வேதாகம வரலாறுகள்

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம்

தலைப்பு: 

எசேக்கியேல் என்னும் இப்புத்தகத்தை எழுதிய  ஆசிரியரின் (1:3; 24:24) பெயரே இந்த புத்தகத்திற்குத் தலைப்பாயிற்று, இப்பெயர் பரிசுத்த வேதாகமத்தில் வேறு எந்த பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை. இப்பெயரின் அர்த்தம் “தேவனால் பெலப்படுத்தப்பட்டவர்”. தீர்க்கதரிசன ஊழியத்திற்கு தேவனின் அழைப்பைப் பெற்ற இவர் (3:8,9), தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றிய போது இந்த பெயரின் அர்த்தம் இவர் வாழ்வில் நிறைவேறியது. தேவன் தம்முடைய சொந்த ஜனம், நாடு கடத்தப்பட்ட ஜனங்களிடம் சொல்லும் செய்தியை தெரியப்படுத்தவும், சித்தரித்துக் காட்டவும் எசேக்கியேல் தரிசனங்கள், தீர்க்கதரிசனங்கள், உவமைகள், சின்னங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்துகிறார்.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

வசனம் 1:1ல் நாம் காணும் ”முப்பதாம் வருஷம்” எசேக்கியேலின் காலத்தைக் குறிப்பிடுகின்றது என எடுத்துக் கொண்டால், அவர் சிறைபட்டு போனபோது வயது 25 ஆகவும் ஊழியத்திற்கு அழைப்பைப் பெற்ற போது 30 ஆகவும் இருந்திருக்க வேண்டும். ஆசாரியர்கள் தங்கள் பொறுப்பை முப்பதாவது வயதில் ஆரம்பிப்பர், என்பதால் எசேக்கியேலின் வாழ்க்கையில் இது குறிப்பிடதக்க வயதாக இருந்தது. அவரது ஊழியம் கி.மு. 593/92 வில் ஆரம்பித்து 22 வருடங்கள் அதாவது கி.மு. 571/70  வரை (25:17) நீடித்தது.  எரேமியா (எசேக்கியேலை விட ஏறக்குறைய 20 வயது மூத்தவர்) மற்றும் தானியேல் (தானியேலின் வயது எசேக்கியேலின் வயது தான்) எசேக்கியேல் இவ்விரு தீர்க்கதரிசிகளின் சமகாலத்தவர். 14:14,20; 28:3 வசனங்களில் ஏற்கெனவே அறிந்திருக்கும் தீர்க்கதரிசி என எசேக்கியேல் குறிப்பிடுகிறார். எரேமியா (எரே.1:1) மற்றும் சகரியா போன்று எசேக்கியேல் – ஆசாரியரும் தீர்க்கதரிசியுமாக இருந்தவர் (சகரி.1:1; நெகேமியா 12:16 உடன்). இவருடைய ஆசாரியத்துவ பிண்ணணியினால், இவர் தேவாலயத்திற்கு அடுத்த காரியங்களில் அதிக நாட்டம் உடையவராக, பரிச்சயம் நிறைந்தவராக இருந்தார். இதனால், தேவாலயம் குறித்து எசேக்கியேல் அதிகமாக எழுதும்படிக்கு தேவன் அவரைப் பயன்படுத்தினார் (8:1-11:25; 40:1-47:12). 

எசேக்கியேல் மற்றும் அவரது மனைவி (24:15-27-ல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது) கி.மு. 597-ல் பாபிலோனியரால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட 10,000 யூதர்களில் ஒருவராக இருந்தனர். பாபிலோனுக்கு தென்கிழக்கு பகுதியில் இருந்திருக்கலாம் எனக் கருதப்படும் கேபார் நதியண்டையில் தெலாபீபில் வாழ்ந்திருந்தனர். நாடுகடத்தப்பட்டு இருந்த வேளையில், எசேக்கியேல் என் மனைவி செத்துப் போனாள் என எசேக்கியேல் 24:18-ல் குறிப்பிடுகிறார். ஆனால், எசேக்கியேலின் மரணத்தை அவரது புத்தகம் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக, ரபீமார்களின் பாரம்பரியம்  கி.மு.560-ல் இஸ்ரவேல் இளவரசனின் விக்கிரகாரதனையை எசேக்கியேல் எதிர்த்த போது அவன் கைகளில் மரித்துப் போயிருக்கலாம் எனத் தெரிவிக்கிறது. 

முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, கேபார் நதியண்டையிலே – பாபிலோனில் (கல்தேயர் தேசம்) சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, கி.மு. 593-ல் எழுதும் ஆசிரியர் தீர்க்கதரிசனம் உரைக்க அழைப்பைப் பெற்றார். யோயாக்கீம் ராஜா அரசாண்ட ஐந்தாம் ஆண்டில் கி.மு.597-ல் இது சம்பவித்தது. எசேக்கியேல் தனது தீர்க்கதரிசன வார்த்தைகளை குறித்து அதிகமான இடங்களில் கி.மு.597-ல் இருந்து உள்ள நாட்களில் எனக் (8:1;20:1; 24:1; 26:1; 29:1; 30:20; 31:1;) குறிப்பிடுகிறார். எசேக்கியேலின் தீர்க்கதரிசன வார்த்தைகளின் காலம் - எருசலேம் கடைசியாக வீழ்ந்த கி.மு. 586-க்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து கி.மு. 573/72-ல் நடைபெற்றதாக எசே.40:1-ல் குறிப்பிடுகிறார். இப்படி குறிக்கப்பட்ட காலவரிசையில், கடைசி நாட்கள் கி.மு. 571/70  என வசனம் 29:17-ல் காண்கிறோம். 1-28-ஆம் அதிகாரங்களில் நாம் காணும் தீர்க்கதரிசனங்கள் கால வரிசைப்படி வரிசையாக இருக்கின்றன. 29:1-க்கு நாம் வரும் போது, 26:1-க்கு முந்திய வருடத்திற்கு பின்செல்கிறார். எனினும் 30:1-லிருந்து மீண்டும் கண்டிப்புடன் காலவரிசையைப் பின்பற்றுகிறார் (31:1; 32:1,17).

பிண்ணனி மற்றும் அமைப்பு

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைந்து இருந்த இஸ்ரவேலரின் ராஜ்யம் – சவுல், தாவீது மற்றும் சாலமோனின் தலைமையில் 110 வருடங்கள் நீடித்தது (கி.மு. 1043-931). அதன்பின் பிரிந்த ராஜ்யம், இஸ்ரவேல் (வடக்கு) மற்றும் யூதா (தெற்கு) கி.மு. 931-லிருந்து கி.மு. 722/21 வரை நீடித்தது. அசீரியர்களுடனான போரில் இஸ்ரவேல் தோல்வியடைந்தது. அதனால், எஞ்சியிருந்த யூதா ராஜ்யம் 135 வருடங்கள் நீடித்தது, அதுவும் பாபிலோனின் படையெடுப்பினால் கி.மு. 605-586-ல் வீழ்ந்தது. அமைப்பினை நெருக்கமாக பார்க்கும் போது, போர் தந்திரங்களுக்கு ஏதுவாகவே அனேக அம்சங்கள் இருப்பதைக் காணலாம். அரசியல் அமைப்பில், அசீரியர்களின் பெருமிதமாக இருந்த இராணுவம் கி.மு. 626-ற்குப் பின் வீழ்ந்தது. உடன் தலைநகர் நினிவே பாபிலோனியர் மற்றும் மேதியர்களால் (காண்க நாகூம்) கி.மு. 612ல் அழிக்கப்பட்டது. புதிய பாபிலோனிய பேரரசு கி.மு.625-ல் மபோபொலாசார் தலைமைஏற்று சிம்மாசனத்தில் அமர்ந்ததும் பலம் பெற்றது, மேலும் எகிப்தின் பார்வோன் நெகோ II தலைமையின் கீழ் எந்த ராஜ்ஜியங்களை எல்லாம் கைப்பற்ற முடியுமோ அவற்றையெல்லாம் கைப்பற்றியது.

பாபிலோன் (கல்தேயர்) அசீரியா தேசத்தை கி.மு. 612-605ல் அடித்து நொறுக்கி, எகிப்திற்கு விரோதமாக தீர்மானிக்கும் வெற்றியை கி.மு.605-ல் கர்கேமிசிலே பெற்றது, பாபிலோனியர்களின் நாளாகமத்தின்படி பார்ப்போமானால், ஒருவரையும் தப்ப விட்டுவிடவில்லை எனக் காண்கிறோம். கி.மு.605-ல் நெபுகாத்நேச்சாரின் தலைமையின் கீழ் பாபிலோன் எருசலேமைக் கைப்பற்றி பிடிக்கப்பட்டவர்களை நாடு கடத்தியது, அவர்களில் ஒருவர் தான் தானியேல் (தானியேல்1:2). கி.மு. 598 டிசம்பர் காலத்தில் எருசலேமை முற்றுகையிட்டார், மார்ச் 16, கி.மு.597-ல் முற்றிலும் கைப்பற்றினார். இந்த முறை யோயாக்கீம் மற்றும் 10,000 பேருடன், எசேக்கியேலையும் சிறைபிடித்தார் (2ராஜா. 24:11-18). கி.மு. 586-ல் எருசலேம் இறுதியாக அழிக்கப்பட்டு, யூதா தோற்கடிக்கப்பட்டு, மூன்றாவது நாடு கடத்தப்படும் சம்பவம் நிறைவேறியது.

கர்த்தரைப் பின்பற்றுவதில், யோசியா ராஜா (கி.மு. 640-609-ல் யூதாவில் அனேக சீர்திருத்தங்களைச் செய்தார் (2நாளா.34). சோகமான விஷயம் என்னவென்றால், அவருடைய முயற்சி அதிகம் இருந்தபோதிலும், யூதர்களின் விக்கிர ஆராதனை அவர்களை அதிகமாய் ஆட்கொண்டிருந்தது – அதாவது எடுக்கப்பட்ட சீர்திருத்தங்களின் பலன் மொத்தத்தில் “மேலோட்டமானதாகவே” இருந்தது. எகிப்திய இராணுவம் யோசியவைக் கொன்று, கி.மு.609-ல் இஸ்ரவேலைக் கடந்து சென்றது, யூதா பாவத்தில் மூழ்கி, யோவகாஸ் (கி.மு.609), யோயாக்கீம் (கி.மு.609-598) யோயாக்கீமின், மற்றும் சிதேக்கியா (கி.மு.597 -586) தலைமையில் நியாயத்தீர்ப்பிற்கு நேராகச் சென்றது. உள்நாட்டு விவகாரத்தில், எசேக்கியேல் மற்றும் அவருடன் நாடு கடத்தப்பட்ட  10,000 பேர், பாபிலோனில் நாடுகடத்தப்பட்டவர்களாக வாழ்ந்தனர் (2ராஜா.24:14). கைதிகளுக்கு இருப்பதைக் காட்டிலும் மேலான சில உரிமைகள், அதாவது உழுது பயிர்செய்தல் போன்ற சாதகமான சூழ்நிலையில் குடியேற்றக்காரர்களாக வாழ்ந்தனர் (எரே.29). எசேக்கியேலுக்கு என சொந்தவீடும் இருந்தது என 3:24; 20:1-ல் காண்கிறோம்.

தீர்க்கதரிசன ரீதியாக, கள்ள தீர்க்கதரிசிகள் நாடுகடத்தப்பட்டு வந்தவர்களிடம் சீக்கிரத்தில் யூதா தேசத்திற்கு திரும்புவீர்கள் என்று சொல்லி வஞ்சித்து வந்தனர் (13:3,16; எரே.29:1). கி.மு. 593-585 வரை எசேக்கியேல் அவர்களுக்கு அருமையான எருசலேம் பட்டணம் நிர்மூலமாக்கப்படும். அதினால், அவர்கள் உடனடியாக் நாடு திரும்பக்கூடிய நம்பிக்கை இல்லை என எச்சரித்து வந்தார். கி.மு.585-ல் எருசலேமில் இருந்து பாபிலோனியர் கண்களுக்குப்படாமல் தப்பித்து வந்த ஒருவன், எசேக்கியேலை வந்தடைந்து, எருசலேம் பட்டணம் ஆறு மாதங்களுக்கு முன்பே கி.மு.586-ல் சரிந்து விழுந்து விட்டது என்பதனை அறிவித்தான் (33:21). இது அன்னிய தேசத்தில் இருந்தவர்களுக்கு சீக்கிரத்தில் தங்கள் தேசத்திற்கு திரும்புவோம் என்றிருந்த கொஞ்ச நம்பிக்கையைக்கூட தவிடுபொடியாக்கிவிட்டது. அதினால் எசேக்கியேலின் பின்னால் வரும் தீர்க்கதரிசனங்கள் - எதிர்காலத்தில் இஸ்ரவேல் தன் சொந்த தேசத்திற்குச் செல்ல மீட்டெடுக்கப்படும் என்பது குறித்தும்,  மேசியாவின் இராஜ்யத்தில் உண்டாகும் இறுதி ஆசீர்வாதங்களைக் குறித்து மட்டுமே பேசியது.

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

”இதுவே கர்த்தருடைய மகிமை” என்பதே எசேக்கியேல் புத்தகத்தின் மைய்ய கருத்து; இதனை 1:28; 3:12,23; 10:4, 18; 11:23; 43:4,5; 44:4 வசனங்களில் காண்கிறோம். தேவனது அன்பின் வெளிப்பாட்டின் மத்தியிலும் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் கீழ்ப்படியாமையை சித்திரமாக விளக்குவதும் இந்த புத்தகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது (அதிகாரம் 23 மற்றும் 16ஐ காண்க). இஸ்ரவேல் கனி கொடுப்பதும் அதன் பலன், அவர் ஆசீர்வதிக்க இயன்றதாக இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் என்பதை இது காட்டுகிறது. தீப்பற்றி எரிந்த திராட்சைச்செடி போன்று (அதிகாரம் 15), யூதா சுய இச்சையில் இழுப்புண்டு விழுந்தது, யூதாவை நியாயத்தீர்ப்பிற்குள்ளாகச் செல்லும்படி ஆயத்தப்படுத்தியது. இஸ்ரவேலரின் விக்கிரக ஆராதனை மற்றும் அதினால் விளைந்த விளவுகள் குறித்து வேதாகமத்தில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன் – உதாரணமாக, ”பெலத்தியா செத்தான்” (எசே.11:13) என்ற வார்த்தையின் வெளிப்பாடு, ஜனங்களுக்கு ஒட்டுமொத்த பேரழிவு நேர்வதின் அடையாளமாக இருந்தது.

ஆவிக்குரிய நியதிகளை/ விதிகள (Principles) பல அழகிய காட்சிகள் சித்தரிக்கின்றன. அவைகளில் ஒன்று எசேக்கியேல் புஸ்தகச் சுருளை உண்பது (அதிகாரம் 2). நான்கு தேவதூதர்களின் முகங்கள் “வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும், சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன” (1:10). “முடிதிருத்தம் செய்யும் காட்சி (5:1-4). 8:10-ல் நாம் காணும் “சுவற்றில் சித்திரம் தீட்டப்பட்டிருந்த உருவங்கள் காட்சி” (8:10) மூலம் நாம் அறிவது தேவன் அவரது வாசஸ்தலம் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறார், அசுத்தமானதாக அல்ல என்பதைக் காட்டுகிறது. கெரூபீன்கள் நடுவில் இருக்கும் அக்கினித்தழல் நியாயத்தீர்ப்பைச் சித்தரிக்கிறது (10:2,7).

இறையியல் கருப்பொருளில் மிக முக்கியமானதாக – தேவனுடைய பரிசுத்தமும் இறையாண்மையும் இருக்கின்றன - இக்கருப்பொருள் யூதாவின் பாவங்கள் (1:26-28) பிண்ணனியில் தேவனுடைய பிரகாசமான மகிமையைய சித்தரித்துகாட்டி நமக்கு தேவனுடைய பரிசுத்தத்தின் மேன்மையினை எடுத்துக் காட்டப்படுகிறது, இக்கருத்தை அதிகமாக அதிகாரங்கள் 8-11 மற்றும் 43:1-7ல் காணலாம். அனைவரும் ”நானே கர்த்தர் என்று அறிந்து கொள்ளுங்கள்” என்பதினால் தேவனுடைய மகிமையான வெற்றி இவ்வார்த்தைகளுடன் தொடர்புடையது என நாம் அறிந்து கொள்கிறோம். தேவன் தனது செயல்பாடுகளை அங்கீகரிக்கும் அடையாளம் ”நானே கர்த்தர் என்று அறிந்து கொள்ளுங்கள்” என்பது. இந்த சொற்றொடர் 60 தடவைக்கும் மேலாக இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, பொதுவாக நியாயத்தீர்ப்புடன் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது (6:7; 7:4). ஆனால், சில இடங்களில் மீட்டுஎடுப்பேன் என்ற வாக்குதத்தத்துடன் சொல்லப்பட்டுள்ளது (34:27; 36:11,38; 39:28). பிண்ணனியில் தேவன் நியமித்திருக்கும் நிகழ்ச்சிகளை தேவனுடைய தூதர்கள் செயல்படுத்துவது இப்புத்தகத்தின் மற்றொரு அம்சம் (1:5-25;10:1-22). நீதியைப் பின்பற்றி நடக்கவேண்டும் தவறினால் ஒவ்வொருவரும் கணக்கு கொடுக்க வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான கருப்பொருள் (18:3-32).

இஸ்ரவேல் தேசத்திலும் (2:3-7; 8:9,10) மற்ற தேசங்களிலும் (அதிகாரங்கள் 25-32) பாவம் நிறைந்துள்ளது என்பதனை எசேக்கியேல் சுட்டிக்காட்டுகிறார். பாவத்துக்காக  நியாயம் தீர்க்க வேண்டி எழும்பிய தேவ கோபாக்கினையின் அவசியத்தைக் குறித்தும் பேசுகிறார். எருசலேம் முற்றுகையிடப்பட்டதில் இருந்து தப்பிக்க மனுஷன் எடுக்கும் உபாய தந்திரங்களினால் தேவன் மனமடிவடைந்தார் எனவும் எடுத்துக்காட்டுகிறார் (12:1-13; எரே. 39:4-7) மேலும் ஆபிரகாமின் உடன்படிக்கைக்குரிய ஜனங்களுக்கு (ஆதி. 12:1-3) அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், உடன்படிக்கையின் தேசத்தில் ஆபிரகாமின் சந்ததியினர் தேவனுடைய கிருபையினால் மீட்டு எடுக்கப்படுவது நிறைவேறினது என்பதைக் குறித்தும் பேசுகிறார் (அதிகாரங்கள் 34, 36-48; ஆதி.2:7). மீந்திருக்கும் இஸ்ரவேலர்களை பாதுகாப்பேன் என்ற தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுதலால், தேவன் அவர் அளித்த வாக்குதத்தங்களை நிறைவேற்றி, அவரது வார்த்தையைத் தீட்டுப்டாதபடிக்குப் பாதுகாக்கிறார் என்பதைக் கற்றுக் கொள்கிறோம். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

ஏசாயா, எரேமியாவைப்போல் எசேக்கியேலும் அதிக அளவில் உருவக மொழியினைப் பயன்படுத்துகிறார். இதினால், எசேக்கியேலின் படைப்பில் நேரடியான அல்லது அடையாளப்பூர்வமான அர்த்தம் எடுத்துக்கொள்வதா என்ற கேள்வி எழுகிறது. உதாரணமாக, 3:25-ல் நாம் காணும் இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள் என்பது; 8:1-3-ன்படி, எருசலேமிற்கு தீர்க்கதரிசி கொண்டு செல்லப்பட்டாரா? அதிகாரம் 14:22,23-ல் பொல்லாதோர் மரணத்தில் இருந்து தப்பித்தனர் என்றும் சில தேவபக்தியுள்ளவர்கள் படையெடுப்பின் போது மரித்தனர் என 21:3,4ல் - இருக்கும் போது எப்படி அதிகாரம் 18ல் தனிநபரின் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது? தேவன் தமது உண்மையுள்ள ஊழியனின் மனைவி மரிக்க (24:15-27) எப்படி இடம் கொடுத்தார்? அதிகாரங்கள் 25-32ல் சொல்லப்பட்டிருக்கும் அன்னிய தேசங்களின் மீதான சில நியாயத் தீர்ப்புகள் எப்பொழுது நிறைவேறும்? 40-46 ஆம் அதிகாரத்தில் நாம் காணும் தேவாலயம் உண்மையானதா அப்படியானால் அதன் தோற்றம் என்ன? சபையுடன் தேவன் செயல்முறைத் திட்டங்களுக்கும் இஸ்ரவேலரின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் செய்திருந்த வாக்குத்தங்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டிருக்கிறது? போன்றவை நமக்கு முன் விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்களில் சில.

சுருக்கம்

இப்புத்தகத்தினை பழிவாங்கல்/ கண்டனம் என்பதுவும் ஆறுதல்/ மீட்டமைத்தல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் பிரிக்கலாம். இன்னும் விளக்கமாகப் பார்த்தால், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது, எருசலேமின் இடிபாடுகளைக் குறித்த தீர்க்கதரிசங்களை அதிகாரங்கள் 1-24ல் காண்கிறோம். இரண்டாவது, அண்டைய தேசங்களைப் பழிவாங்குவது குறித்த தீர்க்கதரினசங்களை அதிகாரங்கள் 25-32ல், உடன் அதில் 28:25,26 ல் தேவன் எதிர்காலத்தில் மீட்டுஎடுப்பார் என்பதற்கான சிறிய குறிப்பையும் காண்கிறோம். மூன்றாவது, மாற்றத்திற்கான ஓர் அதிகாரம், அதிகாரம் 33 – இந்த அதிகாரம்; இஸ்ரவேலை மனம் திரும்ப அழைத்து அறிவுரை கூறுகிறது. இறுதியாக தேவன் இஸ்ரவேலை எதிர்காலத்தில் மீட்டமைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பினை நான்காவது பிரிவில் காண்கிறோம் (அதிகாரங்கள் 34-38).

I.எருசலேமின் இடிபாடுகளைக் குறித்த தீர்க்கதரிசங்கள் (1:1- 3:27)

அ. எசேக்கியேலை ஆயத்தப்படுத்தி பொறுப்பில் அமர்த்துதல் (1:1-3:27)
1.எசேக்கியேலுக்கு தேவன் வெளிப்படல்(1:1-28)
2.எசேக்கியேலுக்கு வரும் தெய்வீக கட்டளை (2:1-3:27)

ஆ. எருசலேமின் தண்டனையை பிரகடனப்படுத்துதல் (4:1- 24:27)
1. நியாயத்தீர்ப்பு வருகின்றது என்பதற்கான அடையாளங்கள் (4:1 – 5:4)
2. நியாயத்தீர்ப்பு குறித்தச் செய்திகள் (5:5-7:27)
3. பட்டணத்திலும் ஆலயத்திலும் காணப்படும் அருவருப்பு 
குறித்த தரிசனங்கள் (8:1 -11:25)
4. நியாயத்தீர்ப்பு குறித்த விளக்கங்கள் (12:1 -24:27)
 
II. தேசங்கள் பழிவாங்கப்படும் என்பதற்கான தீர்க்கதரிசனங்கள் (25:-32:32)
அ. அம்மோன் (25:1-7)
ஆ. மோவாப் (25:8-11)
இ. ஏதோம் (25:12-14)
ஈ. பெலிஸ்தியா (25:15 – 17)
உ. தீரு (26:1 -28:19) 
ஊ. சீதோன் (28:20–24)
    தனிக்குறிப்பு: இஸ்ரவேல் மீட்டெடுக்கப்படும் (28:25,26)
எ. எகிப்து (29:1- 32:34)
 
III. இஸ்ரவேலின் மனந்திரும்புதலுக்காக முன் ஏற்பாடுசெய்தல் (33:1-33)
 
IV. இஸ்ரவேல் மீட்டெடுக்கப்படும் என்பதற்கான தீர்க்கதரிசனங்கள் (34:1 – 48:35)
அ. இஸ்ரவேலை தேசத்திற்கு மீண்டும் கொண்டுவருதல் (34:1 – 37:28)
1. மெயான மேய்ப்பன் வாக் குத த் தமாக அளிக்கப்படுதல் (34:1-31)
2. தேசங்களுக்குரிய தண்டனை வழங்கப்படுதல் (35:1 – 36:7)
3. மீட்டெடுக்கப்படுதலின் நோக்கங்கள் (36:8 -38)
4. மீட்டமைக்கப்படுதலின் காட்சிகள் – உலர்ந்த எலும்புகளும் இரண்டு குச்சிகளும் (37:1-28)
 
ஆ. இஸ்ரவேலின் எதிரிகள் தேசத்தில் இருந்து அகற்றப்படுதல் (38:1 – 39:29)
1. இஸ்ரவேலைக் கொள்ளையடிக்க கோகின் படையெடுப்பு (38:1 -16)
2. இஸ்ரவேலைப் பாதுகாக்க தேவனின் தலையீடு (38:17 -39:29)
 
இ. இஸ்ரவேலில் மெய்யான ஆராதனையை மறுசீரமைத்தல் (40:1 - 46:24)
1. புதிய தேவாலயம் (40:1 – 43:12)
2. புதிய ஆராதனை (43:13 – 46:24)
 
ஈ. இஸ்ரவேலில் தேசம் மறுபடியும் பங்கிடப்படுதல் (47:1 – 48:35)
1. ஆற்றின் அமைப்பு (47:1 -12)
2. கோத்திரங்களின் அமைப்பு (47:13 – 48:35)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.