வேதாகம வரலாறுகள்

எஸ்தரின் சரித்திரம்

தலைப்பு: 

காலாகாலமாக “எஸ்தர்” என்ற தலைப்பே எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வழங்கிவருகிறது. எஸ்தர் மற்றும் ரூத் சரித்திரம், இவை மட்டுமே பழையஏற்பாட்டில் பெண்களின் பெயரால் அழைக்கப்படும் புத்தகங்கள். உன்னதப்பாட்டு, ஒபதியா மற்றும் நாகூம் புத்தகங்களைப் போன்றே எஸ்தர் புத்தகத்தில் இருந்தும் புதிய ஏற்பாட்டில் எந்தவொரு மேற்கோளும் காட்டப்பட வில்லை.  

”அத்சாள்” (2:7) அர்த்தம் “பசுமை மாறா நறுமணச்செடி” என்பதே எஸ்தரின் எபிரேயப் பெயர். இது “நட்சத்திரம்” என்ற பெர்சிய வார்த்தையில் இருந்தோ அல்லது பாபிலோனிய காதல் தேவதை இஸ்தாரின் பெயராகவோ இருந்திருக்கலாம். அபியாயிலின் மகளான இவள் தாய்தகப்பன் இல்லாது போன போது, மொர்தெகாயினால் மகளாக எடுத்து வளர்க்கப்பட்டாள் (மொர்தெகாயின் சிறியதகப்பனின் குமாரத்தி – எஸ்தர்; 2:7,15).

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

மொர்தெகாய், எஸ்றா மற்றும் நெகேமியா இவர்களில் யாரேனும் ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டாலும், ஆசிரியரின் பெயர் தொடர்ந்து அறியப்படாததாகவே இருந்து வருகிறது. எஸ்தர் சரித்திரம் யாருடைய எழுத்தாக இருந்தாலும், எழுதியவருக்கு பெர்சிய பழக்க வழக்கங்கள், ஆசாரம், வரலாறு மற்றும் சூசாவிலிருந்த அரன்மணை(1:5-7) என்பவை பரிச்சயமானதாக இருந்திருக்கின்றன. மேலும் எபிரேய கால அட்டவணை, பழக்கவழக்கங்கள் மிக நன்றாக அறிந்திருந்திருக்கிறார். அத்துடன் யூத தேசப்பற்று உள்ளவராக காணப்படுகிறார். இவர் இஸ்ரவேலில் பின் நாட்களில் குடியேறிய பெர்சிய யூதர் ஒருவர் எஸ்தர் புத்தகத்தை எழுதியவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பிண்ணனி மற்றும் அமைப்பு

எஸ்தரின் சரித்திர சம்பவங்கள் உலக வரலாற்றில் பெர்சிய காலத்தில் கி.மு. 539 (தானியேல் 5:30,31) லிருந்து கி.மு. 331 (தானியேல்8:1-27) வரை உள்ள நாட்களில் சம்பவித்திருக்கும். அகாஸ்வேரு ராஜா அரசாண்ட காலம் கி.மு. 486 – 465 காலத்தில் எஸ்தர் புத்தக சம்பவங்களின் காலம் கி.மு. 483 - 473 வரை உள்ளடங்கியது. அகாஸ்வேரு என்ற பெயர் கேயர்ஷா (Khshayarsha) என்ற பெர்சிய பெயரின் ஒலிபெயர்ப்பு. சக்ஸீஸ் “Xerxes” என்பது அவரது கிரேக்க பெயர். 

பாபிலோனிய (கல்தேயர்) தேசத்தில் 70 வருடம் சிறையிருப்பில் இருந்து யூதர்கள்  தங்கள் சொந்த தேசத்திற்கு செருபாபேல் தலைமையில் முதல்முறை திரும்பிய கி.மு. 538-ற்கும் (எஸ்றா 1-6) எஸ்றாவின் தலைமையில் கி.மு. 458-ல் (எஸ்றா7-10) இரண்டாம் முறை திரும்பியதற்கும் இடையில் இருந்த நீண்ட கால இடைவெளியில் சம்பவித்தது. நெகேமியாவின் சூசானில் இருந்து எருசலேம் பயணம் (மூன்றாவது திரும்பிவருதல்) பின்னர் கி.மு. 445–ல் நிறைவேறியது.

எஸ்தர் சரித்திரமும், யாத்திராகமும் யூத குலத்தை அழிக்கும்படிக்கு அந்நிய தேசங்கள் எவ்வளவு தீவிரமாக முயன்றன என்பதையும், கி.மு. 2100-2075-வில் தேவன் ஆபிரகாமுக்குத் தந்த உடன்படிக்கையின் வாக்குதத்தங்கள்படி (ஆதி.12:1-3; 17:1-8) – அனைத்தையும் ஆளுகை செய்யும் தேவன் - தன் சொந்த ஜனத்தை தமது சர்வல்லமையினால் எவ்வாறு பாதுகாத்தார் என்பதை காலவரிசைப்படுத்தி எழுதுகின்றன. தேவனின் முயற்சியின் விளைவாக தோன்றிய புதிய வருடாந்திரப் பண்டிகை, தேசம் பாதுகாக்கப்ப்ட்டதை நினைவு கூறும்படிக்கு, 12-வது மாதத்தில் கொண்டாடப்பட்டது; பூரிம் பண்டிகையின் தொடக்கத்தை (பிப்ரவரி – மார்ச்) எஸ்தர் 9,10 குறிப்பிட்டுள்ளது. மோசேயின் பிரமாணத்தில் கொடுக்கப்படாது - இஸ்ரவேல் ஜனங்கள் கொண்டாடும்படிக்கு கொடுக்கப்பட்ட இரண்டு பண்டிகையில் ஒன்றான இது - இந்நாள் வரை இஸ்ரவேலில் கொண்டாடப்பட்டு வருகிறது (ஹனுக்கா அல்லது ஒளியின் பண்டிகை (யோவான் 10:22).

வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

தேவனுடைய பெயர் இப்புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதால், இப்புத்தகத்தின் உண்மைத்தன்மையில் சிலர் சந்தேகத்தை எழுப்பிய போதிலும், வேதாகமத்தின் புனித நூல் என எஸ்தர் புத்தகத்தின் 167 வசனங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிரேக்க செப்டுவாஜிண்ட் (LXX) இதற்கும் அதிகமாக மேற்கோள் காட்டமுடியாத 107 வசனங்களைச் சேர்த்தது. உன்னதப்பாட்டு, ரூத், பிரசங்கி மற்றும் புலம்பல் புத்தகங்களுடன் எஸ்தர் புத்தகம் - மெகிலோத்தின் பழைய ஏற்பாடு அல்லது “5 தோல்சுருட்கள்” உடன் சேர்ந்து இருக்கிறது. வருடத்தின் ஐந்து விசேஷ நாட்களில் - இந்த ஐந்து புத்தகங்களையும் தேவாலயத்தில் ரபீமார்கள் எடுத்து வாசிப்பது வழக்கம் – இதில் எஸ்தர் புத்தகம் பூரிம் பண்டிகை நாட்களில் வாசிக்கப்படும் (9:20-32).

எகிப்தில் இருந்து யூதர்கள் வெளியேறி ஏறக்குறைய 1000 வருடங்களுக்குப் பின், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மொர்தெகாய் (யென்யமீன் கோத்திரத்தான் சவுல் வம்சவழி வந்தவர் 2:5) மற்றும் ஆமானுக்கும் (அமலக்கேயரின் ராஜா ஆகாக்கின் வம்சவழிவந்தவர் 3:1,10; 8:3,5; 9:24) இடையில் இந்த சம்பவம் நடைபெற்றது.        எகிப்தில் இருந்து இஸ்ரவேலர் அமலக்கேயர் (அமலேக் – ஈசா வின் பேரன் (ஆதி.36:12)) தாக்கிய போது வெளியேறினர். தேவன் அமலேக்கியரில் ஒருவரும் இல்லாதபடி அழித்துப்போடும்படி. கட்டளையிட்டார் (யாத்.17:14; உபா.25:17-19). சவுலுக்கு (கி.மு. 1030) அமலக்கேயர் மற்றும் ஆகாக் ராஜா உட்பட அனைவரையும் கொன்று போட கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அவன் இதில் கீழிபடியவில்லை (1சாமு. 15:7-0) அது தேவனுக்கு பிரியமாக இருக்கவில்லை (1சாமு.15:11,26; 28:18). இறுதியாக, சவுல் ஆகாகை துண்டித்துப்போட்டான் (1சாமு.15:32,33) எனக் காண்கிறோம். எனினும், ஆகாக்கின் வம்சவழியில் வந்தபடியால், ஆமானுக்கு யூதர்களின்மீது ஆழமான வெறுப்பு இருந்தது. 

ஆகாக்கின் மரணத்திற்குப் பின் 550 வருடங்கள் கழித்து எஸ்தரின் காலம் வருகிறது, இவ்வளவு காலம் கடந்த பின்பும், ஆகாகின் வம்சவழி வந்த ஆமானோ அல்லது பென்யமீன் கோத்திரத்து மொர்தகாயோ வழிவகை பகையை மறக்கவில்லை, அது அவர்கள் உள்ளத்தில் புகைந்தெரிந்து கொண்டிருந்தது. இது ஒன்றே மொர்தெகாய் ஆமானுக்கு முன் அடிபணியவில்லை என்பதற்கு விளக்கம் தருகிறது (3:2,3) மேலும் ஆமான் யூத குலத்தை ஏன் அடியோடு அழிக்க வேண்டும் என கொடூரமாக சிந்தித்தான் (3:5,6,13) என்பதற்கும் விளக்கம் தருகிறது. எதிர்பார்த்தவிதமாக, தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தையின்படி, அமலேக்கியர் முற்றிலும் அழிக்கப்பட்டதும், யூதர்களை பாதுகாப்பேன் என்ற தேவனுடைய வாக்குத்தத்தம்  தான் மேம்பட்டு நின்றது. பூரீம் பண்டிகை (அக்காதியன் மொழியில் “சீட்டு” என அர்த்தம்) அதன் அடிப்படையில் இப்பெயர் வைக்கப்பட்டது (3:7; 9:26). இப்பண்டிகை அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, அந்நாட்களில் விருந்துண்டு, சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை (பரிசுகளை) அனுப்பவும், எளியவர்களுக்கு தானதர்மஞ்செய்யவும் திட்டம் பண்ணினார்கள் (9:21,22). இப்பண்டிகை சரியான காலத்திலே ஆசரிக்கப்பட்டு, இந்த நாட்கள் எல்லா தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூடப்பட்டு, தவறிப்போகாமல் ஆசரித்தார்கள் (9:27,28). எஸ்தர் பின்நாட்களில் உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என தங்கள்மேல் கடனாக உறுதிபடுத்திக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி எழுதினாள் (9:31). பல நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் தேசத்தில் ஆசரிக்கப்படும் பண்டிகையாக இப்பண்டிகை இருந்த போதிலும், பரிசுத்த வேதாகமத்தில், வேறு எங்கும் பூரிம் குறிப்பிடப்படவில்லை.

எஸ்தர் சரித்திரத்தை ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பிடலாம். தேவனும் சாத்தானும் – கண்களுக்குத் தெரியாதவர்கள்; நிஜ வாழ்வில் ராஜாக்கள், ராணிக்கள், பிரபுக்களை நகர்த்தி விளையாடினர். சாத்தான் ஆமானை அரமணைக்குள் வைத்தது அவன், “செக்” என்று இறுதி முடிவைச் சொன்னது போல் இருந்தது. எஸ்தரையும் மொர்தகாயையும் தேவன் நகர்த்தி, சாத்தானுக்கு “செக்மேட்” என்று செயலிழக்கச் செய்தது போல் ஆனது. ஆதி.3:1-19-ல் நாம் காணும் மனுஷனின் வீழ்ச்சிக்குப் பின் மனுஷசிருஷ்டிப்புடன் தேவன் கொண்டிருக்கும் உறவைத் துண்டிக்கவும், தேவன் இஸ்ரவேலருடன் கொண்டிருக்கும் உறவில் இடையூறு செய்யவும் சாத்தான் முயற்சி செய்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்துவின் வம்சவழி யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரும் சங்காரம்பண்ணப்பட்டார்கள்; அதில், யோவாஸ் மட்டும் ஒளித்துவைத்துப் பாதுகாக்கப்பட்டான் (2நாளா.22:10-12). பின்நாட்களில் ஏரோது பெத்லகேமில் இருந்த இருவயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் இயேசு அவர்களுக்குள் இருக்கிறார் என்பதாக எண்ணிக்கொண்டு கொன்றுபோட்டான் (மத்தேயு2:16). சாத்தான் தேவனை விட்டுவிலகி, தன்னை சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொள் எனச் சோதித்தான் (மத்தேயு 4:9). சாத்தானின் வற்புறுத்தலின் பேரில், பேதுரு கல்வாரிக்கு இயேசு செல்வதைத் தடுக்கும்படி முயற்சித்தான் (மத்தேயு16:22). கடைசியாக, சாத்தான் யூதாஸின் உள்புகுந்து இயேசுவை யூதர்கள் மற்றும் ரோமர்களுக்கு காட்டிக்கொடுக்கும்படிச் செய்தான் (லூக்கா:22:3-6). தேவன் என்ற பெயர் எஸ்தர் புத்தகத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரே சாத்தானின் கொடூரமான செயல்திட்டங்களை தடுத்து வருங்கால வைப்பாக பாதுகாப்பை யூதர்களுக்கு தந்தவர் என்பது புத்தகம் முழுவதும் எங்கும் வெளிப்படையாகக் காணப்படுகிறது.

எஸ்தர் புத்தகத்தில், தேவன் ஆபிரகாமுக்கு அளித்த நிபந்தனையற்ற உடன்படிக்கை வாக்குதத்தங்கள் (ஆதி.17:1-8) மேலும் தாவீதிற்கு அளித்த வாக்குதத்தங்கள் (2 சாமு.7:8-16)  யாவும் ஆபத்திற்கு உள்ளானது. ஆனாலும், யூதகுலம் முற்றிலும் அழிக்கப்பட இருந்த அழிவில் இருந்து அவர் மீட்டெடுத்த வியத்தகு மீட்பினைக் காணும்போது, இஸ்ரவேலர் மீது தேவன் கொண்டிருந்த அன்பு வெளிப்படுவது போல் வேறு எங்கும் நாம் காண இயலாது. “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை” (சங்கீதம் 12).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

உன்னதப்பாட்டு புத்தகத்தில் நாம் காண்பது போலவே, எஸ்தர் புத்தகத்திலும் எங்கும் தேவன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது வெளிப்படையான கேள்வி. இப்புத்தகத்தை எழுதிய ஆசிரியரோ அல்லது இதில் பங்குபெற்றவர்களோ தேவனுடைய நியாயப்பிரமாணம், லேவியரின் ஆசரிப்புப்படிபலியிடுதல், ஆராதனை அல்லது ஜெபம் குறித்து இப்புத்தகத்தில் எங்கேயும் குறிப்பிடவில்லை. சந்தேகப்படுகிறவர்கள் கேட்கும் கேள்வி, “பெர்சிய ராஜாவின் குறிப்பு 175 தடவைக்கும் மேலாக புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் போது, தேவனின் பெயர் ஏன் ஒரு முறை கூட குறிப்பிடப்படவில்லை?” தேவன் தமது இறையாட்சியினால் எதிரிகளை மேற்கொண்டு யூதர்களை காப்பாற்றியிருக்கும் போது, அவருக்கு உரிய அங்கீகாரம் புத்தகத்தில் ஏன் அளிக்கப்படக்கூடாது?”

இக்கேள்விக்கு இப்படியாக பதில் அளிக்கலாம்: நான் இஸ்ரவேலை பாதுகாத்தேன் என்பது புத்தகத்தில் குறிப்பிடப்படவேண்டும் என தேவன் விரும்பியிருந்தல், அவர் தனது ராஜரீக வல்லமையால் எழுதிய ஆசிரியரை தேவன், தன்னைப்பற்றி எழுதும்படி ஏவியிருக்கலாம். இப்பிரச்சினை மனுஷர்களுக்குள் காணப்படும் பிரச்சினையாக இருக்கிறதே அல்லாமல், தெய்வீக பிரச்சினையாக காணப்படவில்லை. ஏனென்றால் தேவன் காணமுடியாதபடி இருந்து, வல்லமை தந்து, எல்லாவற்றையும் அவரது நோக்கத்திற்காக கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக இருக்கிறார் என்பதற்கு உன்னதமான அடையாளமாக / விளக்கமாக எஸ்தர் இருக்கிறாள்.  எஸ்தர் புத்தகத்தில் எந்தவொரு அற்புதம் குறித்தும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இஸ்ரவேலரை எதிர்காலத்திற்கென்று பாதுகாக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும், யெகோவா தேவனின் சர்வவல்லமை, மற்றும் அவர் சர்வத்தையும் அறிந்தவர் என்பது வெளிப்படுகிறது. அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது ஒரு வாதத்திற்குரிய செய்தியே இல்லை.  அனைத்து சம்பவங்களிலும் அவரே முக்கிய காதாப்பாத்திரமாக இருக்கிறார்.

இரண்டாவது, மொர்தகாயும் எஸ்தரும் ஏன் உலகப்பிரகாரமான வாழ்க்கைமுறையப் பின்பற்றினார்கள்?  நாம் தானியேலில் காணபதுபோல (தானியேல் 18-20)), எஸ்தரில் (2:6-20) பரிசுத்தத்தைக் குறித்த வைராக்கியம் காணப்படவில்லையே? மொர்தகாய் தன்னுடைய மற்றும் எஸ்தரின் யூத பரம்பரை குறித்த விஷயத்தை, தானியேலைப் போல வெளிப்படுத்தாமல் தானியேல் (6:5), ரகசியமாக பாதுகாத்து வந்தான். எஸ்றாவை ஒப்பிட்டுப்பார்த்தால், தேவனுடைய வேதத்தை ஆரய எஸ்றா தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தான் (எஸ்றா:7:10) என காண்கிறோமே அப்படிப்பட்ட பக்குவம் இவர்களில் காணப்படவில்லை. நெகேமியா எருசலேமினை நேசித்தான் வெளித்தோற்றத்தில் இருந்து பார்க்கும்போது, நெகேமியா எருசலேம் மீது கொண்டிருந்த பற்று எஸ்தர் மொர்தகாய் இடையில் காணப்பட்ட பாசத்தை மறைக்கிறது (நெகே.1:1-25). 

மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு கீழ்க்காணும் விளக்கம் தீர்வுகாண்கிறது

முதலாவது, இந்த புத்தகம் நடைபெற்ற அனைத்தையும் குறித்து வைக்கவில்லை. மொர்தகாயும் எஸ்தரும் மிக ஆழமான விசுவாசம் வைத்திருந்தனர் என்பது 4:16-ல் ”இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.” என்பதில் இருந்து உறுதிபடுத்தப்படுகிறது. இரண்டாவது, தெய்வீக பயம் நிறைந்த நெகேமியா கூட அகாஸ்வேரு ராஜாவினிடத்தில் பேசும் போது, தேவன் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை (நெகே.2:1-8). மூன்றாவது, ஆராதனைக்கு அடிப்படையாக இருந்த யூதர்களின் பண்டிகைகள் உதரணமாக, பஸ்கா (2ராஜா.23:22) மற்றும் கூடாரப்பண்டிகை (நெகே.8:17) போன்றவை எஸ்தர் காலத்திற்கு பல வருடங்களுக்கு முன்பே தொலைந்து போயிருந்தன. நான்காவது, அகாஸ்வேரு ராஜாவிற்கு பல வருடங்களுக்கு முன் சமாரியர்களால் எழுதப்பட்ட நிருபம் அவர்களை பயமுருத்தியிருக்கலாம். (கி.மு. 486; எஸ்றா4:6). ஐந்தாவது, ஆமானை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை (3:1,2) என்ற போது ஆமானின் பொல்லாத நோக்கம் வெளிப்படவில்லை. அது மற்றவர்களால் பேசப்பட்டு, ஏற்கெனவே யூத ஜனத்தார் யாவரையும் மிரட்டி வைத்திருக்கக் கூடிய செய்தியாக இருந்திருக்கும். ஆறாவது, எஸ்தர் தன் யூத பாரம்பரியத்தை ஏற்ற வேளையில் வெளிப்படுத்தினாள் (7:3,4) என்றபோதிலும், ஏன் தானியேல் போல் எஸ்தரும் மொர்தகாயும் தேவனுக்கு தாங்கள் காட்ட வேண்டிய பக்தியை வெளிபடுத்தவில்லை என்ற நச்சரிக்கும் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. நெகேமியாவின் விண்ணப்பத்தில் (நெகே.1:5-11, விசேஷமாக வசனம் 7) நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்கு கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம் என்ற வார்த்தைகளில் இருந்து தேசத்திற்கு திரும்பி வந்து சூசாவில் இருந்த யூதர்களிடத்தில் ஆவிக்குரிய விஷயத்தில் சோர்வு இருந்தது என்று அறிகிறோம். ஆக, இந்த பிரச்சினைக்கு தீர்வு தேவன் தாம் காணவேண்டும் ஏனெனில் தேவன் - அவர் ஒருவர் மாத்திரமே மனுஷர்களின் இருதயங்களை அறிந்தவர்.

 

சுருக்கம்

I. வஸ்திக்கு மாற்றாக எஸ்தர் கொண்டுவரப்பட்டாள் (1:1-2:18)

அ. வஸ்தியின் கீழ்ப்படியாமை (1:1-22)

ஆ. எஸ்தர் முடிசூட்டப்படுதல் (2: 1-18)

II. மொர்தகாய் ஆமானை மேற்கொள்ளுதல் (2:19-7:10)

அ. மொர்தகாயின் விசுவாசம் (2:19:7:10)

ஆ. ஆமான் பதவி உயர்த்தப்படுதல் மற்றும் ஆணை (3:1-15)

இ. எஸ்தர் இடைபடுதல் (4:1-5:14)

ஈ. மொர்தகாய் அங்கீகரிக்கப்படுதல் (6:1-13)

உ. ஆமானின் வீழ்ச்சி (6:14- 7:10)

   III.   ஆமானின் இனப்படுகொலை சதிதிட்டத்தில் இருந்து இஸ்ரவேல் பாதுகாக்கபடல் (8:1-10:3)

அ. எஸ்தர் மற்றும் மொர்தகாய் பரிந்து பேசுதல் (8:1-17)

ஆ. யூதர்களின் வெற்றி (9:1-19)

இ. பூரிம் பண்டிகையின் ஆரம்பம் (9:20-32)

ஈ. மொர்தகாய் பிரசித்தம் அடைதல் (10:1-3)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.