வேதாகம வரலாறுகள்

மல்கியா

தலைப்பு:

இப்புத்தகத்தின் தலைப்பு இத்தீர்க்கதரிசன புத்தக ஆசிரியர் மல்கியாவின் பெயரில் இருந்து வருவிக்கப்பட்டது. சிறிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் கடைசியாக  இருக்கும் இந்த புத்தகத்துடன் பழைய ஏற்பாட்டினை வரிசைப்படுத்தலை வரலாற்றின்படியும், தீர்க்கதரிசன ஆகமங்கள்முடிவு எனவும் தேவன் நிறைவு செய்கிறார்.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

இப்பெயரின் அர்த்தம் “என் தூதுவர்” அல்லது ”கர்த்தரின் தூதுவர்” என்று இருக்கிறபடியால், சிலர் இந்த புத்தகம் பெயர் தெரிவிக்காத அல்லது பெயர் அறியப்பட முடியாத ஆசிரியரால் இப்புத்தகம் எழுதப்பட்டு, ஒரு தனிநபரின் பெயராக இருப்பதைக் காட்டிலும் தலைப்பாக இருக்கலாம் என ஆலோசனை தருகின்றனர். இந்தப் பெயர் பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் வேறு எங்கும் காணவில்லை; மேலும், ஆசிரியர் பற்றி வேறு எந்தவொரு தகவலும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், வேறு தீர்க்கதரிசன புத்தகங்கள் வரலாற்றின்படி, முன்னுரையில் எப்படி அதன் ஆசிரியர் அடையாளப்படுத்துகின்றனவோ அவ்விதமே, பழைய ஏற்பாட்டு கடைசி காலத்தில் இஸ்ரவேலில் இருந்த தீர்க்கதரிசன ஆசிரியர் இவர் எனவும், அத்தீர்க்கதரிசியின் பெயர்  மல்கியா என்பதாகவும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேதாகம வாக்கியங்களை  சேகரித்து பாதுகாத்து வந்த  மாபெரும் ஜெப ஆலய சங்கத்தில் இவர் அங்கத்தினராக இருந்தார் என யூத பாரம்பரியம் அடையாளப்படுத்துகிறது. 

நெகேமியா, பெர்சிய தேசத்திற்கு திரும்பிய ஐந்தாம் நூற்றாண்டு கி.மு.432-323ல் இத்தீர்க்கதரிசனம் வெளிப்பட்டிருக்கலாம் என உள்ளிருப்பு ஆதாரங்களைக் காணும்போது தெரிகிறது (நெகே.5:14; 13:6). கி.மு.516ல் கட்டி முடிக்கப்பட்ட (எஸ்றா 6:13-15) இரண்டம் ஆலயத்தில் பலிகள் செலுத்தப்பட்டது (1:7 – 10; 3:8) பல வருடங்கள் கழிந்து இருந்தபடியால் ஆசாரியர்கள் பதட்டமில்லாமல், சீர்கேடு நிறைந்தவர்களாக  மாறியிருந்தனர் (1:6-2:9). மல்கியா 1:8 ஆம் வசனத்தில் “அதிபதி” என்று வருகிறதே, நெகேமியா பெர்சியாவிற்கு திரும்ப சென்றபோது (நெகே.13:6), யூதா தேசத்தில் பெர்சியரின் ஆதிக்கம் அதிகமாகி இருந்த காலத்தைக் குறித்து பேசுகிறது. மல்கியா நியாயப்பிரமாணத்தினை வலியுறுத்தி வருவது (4:4) தற்செயலாக எஸ்றா மற்றும் நெகேமியா கவனம் அதிகம் செலுத்திய கருத்துதுடன் பொருத்தமாக இருக்கின்றது. இதுபோன்று வேறுசில விஷயங்களிலும் பொருந்தி செல்வதை காணலாம். உதாரணமாக, அந்நிய தேசத்து மனைவிகளை மணம் புரிதல் (2:11-15; எஸ்றா 9.10; நெகே.13:23-27), தசமபாகத்தை நிறுத்தி வைத்தல் (3:8-10; நெகே.13:10-14) மற்றும் சமூக அநீதி (2:5; நெகே,5:1-13) போன்றவற்றுடன் பொருந்துகிறது. கி.மு.445ல் நெகேமியா அலங்கத்தைக் கட்டும்படிக்கு எருசலேமுக்கு வந்தார், பின்னர் கி.மு.433ல் பெர்சிய தேச்த்திற்கு திரும்பினார். அந்நாட்களுக்கும் பின்னால் கி.மு.424ல் மல்கியா விவரித்த (நெகே.13:6) பாவங்களை சீர்செய்ய இஸ்ரவேல் தேசத்திற்கு நெகேமியா திரும்ப வந்தார்.  இதனை வைத்து பார்க்கும்போது, மல்கியா நெகேமியா இல்லாத போது எழுதப்பட்டது என்பதுவும், ஆகாய், சகரியா தீர்க்கத்ரிசிகள் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்த வருடங்களில் இருந்து 100 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது எனவும் அறிகிறோம். வெளி.2,3ல் கிறிஸ்து சபைகளின் நிலைமையை குறித்து என்ன நினைக்கிறார் என்று எழுதியிருக்கிறது. அதுபோல, இங்கே தேவன் மல்கியாவின் மூலம் இஸ்ரவேல் தேச்த்தை குறித்து தன்னுடைய எண்ணங்கள் என்ன என்பதை இஸ்ரவேல் தேசத்தாரின் மனதில் பதியவைக்கும்படிக்கு எழுதுகிறார். 

பின்னணி மற்றும் அமைப்பு

பாபிலோனின் இருந்து சிறைகைதிகளாக பிடிக்கப்பட்டுச் சென்றவர்களில் 50,000 பேர் மட்டும் (கி.மு.538-536ல்) யூதா தேசத்திற்கு திரும்பி இருந்தனர். கி.மு.516ல் செருபாபேல் தலைமையில் ஆலயம் திரும்ப கட்டப்பட்டு பலியிடுதல் முறைமைகள் திரும்ப புதுப்பிக்கப்பட்டது. எஸ்றா கி.மு.458லும், அவரைத்தொடர்ந்து நெகேமியா கி.மு.445ல் சொந்த தேசத்திற்கு திரும்பினார்கள். இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பி நூற்றாண்டு காலம் ஆன வேளை தொடர்ந்து யூதர்களின் மத சடங்காச்சாரங்களில் ஈடுபட்டு வந்தது இஸ்ரவேல் ஜனங்கள் மற்றும் ஆசாரியர்கள் - தேவன் அவர்கள் மீது கொண்டிருந்த மகா அன்பினைக் குறித்து இருதயக்கடினம் ஏற்படச்செய்து, தேவனுடைய பிரமாணங்களில் இருந்து வழிவிலகச் செய்தது. இப்படிப்பட்ட தவறுகளை மல்கியா அதட்டி கண்டித்தார், அவர்களின் குற்றத்திற்கு பொறுப்பேற்று, ஜனங்கள் மனம்திரும்ப வேண்டும் என வற்புறுத்தி வந்தார். நெகேமியா பெர்சிய தேசத்தில் இருந்து (கி.மு.424) வில் இரண்டாவது முறை நாடு திரும்பிய போது, ஆலயத்திலும் ஆசாரியர்கள் மத்தியில் காணப்பட்ட – பரிசுத்த ஓய்வுநாள் இளைப்பறுதல் மீறப்படுதல், மணம் புரிந்த யூதபெண்களை விவாகரத்து செய்து விட்டு அந்நிய தேசத்து பெண்களை விவாகம் செய்தல் போன்ற முறைகேடுகளை கடுமையாக கண்டித்தார் (நெகே.13). பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் 2,000 வருடங்கள் கடந்து சென்ற பிறகும், ஆபிரகாமின், தாவீதின் மற்றும் புதிய உடன்படிக்கைகள் எதுவும் அவைகளின் இறுதியான அர்த்தத்தின்படி இன்னும் நிறைவேறவில்லை. இருப்பினும் முக்கியத்துவம் அளித்துச்சொல்லக்கூடிய குறிப்புகள் இஸ்ரவேலின் வரலாற்றில், உதாரணமாக, யோசுவா, தாவீது மற்றும் யோசியா போன்றவ்ரின் வாழ்க்கையில் இருந்தது. இஸ்ரவேலர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி 100 வருடங்கள் ஆன நாட்களில் தேவனுடைய தயவினைப் பெற்றுக் கொள்ள – யூதர்கள் தங்களுக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இழந்து விட்டதாக வெளிப்படையாக காணப்பட்டது. அவர்கள் மீது அசீரியர்கள் மற்றும் பாபிலோனியரின் படையெடுத்து வந்து சிறைபிடித்துச் செல்லும்படிச் செய்த முந்தைய அக்கிரமங்களைக் காட்டிலும் அதிகமான பாவத்தின் ஆழத்திற்குள் யூதர்கள் தற்போது விழுந்து கிடந்தனர். இவைகளுக்கும் மேலாக, மிக அதிகமான நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட மேசியா இன்னும் வரவில்லை; வருவதற்கான தோற்றம் அவர்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்திலும் இல்லை.  

ஆகையால், மல்கியா இரண்டு ஏற்பாடுகளையும் இணைக்கும் தீர்க்கதரிசனத்தை பழைய ஏற்பாட்டு காலத்தில் உரைத்தார். இஸ்ரவேல் தொடர்ந்து பாவத்தில் ஜீவிப்பதினால் இஸ்ரவேல் நியாயம் தீர்க்கப்படும் என்றும், வருங்காலத்தில் ஒருநாள் யூதர்கள் மனம்திரும்புவார்கள், மேசியா வெளிப்படுவார், மேலும் தேவனின் உடன்படிக்கை வாக்குதத்தங்கள் யாவும் நிறைவேறும் என்ற தேவனின் வாக்கினையும் உரைக்கிறார். மல்கியா உரைத்த குற்றச்சாட்டு மட்டுமே யூதர்களின் செவியில் ஒலித்து வந்தது. தெய்வீக தீர்க்கதரிசன வெளிப்பாட்டில் அமைதி உண்டாயிற்று – 400 வருடங்களுக்குப்பின் தான் தேவனிடம் இருந்து செய்தியை கொண்டுவரும் மற்றொரு  தீர்க்கதரிசியின் வார்த்தை உண்டாயிற்று. அது யோவான் ஸ்நானகன் உரைத்த ”மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது!” என்ற வார்த்தை (மத்.3:2). மேசியா வந்து விட்டார்.

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

தேவன் திரும்ப திரும்ப இஸ்ரவேலுடன் தான் கொண்டிருக்கும் உடன்படிக்கையை எடுத்துக்காட்டி நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் (2:4,4,8,10,14; 3:1); அதாவது - இஸ்ரவேலர் தேவனின் அன்பில், தேவன் அவர்களுடன் கொண்டிருக்கும் மணவாளன்-மணவாட்டி என்ற உறவில் பற்றுறுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதை ஆரம்பவரிகளில் இருந்தே நினைவுபடுத்தி வந்தார் (1:2-5). தேவன் அவருடைய ஜனங்களிடத்தில் கொண்டிருந்த அன்பு இப்புத்தகம் முழுவதும் ஊடுருவிச் செல்கிறது. மேசியாவின் வருகை குறித்து வெளிப்பட்ட முந்தைய தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் மேலும் மேசியா வரும்போது, அவர் விடுதலையை கொண்டுவருவார், யுகத்திற்கான ஆசீர்வாதங்கள், கிமு.500-ல் அண்மையில் ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகளால் கொண்டுவரப்பட்ட வாக்குத்தத்தங்கள் ஜனங்களையும், அவர்களின் தலைவர்களையும் அவர்கள் ஏற்கெனவே கொண்டிருந்த அகமகிழ்வில் இன்னும் உறுதியானவர்களாக இருக்கச் செய்தது. அவர்கள் இப்படியாக சிந்தித்தார்கள் – இந்த புதிய உறவு அவர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினாலும், முறையான சடங்குகளை ஆசரிப்பதினால் மட்டுமே இன்னும் அழியாமல் பாதுகாக்கமுடியும் என்று நம்பினார்கள். ஆனால் தீர்க்கதரிசியோ ஆசாரியர்களையும் (1:6-2:9) ஜனங்களையும் (2:10-16) அவர்கள் ஆவலுடன் தேடும் (3:1) கர்த்தரின் வருகை அவர்களை சுத்திகரிக்க, களையெடுக்க (3:2,3) வருவதாக நியாயம் தீர்க்க வருவதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்துகிறார். கர்த்தருக்கு நியாயப்பிரமாணத்துடன் வெளித்தோற்றமான இணக்கம் மட்டுமல்ல, உள்ளான ஏற்றுக்கொள்ளுதலும் (மத்.23:23) காணப்பட வேண்டும் என்பது அவசியம் என அவர்கள் எண்ணங்களை உருவக்குத்தும் கருத்தினை தெரிவிக்கிறார். தீர்க்கதரிசி அவர்களுக்குள் காணப்பட்ட மாயமாலம், துரோகம், அநீதியோடு ஒத்துப்போதல், விவாகரத்து, மாயமான ஆராதனை மற்றும் ஆணவம் போன்ற  சீர்கேடுகள், பொல்லாப்பு மற்றும் தேவனுடைய பாதுகாப்பை தவிர்க்கும் சுயபாதுகாப்பிற்கு விரோதமாக வரவிருக்கும் நியாயத்தீர்ப்புகளை எடுத்துக்கூறி வலிந்து தாக்குகிறார்.

மல்கியா தமது தீர்க்கதரிசனத்தை கேள்விகேட்டு பதில் அளித்து வாக்குவாதம் செய்வது போன்று அமைத்திருக்கிறார். கர்த்தர் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாக குற்றச்சாட்டை சுமத்தும் போது, அவருடைய ஜனங்கள் அதற்கு இழிவான கேள்வியையே அதற்குபதிலாக அளித்தனர் (1:2,6,7; 2:17; 3:7,8,13). வேறு சில நேரங்களில், தீர்க்கதரிசி தன்னை தேவனுடைய பொறுப்பாக இருக்கும் சட்டவல்லுநராக அறிமுகப்படுத்தி, ஜனங்களிடம் அவர்களின் எதிர்மறையான விமர்சனங்களை பேச்சுத்திறம் வாய்ந்த கேள்விகள் கேட்டு மடக்குவதைக் காண்கிறோம் (1:6,8,9; 2:10,15; 3:2).

மல்கியா ஆசாரியர்களையும் ஜனங்களையும் அவர்கள் வேண்டுமென்றே செய்த 6 பாவங்களுக்காக குற்றம்சாட்டுகிறார்: 1) தேவனுடைய அன்பை நிராகரித்தல் (1:2-5); 2) தேவனுக்கு உரிய கனத்தினை செலுத்த தவறுதல் (1:6-2:9); 3) தேவனின் வாக்கினை காக்கும் பண்பினை உதாசீனம் செய்தல் (2:10-16); 4) தேவனுடைய நீதியை மறுவரையறை செய்தல் (2:17 – 3:6); 5) தேவனுடைய ஐசுவரியத்தை கொள்ளையிடல் (3:7-12); மற்றும் 6) தேவனுடைய கிருபையை தூற்றுதல் (3:13-15). இதில் மல்கியா நியாயத்தீர்ப்பு வழங்கிய மூன்று இடைவெளிக்காட்சிகள் இருக்கின்றன: 1) ஆசரியர்களுக்கு (2:1-9); 2) தேசத்திற்கு (2:1-6); மற்றும் மீந்திருப்பவர்களுக்கு (3:16-4:6).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் (4:5) என்பதன் அர்த்தம் அதிகமாக விவாதத்திற்கு உள்ளாகிறது. அது யோவான் ஸ்நானகனால் பூர்த்திசெய்யப்பட்டதா அல்லது இன்னும் வருங்காலத்திற்கென்று  இத்தீர்க்கதரிசன நிறைவேற்றம் வைக்கப்பட்டுள்ளதா -  எலியா திரும்ப மறுபிறவி எடுப்பாரா? மல்கியாவின் தீர்க்கதரிசனம் யோவான் ஸ்நானகரைத்தான் குறிக்கிறது என்றும் எலியா திரும்ப வந்ததாக எடுத்துக்கொள்ளாமல் பார்ப்பதே சாலசிறந்தது. மாத்திரம் அல்ல தேவதூதன் லூக்கா 1:17ல்  எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்று யோவான் ஸ்நானகரைக் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதையும் யோவான் ஸ்நானகர் நான் எலியா அல்ல                   (யோவான்1:21) என்று சொல்லியிருப்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக, யோவான்ஸ்நானகர் எலியாவைப்போல் உள்ளான மனிதனில் “ஆவியும் பலமும்” உடையவராக இருந்தார் எனவும் வெளிப்படையில் முரட்டுத்தனமான சுதந்திரமும், இணங்காதவராகவும் இருந்தார் எனக் காண்கிறோம். யூதர்கள் மேசியாவை ஏற்றுக்கொள்வார்களானால், அது அவர்களுக்குச் சொல்லப்பட்ட எலியாவைப் போன்று அவர் இருப்பார் என்றும் (மத்.11:14; 17:9-13), அவர்கள் ராஜாவை மறுத்தார்கள் என்றால், எலியாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி ஒருவேளை நாம் வெளிப்படுத்தலின் விசேஷம் 11:1-19ல் சாட்சி கூறுவதாக காணும் இரண்டு சாட்சிகளில் ஒருவராக எதிர்காலத்தில் அனுப்பி வைக்கப்படுவார். 

சுருக்கம்

I. இஸ்ரவேலின் பாவங்கள் கண்டிக்கப்படுதல் (1:1-2:16)
அ. இஸ்ரவேலுக்கான தேவனுடைய அனபி நினைவுபடுத்துதல் (1:1-15)
ஆ. ஆசாரியர்கள் கண்டிக்கப்படுதல் (1:6-2:9)
  1. தேவனுடைய பலிபீடத்தை அவமதித்தல் (1:6-14) 
  2. தேவனுடைய மகிமை அவமதிக்கப்படுதல் (2:1-3)
  3. தேவனுடைய நியாயப்பிரமாணம் அவமதிக்கப்படுதல் (2:4-9)
இ. ஜனங்கள் கண்டிக்கப்படுதல் (2:10-16)
 
II. இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பும் ஆசீர்வாதமும் உறுதியாக அறிவிக்கப்படுதல் (2:17- 4:6)
அ. தூதுவரின் வருகை (2:!7-3:5)
ஆ. மனம்திரும்பும்படிக்கு சவால் விடப்படுகிறது (3:6-12)
இ. கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் விமர்சித்தல் (3:13-15)
ஈ. பற்றுறுதியோடு காத்திருந்து- மீந்திருப்பவர்களுக்கு வரும் ஆறுதல் (3:16-4:6)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.