வேதாகம வரலாறுகள்

ரோமாபுரியாருக்கு எழுதின நிருபம்

தலைப்பு:

ரோம சாம்ராஜ்யத்தின் தலைநகர் (1:7) ரோமாபுரியில் இருந்த சபைக்கு எழுதப்பட்டதில் இருந்து இந்த நிருபத்தின் பெயர் வருகிறது.  

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

ரோமருக்கு எழுதின நிருபம் பவுலால் எழுதப்படவில்லை என்பதை ஒருவரும் வாக்குவாதம் செய்யவில்லை. சவுல் என்பது பவுலின் முதற்பெயர்; பவுல் என்பது அவரது கிரேக்க பெயர். பழையஏற்பாட்டில் நாம் காணும் சவுல் பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்தவராய் இருந்தது போல பவுலும் பென்யமீன் கோத்திரத்தார் ஆவார் (பிலி 3:5). பவுல் ரோம குடிமகனாகவும் இருந்தார் (அப்.16:37; 22:25). பவுல் ஏறக்குறைய கிறிஸ்து பிறந்த நாட்களில், ஆசியாவின் சிலிசியாவில் (அப்.21:39) இருந்த முக்கியபட்டணம் தர்சுவில் பிறந்தவர் (அப் 9:11). சிலிசியா தற்போதைய துருக்கியில் இருக்கிறது. கமாலியேல் என்னும் மிகவும் போற்றத்தகுந்த ரபீயின் (அப். 22:3) பாதத்தில் மாணவனாக அமர்ந்து தன் ஆரம்ப நாட்களில் கல்வி கற்றவர். அவருடைய தகப்பனைப் போல பவுல் ஒரு பரிசேயர் – மிக கடுமையாக யூத பாரம்பரியத்தை பின்பற்றியவர்களின் வழிவந்தவர் (பிலி.3:5). 

கி.பி. 33-34-ல் தமஸ்குவிற்கு செல்லும் வழியில் அற்புதமாக சவுல், பவுலாக மனம் மாறினார். ரோம சாம்ராஜ்யம் முழுவதும் கிறிஸ்தவம் வளர்வதற்கு காரணமாக இருந்தவர். அவர் ஒருகாலத்தில் அழிக்க வேண்டும் (அப்.26:9) என்றிருந்த சுவிசேஷத்தை மத்தியதரைக்கடல் பகுதிகளில் பிரசங்கிக்க சோர்வடையாமல் மூன்று கடல்வழி பிரயாணங்களை மேற்கொண்டவர். எருசலேம் ஆதித் திருச்சபையில் இருந்த தேவையுற்றவர்களுக்காக் காணிக்கையை சேகரித்துக் கொண்டு - திரும்பிவந்தவரை எருசலேமில் இருந்த சில யூதர்கள் தவறாக குற்றம் சாட்டினர் (அப்.21:27-29), ஒரு கூட்டத்தார் காட்டுமிராண்டித்தனமாக பவுலை அடித்தனர் (அப்.21:30,31). மேலும் ரோமர்களால் கைது செய்யப்பட்டார். ரோம ஆளுநர்கள் பேலிக்ஸ், பெஸ்து, ஏரோது மற்றும் அகிரிப்பாவும் கூட பவுலில் எந்தவொரு குற்றைத்தையும் காணவில்லை. யூத தலைவர்கள் வற்புறுத்தலால் ரோம அரசு பவுலை கைதியாக வைத்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு, அப்போஸ்தலர் பவுல் தான் ரோம குடிமகன் என்ற உரிமையில் இராயனுக்கு அபயமிட்டு அவருக்கு முன் தனது உரிமையை எடுத்துரைத்தார். கப்பலின் முன்னணியம் சேதமடைந்து, இரண்டு வாரம் கடுங்காற்றில் அகப்பட்டுக்கொண்டு, மிக வேதனையுடன் ரோமாபுரி சென்றடைந்தார் (அப்.27,28). இறுதியில் சில நாட்கள் ஊழியம் செய்ய விடுவிக்கப்பட்டார், மீண்டும் கைதுசெய்தனர். ரோமாபுரியில் கி.பி.65-67-ல் இரத்தசாட்சியாக மரித்தார் (2தீமோ.4:6). பவுல் சரீரபிரகாரமாக பலவீனம் உள்ளவராக இருந்த போதிலும் (2கொ.10:10; கலா.4:14) - பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் உள்ளான மனுஷனில் பெலனைப் பெற்றிருந்தார் (பிலி.4:13). அவருடைய அன்றாட தேவைகள் அனைத்தும் தேவனுடைய கிருபையால் பூர்த்திசெய்யப்பட்டது (2கொரி.12:9,10). பரிசுத்த ஆவியானவரே இந்த கிறிஸ்துவின் உன்னதமான ஊழியர் தன் ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உதவினார் (2தீமோ.4:7).

பவுல் ரோமர் நிருபத்தை கொரிந்து பட்டணத்தில் இருந்தபோது எழுதினார். ரோமர் 16:1ல், பெபேயாளை குறிப்பிட்டிருக்கிறார். (கெங்கிரேயா கொரிந்து பட்டணத்தின் துறைமுகம்) 16:23ல் காயு, ஏரஸ்துவை குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் எல்லாருமே கொரிந்து பட்டணத்தைச் சேர்ந்தவர்கள். இது பவுல் தனது மூன்றாவது பிரயாணத்தின் இறுதி நாட்களில் (கி.பி.56) எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. கொரிந்துவில் இருந்து எருசலேம் சபையில் இருந்த ஏழைகளுக்கு காணிக்கையைப் பெற்றுக் கொண்டு இஸ்ரவேலுக்கு போக புறப்படுகிறார் (ரோமர் 15:25). பெயேயாளிடம் நிருபத்தை ரோம விசுவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது (16:1,2).

பின்னணி மற்றும் அமைப்பு

ரோம சாம்ராஜ்யத்தில் ரோமாபுரி தலைநகராகவும் முக்கிய நகரமாகவும் இருந்தது. கி.பி. 753-ல் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் புதியஏற்பாட்டு காலம் வரை வேதாகம வாக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மத்தியதரைக்கடலில் இருந்து 15 மைல் தொலைவில், டைபர் ஆற்றின் கரையில் ரோமாபுரி அமைந்திருந்தது. சுமார் 150 மைல்கள் தொலைவில் இருந்த புட்டோலி துறைமுகம் தான் முக்கிய துறைமுகமாக ஆஸ்டியா செயற்கை துறைமுகம் அமைக்கப்படும் வரை இருந்தது. பவுலின் காலத்தில் பட்டணத்தில் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமைகளாக இருந்தனர். ரோமாபுரியில் பெரிய கட்டடங்கள், பேரரசரின் அரண்மனை, மேக்ஸிமஸ் சர்க்கஸ் மன்றம் போன்றவை இருந்தன. ஆனால் அடிமைகள் அதிகமானோர் சேரிகளில்  வாழ்ந்ததினால் அதன் அழகு சிதைந்தது. பாரம்பரியத்தின்படி, நீரோ மன்னன் காலத்தில் ரோமாபுரிக்கு வெளியில் இருந்த ஆஸ்ட்ரியன் பெருவழியில் பவுல் இரத்த சாட்சியாக கொல்லப்பட்டார். பெந்தெகோஸ்தே நாளில் மனம் மாறினவர்களில் சிலர் ரோமாபுரியில் சபையை உருவாக்கியிருக்கலாம் (அப்போஸ்தலர் 2:10). பவுல் ரோமாபுரி சபைக்குச் செல்ல யோசனையாக இருந்தார், ஆனால் தடையுண்டாயிற்று என எழுதுகிறார் ( ரோமர்1:13). தேவன் தமது முன் ஜாக்கிரதையான செயல்பாட்டால், ரோமாபுரிக்கு செல்வதற்கு தடையுண்டான காரணத்தினிமித்தம், தேவ ஆவியானவரின் உந்துதலால் எழுதப்பட்ட இந்த தலைசிறந்த சுவிசேஷ-உபதேச புத்தக படைப்பு நம் கரங்களில் கிடைக்கச் செய்தார்.

அப்போஸ்தலர்களின் அறிவுரைகள் கிடைக்கப்பெறாத விசுவாசிகளுக்கு – கிருபையின் நற்செய்தி சத்தியங்களைக் கற்றுத்தருவதே பிரதான நோக்கமாக கொண்டு ரோமர் நிருபத்தை பவுல் எழுதுகிறார். முன்பு அறிமுகமாகி இராத, தனிப்பட்ட முறையில் அவரை அறியாத சபையை பவுலுக்கு இந்த நிருபம் அறிமுகம் செய்கிறது. விசுவாசிகளில் பக்திவிருத்தி உண்டாக ஏதுவாக, சுவிசேஷத்தை பிரசங்கிக்க (1:15); ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களை நேரில் சென்று காணவேண்டும் என்பதினால் உங்களைக் காண வாஞ்சிக்கிறேன் (ரோமர் 1:11) என்று எழுதினார். இதினால் ரோமாபுரிசபை மக்கள் அவரை உற்சாகப்படுத்தவும் (1:12; 15:32), அவருக்காக ஜெபிக்கவும் (15:30), அவர் திட்டமிட்டிருந்த ஸ்பெயின் நாட்டு ஊழியத்திற்கு உதவி செய்யவும் அவர் நேரில் சந்திப்பது உதவும் என எண்ணினார்.

பவுலின் மற்ற நிருபங்களைப் போன்று (உதாரணமாக, 1, 2 கொரிந்தியர், கலாத்தியர்) உபதேச வேற்றுமைகளை திருத்துவதற்கோ அல்லது தேவபயம் அற்றவர்களாக வாழ்ந்தவர்களை கடிந்து கொள்வதற்கோ இந்த நிருபம் எழுதப்படவில்லை. ரோமாபுரியில் இருந்த சபை உபதேச கருத்துக்களில் தெளிவாக இருந்தனர், ஆனாலும் மற்ற சபைகளில் காணப்பட்டது போல,  இந்த நிருபத்தில் பவுல் எழுதும் சில உபதேசத்துக்கடுத்த மற்றும் நடைமுறைக்கேதுவான அறிவுரைகள் ரோமபுரி சபைக்குத் தேவையானதாக இருந்தது. 

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

ரோமருக்கு எழுதின நிருபம் அதிக உபதேசகருத்துக்களை உள்ளடக்கியது என்பதால் வரலாறு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் அதிகம் இதில் இல்லை. பழைய ஏற்பாட்டில் மிக பிரபலமாக இருந்த நபர்களாகிய ஆபிரகாம் (அத். 4), தாவீது (4:6-8), ஆதாம் (5:12,21), சாராள் (9:9), ரெபெக்காள் (9:10), யாக்கோபு மற்றும் ஈசா (9:10-13), மற்றும் பார்வோன் (9:17) போன்றோரை எடுத்துக்காட்டாக எடுத்து பவுல் பயன்படுத்துகிறார். இஸ்ரவேலின் வரலாற்றையும் கூட 9-11 அதிகாரங்க களில் திருப்பி பார்க்கிறார். 16-ஆம் அதிகாரம், முதல் நூற்றாண்டு சபை மற்றும் அதன் அங்கத்தினர்களின் இயல்பு மற்றும் தன்மையைக் குறித்த துல்லியமான பார்வையை நமக்கு தருகிறது. ரோமருக்கு எழுதின நிருபத்தின் அடிப்படை கருப்பொருள் தேவநீதி. கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டும் கிருபையாக கிடைக்கும் நீதியினால் - தேவன் குற்றம்சாட்டப்பட்ட பாவியை நியாயம் தீர்க்கவில்லை என்பதே இப்புத்தகத்தின் மகிமையான சத்தியம். அதிகாரங்கள் 1-11 இந்த உபதேசத்தின் அடிப்படை இறையியல் சத்தியங்களைப் பற்றி பேசுகிறது. அதிகாரங்கள் 12-16 தனிப்பட்ட விசுவாசிகள் மற்றும் முழுசபையின் வாழ்க்கை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டியவைகளைக் குறித்துப் பேசுகிறது. 

சில இறையியல் கருப்பொருட்களின் தலைப்புக்கள் ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் மூலக்கோட்பாடுகள் (1:8-15); பாவம் நிறைந்த மனுக்குலத்தின் மீது தேவகோபாக்கினை (1:18-32); தெய்வீக நியாயத்தீர்ப்பின் மூலக்கோட்பாடுகள் (2:1-16), அனைவரும் பாவம் செய்தோம் (3:9-20); விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாகிறோம் என்ற அடிப்படை உண்மையை விளக்கி, தற்காக்கிறது (3:21 – 4:25); இரட்சிப்பினால் வரும் பாதுகாப்பு (5:1-11); ஆதாமின் பாவம் இடமாற்றம் ஆனது (5:12-21); பரிசுத்தப்படுத்துதல் (அதிகாரங்கள் 6-8); இறையாட்சியினால் தெரிந்தெடுக்கப்படுதல் (அதிகாரம் 9); இஸ்ரவேல் குறித்த தேவனுடைய திட்டம் (அதிகாரம் 11); ஆவிக்குரிய வரங்கள் மற்றும் நடைமுறையில் தெய்வபக்தி (அதிகாரம் 12); உலகப்பிரகாரமான அரசாங்கத்தில் விசுவாசிக்குரிய பொறுப்பு (அதிகாரம் 13); கிறிஸ்தவ சுதந்திரத்தின் அடிப்படை உண்மைகள். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

புதிய ஏற்பாட்டின் ஒப்பற்ற உபதேசங்களை எடுத்துச்சொல்லும் ரோமருக்கு எழுதின நிருபம் இயற்கையாகவே சில கடினமான பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆதாம் பாவத்தின் முடிவில் தொடர்ச்சி என்ற விளக்கம் (5:12-21) வேதாகமவாக்கியங்களிலெல்லாம் மிகவும் ஆழமான இறையியல் கருத்தினை எடுத்துரைக்கிறது. ஆதாமுடன் மனுக்குலத்தை இணைத்து பார்ப்பது, மற்றும் மனுக்குலத்திற்கு எப்படி அவனுடைய பாவம் மாற்றப்பட்டது என்பது – மனிதர்களின் மத்தியில்  மிகவும் தர்க்கத்திற்கு உட்பட்ட ஒரு கருத்து. ரோமர் 7:7-25ஆம் வசனங்களில் பவுல் தன்னுடைய அனுபவத்தை, விசுவாசியாக அல்லது அவிசுவாசியாக இருந்து எழுதினாரா என்பதில் எழுதிய கருத்து சுயசரிதையின் ஓர் அம்சமாக இல்லாமல் – இலக்கியகூற்றாக இருக்கிறதா என்பதில் வேதாகமத்தை கற்கும் மாணவர்களும் கூட எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளனர். தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உபதேசமும் (8:28-30) தேவன் சகலத்தையும் ஆளுபவர் (9: 6-29) போன்ற சத்தியங்கள் அனேக விசுவாசிகளுக்கு புரியாத குழப்பமாக இருக்கிறது. அதிகாரம் 9-11-ல் நாம் காணும் இஸ்ரவேல் தேசத்திற்கு தெவன் ஒரு எதிர்காலத்தை வைத்திருக்கிறார் என்ற கூற்றினை சிலர் கேள்வி கேட்கின்றனர். கிறிஸ்தவ புரட்சியாளர்கள் என்ற பெயரில் சிலர் கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் தேசத்து அரசாங்கத்திற்கு கீழ்ப்படியவேண்டும் என பவுல் எழுதுவதை (13:1-7) புறக்கணிக்கின்றனர். வேறு சிலர் சர்வாதிகாரவர்க்கதினருக்கு அடிமை போல் கீழ்ப்படியவேண்டும் என்ற கருத்தை தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்துகின்றனர். 

சுருக்கம்    

I. வாழ்த்துதலும் அறிமுகமும் (1:1-15)
 
II. கருப்பொருள்(1:16,17)
 
III ஆக்கினைத்தீர்ப்பு: தேவனுடைய நீதியின் தேவை (1:18-3:20)
அ. அநீதி நிறைந்த புறஜாதியார் (1:18-32)
ஆ. அநீதி நிறைந்த யூதர்கள் (2:1 – 3:8)
இ. அநீதி நிறைந்த மனுக்குலம் (3:9-20)
 
IV. நியாயத்தீர்ப்பு: தேவன் தமது நீதியை வழங்குதல் (3:21-5:21)
அ. நீதியின் ஊற்று (3:21-31)
ஆ. நீதியின் எடுத்துக்காட்டு (4:1-25)
இ. நீதியின் ஆசிர்வாதங்கள் (5:1-11)
ஈ. நீதியின் காரணமாக குற்றம்சுமத்தப்படல் (5:12-21)
 
V. பரிசுத்தமாக்கப்படல்: தேவனுடைய நீதிக்கு செயல்விளக்கம் (6:1 -8:39)
 
VI. மீட்டெடுத்தல்: தேவனுடைய நீதியை இஸ்ரவேல் ஏற்றுக்கொள்ளுதல் (6:1-8:39)
 
VII. பயன்படுத்தல்: தேவனுடைய நீதி எப்படி நடந்து கொள்ளும் ( 12:1-15:13)
 
VIII. முடிவுரை : வாழ்த்துதல் மற்றும் ஆசீர்வாதம் கூறுதல் (15:14 -16:27)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.