக்குத் தான் பவுல் நிருபத்தை எழுதினார் என்கின்றனர். பவுல் இரண்டு முறை பூர்வ குடி வாழ்மக்கள் பகுதியின் விளிம்பை இரண்டு முறை தொட்டிருப்பதற்கான ஆதாரம் இருக்கிறது (அப்.16:6; 18:23). அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் அவர் வடக்கு பகுதிகளில் சபையை ஸ்தாபித்தார் என்றோ சுவிசேஷ ஊழியத்தை மேற்கொண்டார் என்றோ குறிப்பிடவில்லை.  

அப்போஸ்தலர் நடபடிகளும், கலாத்தியா நிருபமும் வடக்குபகுதி (பூர்வகுடி மக்கள் வசித்த கலாத்தியா) பட்டணங்கள் அல்லது ஜனங்களை குறித்து குறிப்பிடாததால், நாம் கலாத்தியாவின் தென்பகுதியில் இருந்த ரோம மாகாண சபை மக்களுக்கு தான் பவுல் இந்த நிருபத்தை எழுதினார் என்ற முடிவுக்கு வர ஏது உண்டாகிறது. பிசீதியா நாட்டில் உள்ள அந்தியோகியாவில் பவுல் சபையை ஸ்தாபித்ததை 13:14-50 வசனங்களில் காண்கிறோம். இக்கோனியா (13:51-14:7; 16:2) லிஸ்தீரா (14:8-19; 16:2), மற்றும் தெர்பி (14:20,21;16:1); எருசலேம் ஆலோசனைசங்கத்திற்கு முன்பதாகவே பவுல் எழுதும் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன (2:5), இதற்கு தெற்கு பகுதியில் இருந்த சபைகள் தான் பொருந்தமானவைகளாக இருக்கின்றன. அதாவது பேரவை கூடுவதற்கு முன் பவுல் மேற்கொண்ட முதல் மிஷினர் பயணத்தின் போது அவை ஸ்தாபிக்கப்பட்டன. எருசலேம் பேரவைக்கு முன் பவுல் வடக்கு பகுதி (பூர்வ இன) கலாத்தியரை சென்று சந்திக்கவில்லை (அப்.16:6).

விசுவாசத்தினால் நீதிமான்களாகிறோம் என்ற புதிய ஏற்பாட்டின் மைய்ய கருத்தை எதிர்க்க எழும்பிய யூதப்படுத்தும் கள்ள போதகர்களுக்கு பதில் அளிக்கவே கலாத்தியர் நிருபத்தை பவுல் எழுதினார். எருசலேம் ஆலோசனை சங்கத்தின் வெளிப்படையான பிரகடனத்தை புறக்கணித்து, அப்.15:23-29 புறஜாதியாருக்கு தவறுதலான போதனை அதாவது யூத மதத்திற்கு முதலில் மாறவேண்டும் மற்றும் மோசே கற்பித்த பிரமாணங்களையெல்லாம் அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதற்கு முன் கடைபிடிக்க வேண்டும் என தவறாக உபதேசித்தனர் ( 1:7; 5:2-12; 6:12, 13). பெரும் பழிக்கு ஆளாக்குகிற மேற்படி வேத புரட்டிற்கு கலிலேயர்கள் திறந்த மனதுடையவர்களாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை பாதுகாக்க பவுல் இந்த நிருபத்தை எழுதுகிறார். மேலும், இந்த அடிப்படையான சத்தியத்தை கைவிடுதலினால் மிக கடுமையான விளைவை சந்திப்பீர்கள் என்று கலிலேயா சபைகளை எச்சரிக்கிறார். பவுல் எழுதின நிருபங்களிலேயே, வாசிப்போரை வாழ்த்தும் வாழ்த்துதல் இல்லாமல் முடியும் ஒரே நிருபம் கலாத்தியருக்கு எழுதின நிருபம். வேண்டுமென்றே வாழ்த்துதலை தவிர்த்து இந்த நிருபம் எழுதப்ப்ட்டிருப்பது விசுவாசத்தினால் நீதிமான்களாகிறோம் என்ற அத்தியாவசியமான உபதேசத்திற்கு விரோதமாக எழுந்த உபதேச வேற்றுமையை எதிர்கொண்டு பவுல் இந்த சத்தியத்தை பாதுகாப்பதை எவ்வளவு அவசரமாக உணர்ந்தார் என்பது தெரிகிறது. 

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

பவுலின் பின்னணி பற்றிய வராலாற்று தகவல்கள் அனேகமானவற்றை கலாத்தியர் நிருபம் தருகிறது (அதிகாரங்கள் 1,2). அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலும் கூட குறிப்பிடாத தகவல்கள் பவுல் அரபி தேச்த்தில் 3 வருடங்கள் இருந்த தகவல் (கலா.1:17,18) எருசலேம் பேரவைக்கு சென்றது (2:1-10); பேதுருவை சந்தித்தல் (2:11-21) போன்றவை கலாத்தியர் நிருபத்தில் காண்கிறோம். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், கலாத்தியர் நிருபத்தின் மைய்ய கருத்து ரோமருக்கு எழுதின நிருபத்தைப் போலவே – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்பதே. பவுல் இந்த உபதேசத்தை (சுவிசேஷத்திற்கு இருதயம் போன்றது இந்த சத்தியம்) – இறையியல் ரீதியாகவும் (அதிகாரங்கள் 3,4) நடைமுறை செயல்பாடுகளிலும் (அதிகாரங்கள் 5,6) பாதுகாக்கிறார். 

நான் அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டவன் என்ற உரிமையையும் பாதுகாத்துக் கொள்கிறார் (அதிகாரங்கள் 1,2) கொரிந்து பட்டணத்தில் ஏற்பட்டது போலவே, பவுலின் நம்பகத்தன்மைய தரம் தாழ்த்தி, கலாத்தியா பட்டணத்திலும் முரண்பாடான வேத புரட்டுகளை கூறும் கள்ள உபதேசியர்கள் எழும்பி இருந்தனர். கலாத்தியர் நிருபத்தின் - முக்கிய கருப்பொருளுக்கும் ரோமருக்கு எழுதின நிருபத்தின் கருப்பொருளுக்கும் அனேக ஒற்றுமைகள் காணப்படுகிறது – உதாரணமாக, நியாயப்பிரமாண கிரியைகளை கடைபிடிப்பது ஒருவரை இரட்சிக்க திறனற்றது (2:16; ரோமர் 3:20); ஒரு விசுவாசி நியாயப்பிரமாணத்திற்கு மரித்தவன் (2:19; ரோமர் 7:4); கிறிஸ்துவுடன் விசுவாசி சிலுவையில் அறையப்பட்டவன் (2:20; ரோமர் 6:6); ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமான் ஆனார் (3:6 ரொமர் 4:3); விசுவாசிகள் ஆபிரகாமின் ஆவிக்குரிய பிள்ளைகள் (3:7; ரோமர்:4:10,11) அதின் நிமித்தம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் (3:9; ரோமர் 4:23,24); நியாயப்பிரமாணம் இரட்சிப்பை கொண்டுவராமல், தேவ கோபாக்கினையை கொண்டு வருகிறது (3:10; ரோமர்:4:15); நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான் (3:11; ரோமர் 1:17); பாவம் சர்வலோகத்திற்கும் பொதுவானது (3:22; ரோமர் 11:32); விசுவாசிகள் கிறிஸ்துவுடன் ஆவிக்குரிய ஞானஸ்நானத்தினால் ஒன்றாக இணைந்துள்ளனர் (3:27; ரோமர் 6:3); விசுவாசிகள் தேவனுடைய ஆவிக்குரிய குடும்பத்தில் சுவிகார புத்திரராக இருக்கின்றனர் (4:5-7; ரோமர் 8:14-17); அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது (5:14; ரோமர் 13:8-10); ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வதின் முக்கியத்துவம் (5:16; ரோமர் 8:4); மாம்சமும் ஆவியும் எதிராக யுத்தத்தில் ஈடுபடுகின்றன (5:17; ரோமர் 7:23,25); விசுவாசிகள் ஒருவருக்கொருவர் மற்றவருடைய பாரங்களை சுமப்பதின் முக்கியத்துவம் (6:2; ரோமர் 15:1)

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

பவுல் எருசலேமுக்கு செல்வதை குறித்தும் தொடர்ந்து பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மூவரையும் சந்திக்க உள்ளதாக முதலில் விவரிக்கிறார் (2:1-10). இந்த உரையில் ஒரு கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது – இந்த மேற்கொண்ட பிரயாணம் அப்போஸ்தலர் ஆலோசன சங்கத்தினை பார்வையிடவா (அப்.15) அல்லது எருசலேமில் பஞ்சத்தின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிக்கும்படி அவர் மேற்கொண்ட முந்தைய பயணமா, எதை குறிக்கிறது (அப்.11:27-30)? இரண்டாவது, ஞானஸ்நான மீள் உருவாக்கம் என்னும் தவறான போதனையை (இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்ற தவறான உபதேசம்) போதிப்பவர்கள் ஆதாரமாக வசனம் 3:27ஐ எடுத்துக்கொள்கிறார்கள். மூன்றாவது, வேதாகமம் போதிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் வித்தியாசமான பணியை எதிர்ப்பவர்கள் தங்கள் கருத்தை ஆதரிக்க,  3:28 போதிக்கும் ஆவிக்குரிய சமம் என்னும் சத்தியம் பாரம்பரிய அதிகாரம் மற்றும் அடிபணிந்து இருத்தல் என்பதற்கு இணக்கமாக இல்லை என்கின்றனர்.  நான்காவது, நித்திய பாதுகாப்பு  இருக்கிறது என்னும் உபதேசத்தை உதாசீனம் செய்பவர்கள் விவாதத்தில் “நீ கிருபையிலிருந்து விழுந்தாய்” (5:4) என்னும் வசனத்தை முன்வைத்து இது தான் விழுந்து போன விசுவாசிகளின் நிலைமையை விவரிக்கின்றது என்கின்றனர். ஐந்தாவது, ”என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள் என்று கலா.6-11ல் பவுல் எழுதுவது முழுநிருபத்தையும் குறிக்கிறதா அல்லது இறுதியில் சுருக்கி அவர் எழுதியுள்ள பகுதியை மட்டும் குறிக்கிறதா என்று கருத்து வேறுபாடு இருக்கிறது. இறுதியாக, 6:16-ல் ”தேவனுடைய இஸ்ரவேலருக்கும்” என்று பவுல் எழுதியவுடன் – பவுல் இஸ்ரவேல் மற்றும் சபை இந்த இரண்டிற்கும் நடுவில் இருந்த பிரிவை அழித்துவிட்டார் என்று உரிமை கொண்டாடுகின்றனர். 

சுருக்கம்

I. தனிநபருக்குரியது : நியாயதீர்ப்பை பிரசங்கிப்பவர் (1:1-2:21)
அ. அப்போஸ்தலரின் சிட்சை (1:12 -2:4)
ஆ. அப்போஸ்தலரின் நம்பிக்கை (2:11-21)
 
II. உபதேசத்துக்கு உரியவை: நியாயம்தீர்த்தலின் அடிப்படைகோட்பாடுகள் (3:1-4:31)
அ. கலாத்தியர்களின் அனுபவம் (3:1-5)
ஆ. ஆபிரகாமின் ஆசீர்வாதம் (3:6-9)
இ. நியாயப்பிரமாணத்தின் சாபம் (3:10-14)
ஈ. உடன்படிக்கையின் வாக்குதத்தம் (3:15-18)
உ. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் (3:19-29)
ஊ. விசுவாசிகளின் குமார்த்துவம் (4:1-7)
எ. சடங்காச்சாரங்களின் பலன் இல்லாத தன்மை (4:8-20)
ஏ. வேதாகம வாக்கியங்களில் இருந்து உதாரணம் (5:1-6:18)
 
III. நடைமுறையில்: நியாயம் தீர்க்கபடுதலினால் உண்டாகும் சிலாக்கியங்கள் (5:1-6:18)
அ. சடங்காச்சாரங்களில் இருந்து விடுதலை (5:1-6)
ஆ. சட்டவாதிகளிடம் இருந்து விடுதலை (5:7-12)
இ. ஆவியில் விடுதலை (5:13-26)
ஈ. ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை (6:1-10)
உ. முடிவுரை (6:11-18)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.