வேதாகம வரலாறுகள்

நாகூம்

தலைப்பு:

அசீரியாவின் தலைநகர் – நினிவேக்கு விரோதமாக தேவனின் வாக்கை தீர்க்கதரிசனமாக உரைத்தவரின் பெயர் இந்த புத்தகத்திற்கு தலைப்பாக தரப்பட்டுள்ளது. நாகூம் என்பதற்கு ஆறுதல் அல்லது தேற்றுதல் என்று அர்த்தம். மேலும், இது நெகேமியா (யாவே என் ஆறுதல்) என்ற  வார்த்தையின் சுருக்கம். ரோமர் 10:15ல் சொல்லியிருப்பது நாகூம் 1:5 என ஒரு சந்தேக குறிப்பு இருந்தாலும் நாகூம் புதிய ஏற்பாட்டில் எங்கும் மேற்கோளாக காட்டப்படவில்லை. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்த வாழ்க்கையை குறித்து எழுதுவது அவர்களுக்கு முக்கியம் அல்ல, அவர்களுடைய செய்தியே முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, தீர்க்கதரிசன வார்த்தைகளில் இருந்து அவர்கள் வாழ்க்கையினைப் பற்றித் தெரிந்து கொள்வது அரிது. நமக்கு தேவையான வாழ்க்கை குறிப்பினை நாம் வரலாற்று புத்தகங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எல்கோசான் என்று 1:1 வசனத்தில் குறிப்பிட்டுள்ளதை தவிர இவரைப் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை; இந்த எல்கோஸ் அவரது பிறந்த இடம் அல்லது ஊழியம் செய்த இடத்தை குறிக்கிறது. எல்கோஸ் பட்டணம் இருக்கும் இடத்தை அறிய எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தன. நாகூம் பிறந்த இடம் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அல்குஸ், (அசீரியாவிற்கு கி.மு.722-வில் நாடுகடத்தப்பட்டவர்களின் வம்சவழி வந்தவராக நாகூம் இருக்கலாம்), கப்பர்நகூம் (நாகூமில் காணும் பட்டணம்) அல்லது யூதா தேசத்திற்கு தெற்கில் உள்ள ஓர் இடமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. அவருடைய பிறந்த இடம் அல்லது வாழ்ந்த இடம் - இவரது புத்தகத்திற்கு விளக்கம் அளிக்க எந்த விதத்திலும் முக்கியமானதாக இல்லை.

புத்தக அறிமுகத்தில் எந்தவொரு ராஜாவின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. ஆதலால் நாகூம் தீர்க்கதரிசன காலத்தை வரலாற்றுத் தரவுகளின் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். நியாயத்தீர்ப்பின் செய்தி நினிவே பட்டணத்திற்கு விரோதமாக வந்த போது அத்தேசம் பலங்கொண்டிருந்தது, அது வீழ்ச்சியடைந்த கி.மு.612க்கு முன் உள்ள நாட்கள், கி.மு.626-ல் அசூர்பனிபால் மரணம் சம்பவித்தது அதற்கும் முந்தைய நாட்கள் எனச் சுட்டிக்காட்டுகிறது. அசூர்பனிபாலின் மரணத்திற்குப் பின் அசீரியர்களின் பலம் மிகவேகமாக குன்றினது. 

தேபாஸ் என்றும் அழைக்கப்பட்ட நோஅம்மோன் கி.மு.663ல் (அசூர்பனிபாலின் கரங்களில்) வீழ்ந்தது; அந்த நினைவுகள் பசுமையாக நாகூம் வசனம் 3:8-10-ல் குறிப்பிட்டிருக்கிறபடியால், இச்சம்பவத்திற்கு 10 வருடங்களுக்கு பிற்பாடும் எழுப்புதல் ஏற்படாததால், இப்புத்தகத்தின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்றும், மனாசே ராஜா அரசாண்ட காலம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது (கி.மு. 695-642; 2ராஜா.21:1-18).

பின்னணி மற்றும் அமைப்பு

யோனாவின் பிரசங்கத்தில் மனம்திரும்பிய நினிவே பட்டணம் ஒரு நூற்றாண்டிற்குப்பின், விக்கிரகாராதனை, வன்முறை மற்றும் ஆணவத்திற்குத் திரும்பியது (3:1-4). எருசலேமில் சனகெரிப்பின் தோல்வியில் (கி.மு.701) இருந்து மீண்டு, அசீரியா அதன் பலத்தின் உச்சத்தில் இருந்தது (ஏசா.37:36-38). அசீரியாவின் எல்லை எகிப்து வரை பரவியிருந்தது. எஸ்ரஹதோன் கி.மு.607-ல் சமாரியா மற்றும் கலிலோயாவை வெற்றிசிறந்து ஜனங்களை இடமாற்றம் செய்திருந்தார் (2ராஜா.17:24; எஸ்றா 4:2). இதினால் சிரியாவும் இஸ்ரவேலும் பெலவீனப்பட்டு இருந்தன. வளர்ந்து வந்த பாபிலோனிய ராஜா நபோபோலஷார் மற்றும் அவருடைய மகன் நெபுகாத்நேச்சாரின் (கி.மு.612) ராஜ்யபாரத்தில் தேவன் நினிவேயை தாழ்த்தினார். தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தையின்படியே, அசீரியா மரணித்தத்து.

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

நூற்றாண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசனம் உரைத்த யோனா புத்தகத்தின் தொடர்ச்சியாக நாகூம் இருக்கிறது. நினிவேயை குறித்து தேவன் நிச்சயம் நிறைவேறும் என்று சொன்ன நியாயத்தீர்ப்பினை உரைக்கிறார், பின்நாட்களில் நாகூம்  தேவனுடைய நியாயத்தீர்ப்பு நிறைவேறுவதை சித்தரிக்கிறார். நினிவேயின் சுவர்கள் 100 அடியும், 90 அடி ஆழமும் 150 அடி அளவிலான அகழிகளைக் கொண்டிருந்ததால் - தான் அழிக்கப்படமுடியாத பட்டணம் என்று பெருமை கொண்டிருந்தது. சர்வத்தையும் ஆளும் தேவன் அவருடைய பிரமாணங்களை மீறினவர்களை (1:8,14; 3:5-7) பழிதீர்ப்பார் என்று நிச்சயமாகச் சொல்கிறார். பொல்லாப்பினை நியாயம் தீர்க்கும் அதே தேவன் மீட்பவராக, தமது உண்மையுள்ளவர்களுக்கு அன்பினை பொழிபவராக இருக்கிறார் (1:7,12,13,15;2:2). நாகூமின் தீர்க்கதரிசன வார்த்தைகள் யூதர்கள் மற்றும் அசீரியருக்கு பயந்திருந்த யாவருக்கும் ஆறுதலைக் கொண்டுவந்தது. 

நாகூம் 1:8-ல் ”புரண்டுவருகிற வெள்ளத்தினால் சங்காரம் பண்ணுவார்” என்கிறார். அப்படியே டைகிரிஸ் நதி சுவர்களை அழிக்கத்தக்கதான அளவிற்கு புரண்டோடியது அதினால் பாபிலோனியர்கள் உட்பிரவேசித்தார்கள். பட்டணம் வெறிகொண்டு ஒளித்துக் கொள்வாய் என்று 3:11-ல் முன்கூட்டியே நாகூம் அறிவித்தார். கி.மு.612-ல் நிர்மூலமான பிறகு, இந்த இடம் கி.பி.1942-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

எல்கோஸ் என்ற பட்டணம் கண்டறிப்பட்ட முடியாமல் இருக்கின்றது என்பதைத் தவிர இந்த தீர்க்கதரிசன புத்தகம் வேறு எந்த இடத்திலும் விளக்கம் அளிப்பதில் சவாலாக இல்லை. அசீரியர்களுக்கு விரோதமாக, அதன் தலைநகர் நினிவேயின் அக்கிரமம் மற்றும் விக்கிரகாராதனை மீறல்களுக்கு விரோதமாக வந்த தீர்க்கதரிசன அறிவிப்பு தான் இந்த நாகூம் தீர்க்கதரிசன புத்தகம். 

சுருக்கம்

I. மேல்எழுத்து (1:1)
 
II. நினிவே அழிக்கப்படு என்று அறிவிக்கப்பட்டது (1:2 –15)
அ. தேவனின் வல்லமை விளக்கமாகச் சொல்லப்பட்டது (1:2-8)
ஆ. தேவனுடைய தண்டனை கூறப்பட்டது (1:9-15)
 
III. நினிவேயின் அழிவு விபரமாக (2:1-13)
அ. பட்டணம் திடீரென தாக்கப்பட்டது (2:1-10)
ஆ பட்டணம் அவமதிக்கப்பட்டது (2:1-10)
 
IV. நினிவே அழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை (3:1-19)
அ. முதல் குற்றச்சாட்டு (3:1-3)
ஆ. இரண்டாம் குற்றச்சாட்டு (3:1-3)
இ. மூன்றாம் குற்றச்சாட்டு (3:1-3)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.