வேதாகம வரலாறுகள்
யோனா

யோனா

தலைப்பு: 

எபிரேய மசோரெட்டிக் (MT) உரையினைத் தொடர்ந்து, யோனா புத்தகத்தின் முதன்மை நபரின் பெயரையே இந்த புத்தகம் தலைப்பாகப் பெற்றுள்ளது. யோனா என்பதற்கு “புறா” என்று அர்த்தம். இவர் அமித்தாயின் குமாரன் (1:1). கிரேக்க செப்டுவஜிண்ட் (LXX) மற்றும் லத்தீன் வுல்கேட்(Vg.) மொழிபெயர்ப்புகளும் இதே பெயரையே இப்புத்தகத்திற்கு தந்துள்ளன. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

இந்த புத்தகத்தில் இவர் தான் ஆசிரியர் என்று உரிமை கோரும் வார்த்தைகள் எங்கும் இல்லை. புத்தகம் முழுவதும், யோனா மூன்றாம் நபராக அழைக்கப்பட்டிருப்பதால், சிலரை இந்த புத்தகத்தை எழுதியது வேறு எவராக இருக்ககூடுமோ என தேடச் செய்கிறது. மூன்றாம் நபராக சித்தரித்து எழுதுவது என்பது பழைய ஏற்பாட்டிற்கு ஒன்றும் புதிதானது அல்ல (எ.கா., யாத்.11:3; 1சாமு.12:!1). மேலும் இப்புத்தகத்தில் சுயசரிதையாக கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் யோனா தான் இதன் ஆசிரியர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அசாதாரணமான சம்பவங்களும் அனுபவங்களும் யோனா தானே சொல்லும் போது தான், அவை முதலாவது நபரிடம் இருந்து கிடைக்கும் செய்தியாக இருப்பின், தலை சிறந்தவைகளாக இருக்கும். ஓசியா, யோவேல், மீகா, செப்பனியா, ஆகாய் மற்றும் சகரியா புத்தகங்களிலும் இப்புத்தகத்தின் ஆரம்பவரிகள் போன்ற ஓர் ஒற்றுமை காணப்படுகின்றன. 

2ராஜா. 14:25-ன்படி, யோனா நாசரேத் அருகில் இருக்கும் காத்தேப்பேர் என்ற ஊரில் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது, யோனா நீண்ட செழிப்பான யெரோபெயாம் II (கி.மு.793-753) வின் வாழ்ந்தவர் என்றும், ஆமோஸின் வருகைக்கு முன் வட கோத்திரத்தாருக்கு எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் (கி.மு.760) எழும்பிய தீர்க்கதரிசி என அறிகிறோம். “ஒரு தீர்க்கதரிசியும் கலிலேயாவில் இருந்து வரவில்லை” என பரிசேயர்கள் சொன்னது தவறு – ஏனென்றால் யோனா ஓர் கலிலேயர். சாரிபாத் விதவையின் மரித்த மகனை எலியா மீண்டும் உயிரோடு எழுப்பினாரே, அந்த மகன் தான் யோனா என சரிபார்க்கப்படாத யூத பாரம்பரியம் கூறுகிறது (1ராஜா.17:8-24). 

பின்னணி மற்றும் அமைப்பு

இஸ்ரவேலரின் 10 வடக்கு கோத்திரத்தாருக்கு தீர்க்கதரிசியாக ஆமோஸ் தீர்க்கதரிசியின் பின்னணி மற்றும் அமைப்பை யோனா பகிர்ந்து கொள்கிறார். தேசம் மற்ற நாட்களை ஒப்பிட்டுபார்க்கும் போது சமாதானத்துடன் செழிப்பாக இருந்தது. சிரியா மற்றும் அசீரியா இரண்டு தேசங்களுமே பெலவீனப்பட்டு இருந்தன. அதினால் யெரோபெயாம் II ராஜா தாவீது மற்றும் சாலமோன் காலத்தில் இருந்த அளவிற்கு இஸ்ரவேலரின் வடக்கு எல்லையை விரிவாக்கி இருந்தார் (2ராஜா.14:23-27). ஆவிக்குரிய வாழ்வில் அது வறுமையின் நாட்கள், சடங்குகள் நிறைந்த மற்றும் விக்கிரக ஆராதனை பெருகி, நியாயம் நெறிதவறிய நாட்கள் அவை. சமாதானமும் செல்வமுமான காலங்கள் ஆவிக்குரிய, தார்மீக, நெறிமுறை வாழ்வில், மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றிருந்தது (2ராஜா.14:24; ஆமோஸ் 4:1; 5:10-13). இதன் தண்டனையாக கி.மு. 722-ல் அசீரியர்கள் படையெடுத்து வர தேவன் அனுமதித்து, தேசத்தில் அழிவு உண்டாகி, சிறைப்பட்டுப் போனது. கி.மு.765 மற்றும் கி.மு.759-ல் ஏற்பட்ட கொள்ளை நோய்கள் மற்றும் கி.மு763-ல் ஏற்பட்ட சூரிய கிரகணம் நினிவேயின் மனம்திரும்புதலுக்கு உதவியது. மேலும் யோனாவின் நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பிற்கு தேசத்தை ஆயத்தப்படுத்தியது. 

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

யோனா இஸ்ரவேலருக்கு தீர்க்கதரிசியாக இருந்தாலும், இஸ்ரவேலில் எங்கும் அவரது தீர்க்கதரிசன ஊழியம் அறியப்படவில்லை. இதுவே பரிசேயர் இயேசுவின் நாட்களில் கலிலேயாவில் இருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை என்று தவறுதலாக (யோவான் 7:52) கேட்கும்படிச் செய்தது. மாறாக, இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்திற்கு பல வருடங்களாக விரோதியான - அசீரியர்களின் தலைநகர் – கொடுஞ்செயலுக்கு பெயர் பெற்றிருந்த - நினிவே பட்டணத்திற்கு மனம்திரும்புதலை கூற அழைக்கப்பட்டிருந்தார் எனவும் அவர் நினிவே பட்டணத்திற்குச் செல்ல மறுத்தார் எனவும் நாம் காண்கிறோம். நோவாவின் கொள்ளுப்பேரன் நிம்ரோத்தினால் (ஆதி.10:6-12) நிறுவப்பட்டிருந்த  புறஜாதியாரின்  பட்டணமே இந்த புத்தகத்தின் மைய்யமாக இருக்கிறது. பண்டைய காலத்தில் அறியப்பட்டிருந்த பட்டணங்களிலேயே மிகப்பெரிய பட்டணமாக இருந்த இது (1:1; 3:2,3; 4:11), யோனாவின் வருகையினால் அவர் காலத்து தலைமுறையினர் மனம்திரும்பினாலும், அதற்குபின் 150 வருடங்கள் கழித்து கி.மு.612-ல் நாகூம் (நாகூம்1:1) தீர்க்கதரிசனமாக உரைத்தது போலவே அழிக்கப்பட்டது. அரசியல் ரீதியாக இஸ்ரவேல் அசீரியரை வெறுத்தது உடன் தேவனுடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் என்ற ஆவிக்குரிய மேட்டிமையும் சேர்ந்து, யோனாவை பணித்தள ஊழியத்திற்கு தேவன் அழைத்த போது, கீழ்ப்படியாத ஒரு மனப்பான்மையை யோனாவிற்குள் ஏற்படுத்தியது. இஸ்ரவேலோ அனேக தீர்க்கதரிசிகள் வந்து பிரசங்கித்தும் மனம் திருந்தாது இருந்தது. ஆனால் தேவனை அறியாத மக்கள் மத்தியில் அன்னியன் ஒருவன் வந்து பிரசங்கிக்கையில் அத்தேசத்தினர் மனம்திரும்பினர் என்று அறிந்து, இஸ்ரவேல் வெட்கப்படும்படிக்கே - நினிவே பட்டணத்திற்கு யோனா அனுப்பப்பட்டார். சீக்கிரத்தில் அவருடைய உடன்படிக்கைக்குள் இருக்கின்ற மக்கள் மத்தியில் மட்டுமல்ல (ஆதி:9:27; 12-3; லேவி.19:33,34; 1சாமு.2:10; ஏசாயா:2:2; யோவேல்:2:28-32), ஏனைய மனுஷர் மற்றும் மிருக ஜீவன்களிடத்திலும் கூட தேவனுடைய அன்பும் இரக்கமும் காட்டப்படுகிறது என்பதைக் கற்றுக் கொண்டார் (4:2,10,11).

 

சுருக்கம்

I. ஏதோமியரை தேவன் நியாயம் தீர்த்தல் (1-14)

அ. ஏதோமின் தண்டனை (1-9)

ஆ. ஏதோமின் குற்றங்கள் (10-14)

II தேசங்கள் மீது தேவனின் நியாயத்தீர்ப்பு (15,16)

III. இஸ்ரவேலை தேவன் மீண்டும் சீரமைத்தல் (17-21)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.