வேதாகம வரலாறுகள்

மீகா

தலைப்பு:

கர்த்தருடைய வார்த்தையைப் பெற்று அதனை அறிவிக்க கட்டளை பெற்ற தீர்க்கதரிசியின் பெயர் இந்த புத்தகத்திற்கு தலைப்பாகப் பெறப்பட்டது. மீகா என்னும் பெயர் - பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் இருக்கின்ற வேறு சிலருடன் பங்கிடப்படும் பெயர் (நியா.17:1; 2நாளா.13:2; எரேமியா 36:11), இப்பெயர் மிகயா (அல்லது மிக்காயா) என்னும் பெயரின் சுருக்கமான வடிவம். இப்பெயரின் அர்த்தம் கர்த்தரைப்போல் வேறு யார் உண்டு? என்பதாகும். வசனம் 7:18ல்  தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்?  என்று மீகா தன்பெயரை வைத்தே கர்த்தரைப் புகழ்வதைக் காணலாம். 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

முதல் வசனமே மீகா தான் இதன் ஆசிரியர் என்பதை உறுதி செய்கிறது – அதற்கும் மேல் மீகாவை குறித்து ஏதும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர் பெற்றோர் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இவரின் பெயரை வைத்து நல்ல தெய்வீக குடிபிறந்தவர் என நிச்சயிக்கலாம். மொரேசா, யூதாவின் மலையடிவாரத்தில் எருசலேமுக்கு ஏறக்குறைய 25 மைல் தென்மேற்கில், யூதா, பெலிஸ்தா எல்லையில் காத் ஊருக்கு அருகாமையில் இருந்த ஊர், இதுவே இவரது  பிறந்த ஊர் என்கிறார் (1:1,14). விவசாய உற்பத்தி தேசத்தில் இருந்து, ஆமோஸைப்போல் தேசத்தில் வாழ்ந்தவர். அரசியல் மற்றும் மதமார்க்கத்திலிருந்து வெளியேறியவர் எனினும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர் (3:8). எருசலேம் பிரபுக்களுக்கும் ஜனங்களுக்கும் நியாயத்தீர்ப்பின் செய்தியை சொல்லும்படிக்கு தெரிந்தெடுக்கப்பட்டவர். 

யோத்தம் (கி.மு.750-731), ஆகாஸ் (கி.மு.731-715) மற்றும் எசேக்கியா (கி.மு.715-686) ராஜாக்களின் ஆட்சிகாலத்தில் மீகா தீர்க்கதரிசனம் உரைத்தவர். சமூக அநீதிகள் மற்றும் மதமார்க்கத்தில் இருந்த ஊழல் குற்றங்களை எடுத்துரைத்ததினால், ஆமோஸ் (எட்டாம் நூற்றாண்டின் மைய்ய நாட்கள்) மற்றும் அவருடைய சமகாலத்தில் வடக்கு பகுதியில் இருந்த ஓசியா (கி.மு.755-710) மற்றும் ஏசாயா (கி.மு.739-690) கற்றுத்தந்த கருத்துக்களை இவரது வார்த்தைகள் புதுப்பித்தது. இந்த புதுப்பித்தல் ஆகாஸின் (2ராஜா.16:10-18) குணாதிசயத்துடன் பொருந்தியது. மேலும் அவருடைய மகன் எசேக்கியா ராஜாவின் ஆவிக்குரிய மறுமலர்ச்சிக்கு (2நாளா.29; 31:1) முந்தைய நாட்களில் நிறைவேறியது. சீக்கிரமே சமரியா வீழ்ச்சியடையப் போகிறது என இவர் வசனம் 1:6ல் தெரிவிப்பதில் இருந்து இவரது காலம் கி.மு.722-ற்கு முன்பும் ஏறக்குறைய கி.மு.735-710-ற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. 

பின்னணி மற்றும் அமைப்பு

கி.மு.722-ல் மீகாவின் ஊழிய காலத்தில் வடக்கு பிராந்திய தேசம் அசீரியரின் கைகளில் விழப்போகிறது என்று அறிந்திருந்தபடியால், மீகா தன் செய்திகளின்           தேதியை யூதா தேசத்து ராஜாக்களுடன் இணைத்து கூறியிருப்பதைக் காணலாம். இஸ்ரவேல் தேசம் இவருடைய வார்த்தைகளுக்கு அரிதாகவே செவிகொடுத்தப்படியால் (1:5-7), இவரது முதன்மையான கவனம் அவர் வாழ்ந்த தென்தேசத்து ராஜ்யத்தின் மீதே இருந்தது. யெரோபெயாம் II ராஜாவின் காலம் (கி.மு.793-753) பொருளாதாரத்தில் செழிப்பு, அயல்தேசத்தாருடன் யுத்தமில்லை என்பதால் பொற்காலம் எனலாம். தாவீது மற்றும் சாலமோனின் ராஜ்ய காலத்தில் பெற்றிருந்த எல்லைகளை யூதா மற்றும் இஸ்ரவேல் தேசங்கள் பெற்றிருந்தன (2ராஜா.14:23-27). சிரியா மற்றும் இஸ்ரவேல் தேசம் யூதா தேசத்தை தோற்கடித்து கொடிய ஆகாஸ் ராஜாவை சிறைபிடித்து வந்தன (2நாளா. 28:5-16; ஏசா.7:1,2). அசீரியா சிரியா மற்றும் இஸ்ரவேல் தேசத்தை தோற்கடித்தபின், நல்ல ராஜா எசேக்கியா அசீரியர்களிடம் தான் கொண்டிருந்த பற்றுறுதியினை விலக்கிக்கொண்டார். அதினால், செனாகெரிப் எருசலேமை கி.மு.701ல் முற்றுகையிட்டது (2ராஜா.18,19; 2 நாளா.32). பின்னர் தேவன் யூதாவை விடுவிக்க தமது தூதுவர்களை அனுப்பினார் (2நாளா. 32:21). யூதா தேசம் மெய்தேவனை ஆராதிக்கும்படி திருப்பிட, வழிநடத்த தேவன் எசேக்கியா ராஜாவை பயன்படுத்தினார்.

கி.மு.739-ல் உசியா ராஜாவின் செல்வ செழிப்பான ஆட்சி காலத்திற்குப்பின், அவருடைய மகன் யோதாம் தகப்பனின் கொள்கைகளைப் பின்பற்றினார், ஆனால் விக்கிரக மையங்களை அகற்றவில்லை. உள்ளே புரையோடிக்கொண்டிருக்கு சமூக ஊழல்கள் மற்றும் சமய ஒத்திசைவுகளை மறைக்க வெளிப்புறத்தில் காணப்பட்ட செழிப்பு அவர்களுக்கு உதவியது. கானானிய கருவுறுதலுக்கான-தேவதை பாகால் வணக்கம் அதிமதிகமாய் பழைய ஏற்பாட்டு பலிகள் முறைமைகளுடன் கலக்கப்பட்டது. இது ஆகாஸ் ராஜாவின் காலத்தில் மிக அதிக அளவில் தொற்றுநோய் போல் மாறிவிட்டிருந்தது (2நாளா.28:1-4). சமாரியா வீழ்ச்சியடைந்த போது யூதா தேசத்திற்குள் ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக பிரவேசித்தனர், உடன் அவர்களது சமய ஒத்திசைவுகளையும் கொண்டுவந்தனர். மீகா (ஓசியா தீர்க்கதரிசிபோல்) இந்த பிரச்சினையை எடுத்து கையாண்ட போதிலும், இவர் உரைத்த கடுமையான எச்சரிப்புக்கள் சமூக மற்றும் தனிப்பட்டநபர்களின்  குணகுறைபாடுகளை மட்டுமே கண்டிப்பதாக இருந்தது (உதாரணமாக:7:5,6). அந்நாட்களில் அசீரியாவின் கை மேலோங்கி இருந்து வந்தது, அப்போது மீகா- உரைத்த அசீரியர்களின் பிடியில் இருக்கும் யூதாவை பாபிலோன் தோற்கடிக்கும் (4:10) என்ற தீர்க்கதரிசன வார்த்தைகள்  நிறைவேறாது என்பது போன்று ஜனங்களுக்கு தோன்றியது. எப்படி இஸ்ரவேலருக்கு ஆமோஸ் தீர்க்கதரிசி இருந்தாரோ அப்படி மீகா யூதா தேசத்தினருக்கு இருந்தார்.  

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

விடாப்பிடியாக பொல்லாப்பையே செய்து வந்த ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பின் செய்தியை அறிவித்து வந்ததே மீகாவின் தலையாய செய்தி. ஏனைய ஒப்பான தீர்க்கதரிசிகளைப்போல், மீகா தீர்க்கதரிசன செய்தியினை சட்டத்தின் அடிப்படை வார்த்தைகளால் அறிவித்தார் (1:2; 6:1,2). தீர்க்கதரிசனம் மூன்று அடுக்கு தேவ வாக்காக / சுழற்சிகளாக அமைக்கப்பட்டுள்ளது – ஒவ்வொன்றும் “செவிகொடுத்து கேளுங்கள்” என்ற அறிவுரையுடன் ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு அடுக்கின் உள்ளேயும், பேரழிவில் இருந்து நம்பிக்கைக்கு கடத்திச் செல்கிறார். சீனாய் மலையில் தரப்பட்ட தேவனுடைய பிரமாணங்கள் மீறப்பட்டதால் பேரழிவுக்கு நேராகவும், அவர்களுடைய மூதாதையருடன் தேவன் மாறாத உடன்படிக்கையை (7:20) ஏற்படுத்தியிருந்தபடியால் நம்பிக்கைக்கு நேராகவும் நடத்தினார்.  ஜனங்களின் பாவத்தைக் குறித்து புத்தகத்தின் மூன்றில் ஒரு பங்கு பேசுகிறது, அடுத்த மூன்றில் ஒருபங்கு வரவிருக்கும் தேவனுடைய தண்டனையை குறித்தும் அடுத்து இருக்கும் மூன்றில் ஒருபங்கு நியாயதீர்ப்பிற்கு பின் உண்மையாக/பற்றுறுதியுடன் இருப்பவர்களுக்கு நம்பிக்கையை வாக்களிக்கிறது. ஆக, தவிர்க்கமுடியாத பாவத்தினை கண்டிக்க இருக்கும் தெய்வீக தண்டனையும் அவருடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் மீது அவருக்குள்ள மாறாத பற்றுறுதியும் ஒன்று சேருகிறது என்ற கருப்பொருளை இதில் காண்கிறோம். இக்கருப்பொருள் எதினால் ஆக்கப்பட்டிருக்கின்றது என்றால் 1) பாவத்தை நியாயம் தீர்ப்பதில் முழுமையான நிச்சயம்; 2) மீந்திருக்கும்  அவருடைய ஜனங்களுடன் தேவன் தனது உடன்படிக்கையை பாதுகாப்பதில் இருந்து அவரே இப்பிரபஞ்சம் முழுமையையும் அரசாளுபவர் என்னும் தேவனுடைய குணாதிசயத்தை இச்செய்தியைக் கேட்பவருக்கு வெளிப்படுத்துகிறது. தெய்வீக இடைபடுதலால் பாவிகள் மீது நியாயத்தீர்ப்பை அவர் கொண்டுவருவார் மற்றும் மனம்திரும்புவோருக்கு அவர் ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார் என்பதை நாம் இந்த தீர்க்கதரிசன புத்தகத்தில் இருந்து அறிந்து கொள்ள வேண்டும். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

மீகா 4:1-3 மற்றும் ஏசாயா  2:2,4 ல் நாம் காணும் செங்குத்தான ஒற்றுமை – யார் யாரை குறிப்பிடுகின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறது; இதற்கு விளக்கம் கொடுக்கும் இரண்டு குழுவினரும் தெளிவான ஒருபதிலும் விளக்கமாக தராமல் பிரிந்து இருக்கின்றார்கள். இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் நெருக்கமான இடங்களில் வாழ்ந்து வந்தனர், ஒரே காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்துவந்தனர் என்னும் ஒற்றுமையை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும். தேவன் தாமே ஒரே செய்தியை  இரண்டு தீர்க்கதரிசிகள் மூலமாக தந்தார். ”கடைசி நாட்களில்” என்ற 4:1-ஆம் வசனத்தின் ஆரம்ப வரிகள் நாடுகடத்தப்பட்ட நாட்களுக்கு பின் நிறைவேறும்படி இருக்கிறது என்ற கருத்தை நீக்கி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் அதை தொடர்ந்து வரும் ஆயிரம் வருட அரசாட்சி காலயியல் குறித்துள்ள கால கட்டத்திற்கு உரிய வரிகள் என்ற நிச்சயம் உண்டாகிறது. 

ஏசாயா 2:2-4 தவிர, மீகாவின் வேறு மூன்று வசனங்கள் வேதாகம வாக்கியங்களில் மேற்கோளாக காட்டப்பட்டு இருக்கின்றன. மீகா 3:12, எரே.26:18-ல் மேற்கோளாக காட்டப்பட்டு யோயாக்கீமின் கரங்களில் இருந்து தீர்க்கதரிசி எரேமியாவை மீகா 3:12 வார்த்தைகள் பாதுகாத்தன. மீகா 5:2 பிரதான ஆசாரியர்களாலும் வேதபாரகராலும் மத்.2:6ல் மேசியாவின் பிறப்பிடம் குறித்து எரோது ராஜா கேட்ட போது எடுத்தாளப்பட்டது. மத்.10:35,36-ல் இயேசு தம் சீஷர்களுக்கு அதிகாரம் கொடுத்து அனுப்பும் போது மீகா 7:6-ல் காணும் வார்த்தைகளை எடுத்துப் பயன்படுத்துகிறார்.

சுருக்கம்

I. மேல்எழுத்து (1:1)
 
II. தேவன் நியாயம் தீர்க்கவும் விடுவிக்கவும் ஒன்று சேர்க்கிறார் (1:2 – 2:13)
அ. சமரியாவும் யூதாவும் தண்டிக்கப்பட்டது (1:2-16)
ஆ. ஒடுக்குபவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டார்கள் (2:41-5)
இ. கள்ள தீர்க்கதரிசிகள் கைவிடப்பட்டனர் (2:6-11)
ஈ. விடுதலைக்கான வாக்குதத்தம் (2:12,13)
 
III. தேவன் ஆள்பவர்களை நியாயம்தீர்த்து விடுவிக்க வந்தார் (3:1- 5:15)
அ. நிகழ்கால தலைவர்கள் குற்றவாளிகள் (3:1-12)
ஆ. வரப்போகும் தலைவர் விடுவிப்பார் மேலும் மீட்டு சீரமைப்பார் (4:1 - 5:15)
 
IV. தேவன் குற்றச்சாட்டையும் இறுதி விடுதலையையும் கொண்டுவருகிறார் (6:1 - 7:20)
அ. கண்டித்தல் மற்றும் புலம்பலின் செய்திகள் (6:1-7:6)
ஆ. நம்பிக்கை மற்றும் வெற்றியின் செய்திகள் (7:7-20)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.