வேதாகம வரலாறுகள்

நீதிமொழிகள்

தலைப்பு

எபிரேய வேதாகமத்தில் இதன் தலைப்பு ”சாலமோனின் நீதிமொழிகள்” - கிரேக்க செப்டுவாஜிண்ட் (LXX) தலைப்பும் ”சாலமோனின் நீதிமொழிகள்” (1:1) என்பதே. சாலமோன் பேசிய 3000-க்கும் (1ராஜா.4:32; பிரசங்கி 12:9) மேற்பட்ட நீதிமொழிகளில் இருந்தும் சாலமோனின் செல்வாக்கு பெற்ற வேறுசிலரின் நீதிமொழிகளில் இருந்தும் அதிமுக்கியமான 513 நீதிமொழிகளை ஒன்று சேர்த்தது – இந்த நீதிமொழிகள் புத்தகம். நீதிமொழி என்றால் ”போல் இருக்க வேண்டும்” என்பது. ”பொதுவானவற்றுக்கும், உறுதியான காட்சிகளுக்கும் மற்றும் வாழ்க்கையின் ஆழ்ந்த சத்தியங்களுக்கும் இடையில் ஒப்பீடு” செய்யும் புத்தகமே நீதிமொழிகள். வாழ்க்கையின் அடிப்படைச் சத்தியங்களை மேம்படுத்திக் காட்டி அவைகளை கற்றுக் கொடுக்கும் எளிய, நீதி நிறைந்த வார்த்தைகள் (விளக்கங்கள்) தான் நீதிமொழிகள். 2நாளா.1:8-12-ல் சாலமோன் தேவனுடைய ஞானத்தை தேடினார் - மனுஷர்களை சிந்திக்க வைக்கவும் ”சுருக்கமும் ஆற்றலும் கொண்ட” வார்த்தைகளைப் பேசினார் எனக் காண்கிறோம். 1) தேவனுக்கு பயப்படும் பயம் 2) அவருடைய ஞானத்தின்படி வாழ்தல் (1:7; 9:10). இந்த ஞானத்தின் தொகுப்பே நமக்காக மனிதனாக வந்த இயேசு.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

”சாலமோனின் நீதிமொழிகள்” (1:1) என்ற சொற்றொடர் - ஆசிரியரைக் குறித்துச் சொல்லும் முழுமையான அறிக்கையாக எடுத்துக் கொள்ளாமல், ”தலைப்பு“ என்ற அளவிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இஸ்ரவேலை கி.மு.971-931 வரை சாலமோன் ராஜா ஆண்டபோது, தேவன் அவருக்கு சிறப்பான ஞானத்தை தந்தார் (1ராஜா. 4:29-34); உபதேச பகுதிகள் (அதிகாரங்கள் 1-9); நீதிமொழிகள் 10:1-22:16-ல் காணப்படும் நீதிமொழிகள்; 22:17-24:34-ல் காணப்படும் ”ஞானிகளுடைய வார்த்தைகள்” (சாலமோனின் அரசாட்சிக்கு முன் - தேதி அறியப்பட முடியாதனவற்றினை) சாலமோன் தொகுத்து எழுதினார். அதிகாரங்கள் 25-29-ல் உள்ள தொகுப்பு சாலமோனால் தொகுக்கப்பட்டவை (25:1). அவைகளை பிரதியெடுத்து பின் நாளில் யூதாவின் ராஜா எசேக்கியா புத்தகத்தில் சேர்த்தார் (கி.மு.715-686). 30-ம் அதிகாரம் ஆகாரின் வார்த்தைகளையும், 31-ம் அதிகாரம்  லெமுவேலின் (ஒருவேளை அவர் சாலமோனாக இருந்திருக்காலம்) வார்த்தைகளையும் பிரதிபலிக்கின்றன. நீதிமொழிகள் புத்தகம் எசேக்கியாவின் நாட்கள் அல்லது அதற்குப் பின்வரை, நாம் இன்று காணும் புத்தகமாக ஒன்று சேர்க்கப்படாதிருந்தது. 

இப்புத்தகம் தெய்வீக நோக்கத்தை வெளிப்படுத்தி, ”கபடில்லாதவர்கள்” மற்றும் கர்த்தருக்கு பயப்படும் பயத்தை கற்றுக் கொள்ள வேண்டிய “வாலிபரைக்” குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது என்பதால், சாலமோனின் இருதயம் தேவனை விட்டு பின்வாங்கி போவதற்கு முன் - சாலமோன் நீதிமொழிகள் புத்தகத்தை எழுதினார் என்று அறிந்து கொள்கிறோம் (1ராஜா.11:1-11). சங்கீதம் 72, 127-ஐயும், பிரசங்கி மற்றும் உன்னதப்பாட்டு புத்தகத்தையும் சாலமோன் எழுதியுள்ளார்.

பிண்ணனி மற்றும் அமைப்பு

இந்த புத்தகம் மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது 1) பொது ஞான இலக்கியம் 2) ராஜரீக அவையில் இருந்து வரும் உட்கருத்துக்கள் 3) தேவனை தியானிக்கும் தியானம் செய்யும் பழக்கத்தை பிள்ளைகளிடத்தில் உருவாக்க ஏதுவாக, தாய்க்கும் தகப்பனுக்கும் - தங்கள் பிள்ளைகளுடன் காணப்படும் மென்மையான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகள். நீதிமொழிகள் புத்தகம் ஞான புத்தகமாக இருக்கின்றபடியால், இயல்பாகவே இதனைப் புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கிறது (1:6). ஞான இலக்கியங்கள் பழைய ஏற்பாட்டு சத்தியத்தின் ஒரு பகுதி, ஆசாரியர்கள் நியாயப்பிரமாணத்தை (வேதம்) தந்தனர், தீர்க்கதரிசிகள் கர்த்தரிடத்தில் இருந்து வார்த்தையைப்                       (வசனத்தை) பெற்றுத் தந்தனர்; ஞானிகள் (ஞானம்) ஆலோசனைகளைத் தந்தனர். (எரேமியா 18:18; எசே. 7:26). நியாயப்பிரமாணத்திலோ அல்லது தீர்க்கதரிசன வார்த்தைகளில் நேரடியாக தீர்வு அளிக்காதவற்றிற்க்கு - நீதிமொழிகள் புத்தகத்தில் வாழ்க்கையில் “முடிச்சு”க்களாக உள்ள பிரச்சினைகளுக்கு, சாலமோன் ஞானி  தீர்வு அளிக்கிறார்(1:6). நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தாலும், தேவனுடன் சரியான உறவு கொண்டிருக்கும் போது நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி தார்மீக மற்றும் நெறிமுறைப்படுத்தும் வார்த்தைகளைத் தான் பேசுகிறது; நீதிமொழிகளின் கருத்து மேலோட்டமானதாகவோ அல்லது வாழ்க்கைக்கு சம்மதமாக இல்லாததாகவோ இல்லை. 4:1-4-ம் வசனங்களில் சாலமோன், தாவீது மற்றும் பத்சேபாள் பாதத்தில் அமர்ந்து தான் கற்றுக்கொண்டவற்றை தன் மகன் ரெகோபெயாமிடம் ஒப்புவித்து, மூன்று தலைமுறைகளுக்கு இணைப்பு ஏற்படுத்துவதைக் காண்கிறோம். நீதிமொழிகள், மென்மையாக, சத்தியத்தை தலைமுறை தலைமுறையாக பகிர்ந்து தருவதற்கு சிறந்த உதாரணமாகவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொடுப்பதற்கென்று சத்தியத்தை பெற்றிருக்கும் மிகப்பெரிய ஆதாரமாகவும் இருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் தெய்வீக குணாதிசயத்தை முன்மாதிரியாக வெளிப்படுத்தியவர்கள் – பயன்படுத்திய வேதவாக்கியங்களின் அடிப்படையிலான கோட்பாடுகளால், பயன்பாடுகளால் நீதிமொழிகள் நிறைந்திருக்கிறது.

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

மிகப்பெரிய வாக்குத்தத்தம், சிலாக்கியம் மற்றும் சந்தர்ப்பம் பெற்றவராக சாலமோன் ராஜாவாக சிம்மாசனத்தில் அமர்ந்தார். தேவன் அவருக்கு ஞானத்தையும் புத்தியையும் (1ராஜா.4:29; 2 நாளா.1:10-12) தந்தார். அதினால், மற்றவர்களைவிட சாலமோன் ஞானத்தில் சிறந்திருந்தார் (1 ராஜா.4:29-31). ஆனால், அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், அவர் அறிந்திருந்ததும், தன் மகன் ரெகோபெயாமுக்குக் கற்றுத் தந்ததுமான சத்தியத்தின்படி வாழ்வதில் இருந்து அவர் தவறிவிட்டார். மேலும் அவருக்கு அவரின் தகப்பன் தாவீது கற்றுத் தந்த பாடங்களையும் நிராகரித்தார் (1ராஜா.12:6-11).

நீதிமொழிகள் - வேதாகம கருப்பொருட்களின் தங்கச் சுரங்கம் எனலாம். (1:3) - மனுஷனின் நெறிமுறைத் தேர்வு, அவன் எப்படி சிந்திக்கிறான், வாழ்கிறான், மேலும் அவனது அன்றாட வாழ்க்கையை எப்படி நிர்வகிக்கிறான் என்பவற்றினைத் தேவனுடைய சத்தியத்தின் வெளிச்சத்தில் கேள்வி எழுப்பி - நடைமுறை வாழ்க்கையில் நீதிநிறைந்த வாழத் தேவையான மட்டத்திற்கு வேதவாக்கியங்களின் கருப்பொருட்களை உயர்த்தியுள்ளது. குறிப்பிட்டுச் சொல்வோமானால், நீதிமொழிகள் மனுஷனை தேவன் சிருஷ்டித்த போது, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழும்படிக்கு அவனை எதிர்பார்த்தாரோ – அப்படிப்பட்ட வாழ்க்கை வாழும்படிக்கு மனுஷனை அழைக்கிறது (சங்.90:1,2,12).  

நீதிமொழிகள் புத்தகத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் வாக்குதத்தம் – பொதுவாக ஞானவான்கள் (தேவனுக்கு கீழ்ப்படியும் நீதிமான்கள்) தீர்க்காயுசுடன் (9:11), செழிப்புடன் (2:20-22) மகிழ்ச்சியை அனுபவித்து (3:13-18), தேவனுடைய நன்மையை தற்காலிகமாக பெற்று (12:21) வாழ்வார்கள், மதியீனர் வெட்கம் (3:35) மற்றும் மரணத்தை (10:21) அடைவார்கள். மறுபக்கம் பார்ப்போமானால், இந்த பொதுவான நியதி - பொல்லாதோர் சிலவேளைகளில் தற்காலிகமாக மட்டுமே செழிப்பார்கள் (சங்.73:3,12) என்ற உண்மையினால் சமன்சீர் செய்யப்படுகிறது. தெய்வீக வழியில்செல்லும் ஞானவான்களும் கூட பாடுகளுக்கும், துன்பங்களுக்கும் உட்படுகிறார்கள் என்பதை யோபுவின் புத்தகம் விளக்குகிறது.

நீதிமொழிகள் புத்தகத்தில் முக்கியமான வெவ்வேறான கருப்பொருட்களுக்கு சீரற்ற வரிசைகளில் பதில் கிடைக்கிறது. ஆகையால், நீதிமொழிகள் புத்தகத்தை கீழ்க்காணும் கருப்பொருட்கள் வரிசைப்படி கற்றுக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். 

I. தேவனுடன் மனிதனுக்கு உள்ள உறவு

அ. அவனுடைய விசுவாசம்/ பற்று உறுதி   நீதி.22:19

ஆ. அவனுடைய தாழ்மை நீதி.3:34

இ. அவனுடைய தேவனுக்கு பயப்படும் பயம் நீதி.1:7

ஈ. அவனுடைய நீதி    நீதி.10:25

உ. அவனுடைய பாவம் நீதி.28:13

ஊ. அவனுடைய கீழ்ப்படிதல் நீதி. 6:23

எ. பலன்களை சந்தித்தல்    நீதி.12:28

ஏ. சோதனைகளை சந்தித்தல் நீதி.17:3

ஐ. ஆசீர்வாதங்களை சந்தித்தல்   நீதி.10:22

ஒ. மரணத்தை சந்தித்தல்   நீதி. 15:11

II மனிதன் தனக்குத் தானே கொண்டுள்ள உறவு

அ. அவனுடைய குணாதிசயம்   நீதி.20:11

ஆ. அவனுடைய ஞானம்   நீதி.1:5

இ. அவனுடைய மதியீனம்   நீதி.26:10,11

ஈ. அவனுடைய பேச்சு   நீதி.18:21

உ. அவனுடைய சுயக்கட்டுப்பாடு நீதி.6:9-11

ஊ. அவனுடைய அன்பு   நீதி.3:3

எ. அவனுடைய செல்வம்/ஆஸ்தி   நீதி.11:4

ஏ. அவனுடைய பெருமை நீதி.27:1

ஐ. அவனுடைய கோபம் நீதி.29:11

ஒ. அவனுடைய சோம்பேறித்தனம்   நீதி.13:4                        

III. மனிதன் மற்றவர்களுடன் கொண்டுள்ள உறவு

அ. அவனுடைய அன்பு   நீதி.8:17

ஆ. அவனுடைய நண்பர்கள்   நீதி.17:17

இ. அவனுடைய சத்துருக்கள்   நீதி.16:7

ஈ. அவனுடைய விசுவாசமாக இருக்கும் தன்மை   நீதி.23:23

உ. அவனுடைய வீண்பேச்சு    நீதி.20:19

ஊ. தகப்பனாக   நீதி.20:7; 31:2-9

எ. தாயாக   நீதி.31:10-31

ஏ. பிள்ளைகளாக   நீதி.3:1-3

ஐ. பிள்ளைகளை படிக்க வைப்பதில்   நீதி.4:1-4

ஒ. பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதில்   நீதி.22:6

இரண்டு மிகப்பெரிய கருப்பொருட்கள் நீதிமொழிகள் புத்தகத்தின் ஊடாக பின்னிப் பிணைந்து ஒன்றன்மீது ஒன்று சேர்ந்து செல்கின்றன – அவையாவன: ஞானம் மற்றும் மதியீனம். கர்த்தருக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் பயப்படும் பயத்தின் அடிப்படையில் வரும் ஞானம் – இதில் புத்தி, அறிவு, கட்டளை, பகுத்தறிதல் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவை அடங்கும்.  ஞானத்திற்கு அப்படியே எதிர்பதமாக இருப்பவை எல்லாம் மதியீனம்.

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

ஞான இலக்கியங்களின் பொதுவான பிடிபடாமல் இருக்கிற நடையே முதல் சவாலாக இருக்கிறது. உவமைகளைப்போல, அதில் இருந்து சொல்லப்படும் சத்தியம் பொதுவாக மேலோட்டமான பார்வை பார்த்தால் புத்திக்கு மறைவானதாக இருக்கும், அதினால் இருதயத்தில் வைத்து தியானிக்கப்பட வேண்டும் (1:6; 2:1-4; 4:4-9).

இணையான பொருத்தங்கள் அதிகமாக பயன்பட்டிருப்பது ஒரு சவால். அது என்னவென்றால், இரண்டு சத்தியங்களை ஒன்றுக்கு அருகில் மற்றொன்றுமாக வைத்து, அதில் இரண்டாவது வரி விரிவடைந்து. பூரணப்படுத்தி, விளக்கம் தந்து, வலியுறுத்தி, அல்லது தர்க்கரீதியாக இறுதியான முடிவு கிடைக்கும். முடிவு சில வேளகளில் எதிர்பதமான கருத்தைக் கூட தெரிவிக்கும்; அதிகமான வேளைகளில் இணையான பொருளையே சுட்டிக்காட்டும். உதாரணமாக, 12:13 வசனத்தில் காண்பது: சொல்லப்படாத ஆனால் இணையான பொருள் கொண்டிருக்கிறது – அதாவது நீதிமான் தனது நல்லொழுக்கமான பேச்சினால் தன் நெருக்கத்தினின்று நீங்குவான் என்பது (28:7, இதனை உறுதிப்படுத்துகிறது). நீதிமொழிகளுக்கு விளக்கம் அளிப்பதில், வாசிப்பவர் 1) இணையான அர்த்தம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது; ஆசிரியரால் என்ன சொல்லப்படவில்லை என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; 2) உருவக வாக்கியங்களில் அதன் உருவகங்களை எடுத்து விட்டு அதன் கருத்தைச் சொல்ல வேண்டும்; 3) நீதிமொழி கற்றுத் தரும் பாடம் அல்லது நீதி / நியமங்களை சிலவார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்; 4) அது கற்றுத் தரும் நடந்து கொள்ளும் முறையை விவரிக்க வேண்டும்; மற்றும் 5) வேதவாக்கியங்களில் உதாரணங்களை கண்டறிய வேண்டும்.

நீதிமொழிகள் என்ன சூழ்நிலையில் சொல்லப்பட்டன என்பதில் கூட சவால்கள் இருக்கின்றன. அவைகள் யாவும் நமது புரிந்துகொள்ளுதலையும் விளக்கம் அளிப்பதையும் பாதிக்கின்றன. முதலில், எந்த சூழ்நிலையில் அவைகள் பேசப்பட்டன; அதிகமான இடங்களில் வாலிபன் ராஜாவின் அவையில் பேசியது ஆக இருக்கும். இரண்டாவது, புத்தகம் முழுவதிற்கும் இருக்கும் அமைப்பு -  அதாவது இதன் பாடங்களை ஏனைய வேதவாக்கியங்களின் அடிப்படையில் எப்படி புரிந்து கொள்வது என்பது. உதாரணமாக, சாலமோனின் ஞானத்தை மனிதனாக அவதரித்த கிறிஸ்துவின் ஞானத்துடன் ஒப்புமை செய்து பார்ப்பதன் மூலம் அனேக விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். இதில் விளக்கம் அவர்கள் வாழ்ந்த நாட்களில் தரப்பட்டவை. அவற்றை அன்றைய வரலாற்று சூழ்நிலையைக் கொண்டு அவற்றின் கோட்பாடுகளையும், சத்தியங்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதிமொழிகள் தேவனுடையவழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஞானம் நிறைந்த அவதானிப்புக்கள் என்று ஏற்றுக்கொண்டு புரிந்து கொள்வதில் வரும் சவால்கள். அதாவது, அவற்றின் அடிப்படைக் கருத்தாக இருக்கும் (24:3,4) - என்றைக்கும் மாறாத, வளைந்துகொடுக்காத - பிரமாணங்கள் அல்லது முழுமையான வாக்குறுதிகள் இவற்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவான சத்தியத்தின் வெளிப்பாடுகளில் வாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மை மற்றும் வீழ்ந்து போன மனிதனின் நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாத படியினாலும் “விதிவிலக்குகள்” கொண்டிருக்கும் (உறுதிப்படுத்தும் வசனங்கள் 10:27; 22:4). சீரான முடிவு அல்லது பயன்பாடே ஒவ்வொரு நீதிமொழிக்கும் உண்டு - என எந்தவொரு உத்திரவாதமும் தேவன் தரவில்லை. ஆனால் அதனை வாசித்து, அதனை கடைபிடித்து, ஒருவர் தேவனின் சிந்தையில் என்ன இருக்கிறது, அவரது குணாதிசயம், அவரின் பண்புகள், அவரின் கிரியைகள் மற்றும் அவரின் ஆசீர்வாதங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். கிறிஸ்துவுக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது (கொலோசேயர் 2:3).

சுருக்கம்

I. முன்னுரை (1:1-7)

அ. தலைப்பு (1:1)

ஆ. நோக்கம் (1:2-6)

இ. கருப்பொருள் (1:7)

II. வாலிபருக்கு - துதி மற்றும் ஞானம் பற்றி (1:8 - 9:18)

III. எல்லோருக்கும் ஆன நீதிமொழிகள் (10:1 - 22:16)

அ. சாலமோனிடம் இருந்து (10:1 - 22:16)

ஆ. ஞானிகளிடம் இருந்து (22:17 – 24:34)

இ. எசேக்கியாவினால் சேகரிக்கப்பட்ட சாலமோனின் நீதிமொழிகள் (25:1 - 29:27)

IV. தனிப்பட்ட நபரின் குறிப்புகள் (30:1 – 31:31)

அ. ஆகூர் வார்த்தைகள் (30:1 – 31:31)

ஆ. லாமுவேல் வார்த்தைகள் (31:1-31)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.