வேதாகம வரலாறுகள்

செப்பனியா

தலைப்பு:

ஏனைய சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் போலவே, இந்த தீர்க்கதரிசியின் புத்தகமும் அதன் ஆசிரியரின் பெயரையே தலைப்பாக பெற்றுள்ளது. இப்பெயரின் அர்த்தம் - “கர்த்தர் மறைக்கிறார்” (2:3).

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

செப்பனியாவைக் குறித்து மிகச்சிறிய அளவிலேயே அறியப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் வேறு மூன்று நபர்கள் இப்பெயருடன் காணப்படுகிறார்கள். இவர் தன்னுடைய வம்சவழியை முந்தைய நான்காவது தலைமுறை எசேக்கியா ராஜா (கி.மு. 765 - 686) மட்டும் அடையாளம் கண்டுபிடித்துள்ளார். இதினால் தீர்க்கதரிசிகளின் மத்தியில் ராஜ வம்சத்தில் வந்த ஒரு தீர்க்கதரிசி என்று தனித்து நிற்கிறார் (1:1). இவர் ராஜ வம்சத்தில் வந்தபடியால் அந்நாட்களில் இவர் பிரசங்கித்த போது யூதாவை ஆண்டுவந்த யோசியா ராஜா செவிகொடுத்து கேட்கச் செய்திருக்கலாம்.

யோசியா ஆட்சி செய்த (கி.மு. 640-609) காலத்தில் என தீர்க்கதரிசியே தன் செய்திகளுக்குரிய காலத்தைக் குறித்திருக்கிறார். தேசத்தின் தார்மீக மற்றும் ஆவிக்குரிய நிலைமைகளை (1:4-6; 3:1-17) பார்க்கும் போது, யூதா விக்கிரகாராதனை மற்றும் பொல்லாப்பில் திளைத்து - யோசியாவின் சீர்திருத்தங்களுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசன வார்த்தைகள் இவை என்பதாக காண்கிறோம். கி.மு.628-ல் யோசியா பாகால்களின் விக்கிரகத்தோப்புகளை தகர்த்து, பலிபீடங்களை தகர்த்து, விக்கிரங்களை நொறுக்கி தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்ட பின்பு  (2நாளா.34:7-8) கள்ள தீர்க்கதரிசிகளின் எலும்புகளைச் சுட்டெரித்துப் போட்டார் எனக் காண்கிறோம். கி.மு.622ல் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகம் கண்டெடுக்கப்பட்டது (2நாளா.34:8 -35:19). தொடர்ந்து, செப்பனியா கி.மு.635-625 வரை தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம் மேலும் இவர் எரேமியாவின் சமகாலத்தில் வாழ்ந்தவர். 

பின்னணி மற்றும் அமைப்பு

அரசியல்ரீதியாக, அசீரியர்கள் சர்வ உலகத்தின் மீதும் கொண்டிருந்த அதிகாரம் பாபிலோனியர்களுக்கு கைமாறியபோது, நினிவே யூதாவின் மீது கொண்டிருந்த பிடி தளர்ந்து, 50 வருடங்களுக்குப் பின் யூதா தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. வரிச்சுமையில் இருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் கிடைத்த இந்த சுதந்திரம், யோசியா ராஜாவை, பயந்து ஓடிக்கொண்டிருந்த நினிவேயின் ராஜாவை (கி.மு.609; 2நாளா.35:20-27) எகிப்து தடைசெய்ய முயற்சித்த போது, அதில் தலையிடச் செய்தது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆவிக்குரிய ஜீவியத்தில், எசேக்கியா ராஜாவின் மகன் மனாசேயின் (கி.மு.695-642) 40 வருடங்களுக்கு மேலான ஆட்சி, மற்றும் எசேக்கியாவின் பேரன் ஆமோனின் (கி.மு.642-640 வரை) இரண்டுவருடம் ஆட்சி காலம் முழுவதும் பொல்லாப்பும் எதிர்ப்பும் நிறைந்ததாக இருந்தன (2ராஜா.21; 2நாளா. 33). யோசியாவின் ஆரம்பகால ஆட்சிகாலமும் கூட அவருடைய தகப்பனின் ஆட்சிகாலத்தைப்போல பொல்லாப்பு நிறைந்ததாகவே இருந்தது (2ராஜா.23:4). கி.மு.622-ல் கர்த்தருடைய ஆலயத்தில் பழுதுநீக்கும் வேலை நடந்து கொண்டிருந்த போது, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டெடுத்தார் (2ராஜா.22:8). அந்த புத்தகத்தை ராஜாவாகிய யோசியா வாசித்த பின், அனேக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் (2ராஜா.23). யோசியாவின் ஆரம்ப காலங்களில், மிகப்பெரிய எழுப்புதல் உண்டாவதற்கு முன், செப்பனியா உரைத்த தீர்க்கதரிசன வார்த்தைகள் நிச்சயமாக யோசியா ராஜா கொண்டுவந்த பல சீர்திருத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம். ஆனால், யோசியாவிற்கு முன் 55 வருடங்கள் ஆட்சிசெய்த ராஜாக்களின் பொல்லாப்புக்களை திருத்த முடியாமல் யோசியா ராஜா கொண்டுவந்த சீர்திருத்தங்கள் யூதா தேசத்தின் மீது குறுகிய காலம் மட்டுமே பலன் தருவதாக இருந்தன. யோசியா கொண்டுவந்த சீர்திருத்தங்கள் காலம் கடந்து வந்தாலும் அவருடைய வாழ்நாட்களுக்குள்ளேயே செயல் இழந்து போயின. 

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

கர்த்தருடைய நாளில் செப்பனியாவின் செய்தி –கடைசி நாட்கள் மிக நெருக்கமாக இருக்கின்றன; நெபுகாத்நேச்சார் ராஜா மூலமாக வரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சமீபமாக இருக்கின்றது என்று யூதா தேசத்தை எச்சரித்தன (கி.மு.605-586; வசனம்1:4-13). ஆனாலும், தானியேல் தீர்க்கதரிசனமாக உரைத்த 70-வது வார நியாயதீர்ப்பு (1:18;3:8) நிறைவேறுவதற்கு தூரமானதாகவே இருந்தன. ”கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது (1:7) என எச்சரித்த - சமீபத்தில் இருக்கும் நாள்– கோபாக்கினை, பிரச்சினை, துன்பம், அழிவு, பாழடைதல், அந்தகாரம். இருள், மப்பும் மந்தாரமான நாட்கள், அடர்ந்த இருள், எக்காளம் மற்றும் எச்சரிப்பின் சத்தம் நிறைந்த நாளாக இருக்கும் (1:15,16,18). இப்படிப்பட்ட தேவ கோபாக்கினை- தேவ வாக்கின் மத்தியிலும் தீர்க்கதரிசி ஜனங்களை கர்த்தரைத் தேடும்படி புத்திசொல்கிறார் – நியாயத்தீர்ப்பின் மத்தியிலும் ஒருமறைவிடம் உண்டு எனவும், மீந்திருக்கும் அவருடைய விசுவாசிகளுக்கு இறுதியில் இரட்சிப்பு உண்டு என்ற வாக்குதத்தத்தையும் அறிவிக்கிறார் (2:7; 3:9-20).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

பாவத்தைக்குறித்து ஒரு தெளிவற்ற கண்டனத்தை இந்த புத்தகம் முன்வைக்கிறது, மேலும், யூதா தேசத்தின் மீது விரைவில் நிறைவேற இருக்கின்ற நியாயத்தீர்ப்பையும் முன்வைக்கிறது. நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன் (3:9) என்னும் வார்த்தைகள் பாபேல் கோபுரம் கட்டப்படுவதற்கு முன் பூமியனைத்தின் மீதும் வழங்கின (ஆதி.11:1-9)  ஒரே பாஷையாக இருந்தது - போல உண்டாகும் என்பதை இந்த வசனம் குறிக்கின்றது என சிலர் குறிப்பிடுகின்றனர். ஆதி.11:7லிலும் பாஷை என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது, இங்கேயும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்கிறார்கள். இந்த வசனம் இருதயத்திலும் வாழ்க்கையிலும் உண்டாக இருக்கும் சுத்தத்தை குறிக்கிறது என நாம் எடுத்துக்கொள்வது நலமாகும். இதனை 3:13ஆம் வசனம் உறுதிசெய்கிறதாக இருக்கின்றது. இதில் நாம் கவனிக்க வேண்டியது பொதுவாக ”பாஷை” என்ற வார்த்தை பொதுவாக - “உதடு” என்று மொழிபெயர்க்கப்படும்; இதனை நாம் ”சுத்தம்” என்ற வார்த்தையுடன் சேர்த்து பார்த்தால், உள்ளான மனிதனின் பாவம் சுத்திகரிக்கப்பட்டதும் (ஏசா.6:5) வெளிப்படுகிற பேச்சினை இந்த வசனம் குறிக்கிறது என அறிகிறோம் (மத்தேயு 12:34 காண்க) – இதில் அந்நிய தேவர்களின் பெயர் முதல் கொண்டு அவர்கள் உதடுகளில் இருந்து நீக்கப்படும் என்பதும் அடங்கும் (ஓசியா2:17), இது பூமியனைத்தின் மீதும் ஒரே பாஷை என்பதை குறிக்கவில்லை. 

சுருக்கம்

I. மேல்எழுத்து (1:1)
 
II. கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு (1:2 – 3:8)
அ. பூமியனைத்தின் மீதும்(1:2,3)
ஆ. யூதாவின் மீது (1:4-2:3)
இ. சுற்றி இருக்கும் தேசங்களின் மீது  (2:4-15)
1. பெலிஸ்தியா (2:4-7)
2. மோவாப் / அம்மோன் (2:8-11)
3. எத்தியோப்பியா (2:12)
4. அசீரியா (2:13 -15)
 
III. கர்த்தருடைய ஆசீர்வாதம் (3:9-20)
அ. தேசங்களுக்கு(3:9-20)
ஆ. யூதா தேசத்திற்கு (3:11-20)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.