வேதாகம வரலாறுகள்

நெகேமியா

தலைப்பு: 

நெகேமியா (“யெகோவா ஆறுதல் அளிக்கிறார்”) பிரபலமான பானபாத்திரக்காரர். வேதாகமத்தில் இந்த புத்தகத்தைத் தவிர்த்து, இவர் வேறு எங்கும் காணப்படவில்லை. அவரது சமகாலத்தவர்களான எஸ்றா மற்றும் எஸ்தர் போல இப்புத்தகமும் பெயரிடப்பட்டது. இவரது தலைமையின் கீழ் நடந்த சில குறிப்பிட்ட சம்பவங்களை இந்த புத்தகம் விவரிக்கிறபடியால், அவரது பெயரே இப்புத்தகத்திற்கு சூட்டப்பட்டது. கிரேக்க செப்டுவாஜிண்ட் (LXX) மற்றும் லத்தீன் வுல்கேட் “இரண்டாம் எஸ்றா” என இப்புத்தகத்திற்கு பெயரிட்டன. இன்றைக்கும் எபிரேய பதிப்புகளில் எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்கள் ஒன்றாக காணப்படுவது போல ஆங்கில மொழிபெயர்ப்புகளின் பழையபதிப்புகளிலும் சேர்ந்தே இருந்திருக்கலாம், ஆனால், இன்றைய நாட்களில் தனித்தனியாக தான் இருக்கின்றன. புதியஏற்பாட்டு எழுத்தாளர்கள் நெகேமியா புத்தகத்திலிருந்து மேற்கோள் எதுவும் காட்டவில்லை.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

இப்புத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் நெகேமியாவின் தனிப்பட்ட நாட்குறிப்பில் (Diary) இருந்து எழுதப்பட்டதாக இருந்ததாலும், தன்மை (First Person) நடையில் எழுதப்பட்டிருந்ததாலும், யூத மற்றும் கிறிஸ்த பாரம்பரியங்கள் எஸ்றா தான் இதன் ஆசிரியர் என்று அங்கீகரிக்கின்றன. இதனை நாம் வெளி ஆதாரங்கள் மற்றும் LXX மற்றும் வுல்கேட்டில் காண்கிறது போல, எஸ்றாவும் நெகேமியாவும் முதலில் ஒரே புத்தகமாக இருந்தன என்பதில் இருந்து அறிகிறோம்; மேலும், உள்ளிருந்து வரும் ஆதாரமாகிய “கர்த்தருடைய கரம்” என்ற பதம் எஸ்றா மற்றும் நெகேமியா இரண்டு புத்தகங்களிலும் மேலோங்கி நிற்பதன் மூலம், இதன் ஆசிரியர் - ஆசாரியர் மற்றும் வேதபாரகர் - என்னும் தகுதிகளை பெற்றிருந்தார் என்பதன் மூலமும் அறிகிறோம். எஸ்றா வேதபாரகராக இருந்ததால், அவர் பெர்சிய ஆவண காப்பகங்களை அணுக முடிந்தது. இதன் காரணமாக இவரின் இரண்டு புத்தகங்கள் நெகேமியா, குறிப்பாக, எஸ்றாவில் எண்ணற்ற ஆவண குறிப்புகளைக் காணமுடிகிறது. பெர்சிய ஆவணங்களை அணுக ஒருசிலருக்கு மட்டுமே அனுமதி இருந்தது, அதில் எஸ்றா விதிவிலக்கானவர் (எஸ்றா 1:2-4; 4:9-22, 5:7-17; 6:3-12).

நெகேமியா 1-ல் உள்ள சம்பவங்கள், கி.மு.446-ல் பெர்சிய ராஜா அர்தசஷ்டாவின் (கி.மு.462-423) 20-வது வருடத்தில் தாமதமாக தொடங்குகின்றன. காலவரிசைப்படி இப்புத்தகம் எருசலேமில் நெகேமியா விசாரிப்புக்காரனாக முதல் முறை இருந்த  கி.மு.445-433-லிருந்து தொடங்கி, அவர் இரண்டாவதுமுறை பதவிவகித்தவரை  (ஒருவேளை கி.மு.424) வரிசைப்படுத்துகிறது (நெகேமியா 13). எஸ்றாவால், நெகேமியா புத்தகம் இரண்டாவது முறை விசாரிப்புக்காரராக இருந்தபோது அல்லது அதற்குப்பின் எழுதப்பட்டிருக்கலாம், ஆனால் கி.மு.400-விற்குப் பின் எழுதப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. 

பிண்ணனி மற்றும் அமைப்பு

தேவன் நியாயம் செய்கிறவர் என்பதற்கேற்ப, வழிதவறிய யூதா மற்றும் இஸ்ரவேலர்களை சிட்சித்து அவர்களை திருத்த அசீரியர்கள் மற்றும் கல்தேயர்களை (பாபிலோனியர்) தேவன் கொண்டுவருகிறார். கி.மு.722-ல்  அசீரியர்கள் வடபகுதியில் இருந்த 10 கோத்திரத்தாரை நாடுகடத்தி, அன்றைய நாட்களில் அறியப்பட்டிருந்த உலகத்தின் பல பாகங்களிலும் சிதறடித்தார் (2ராஜா.17). அதற்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து, கி.மு.605-586-ல் யூதா, தேவனுடன் கொண்டிருந்த உடன்படிக்கையை தொடர்ச்சியக அவமதித்து வந்தபடியால்,  அத்தேசத்தை அழித்து, சூறையாடி எருசலேமில் இருந்த மக்கள் தொகை குறைந்து போகும்படிச் செய்ய கல்தேயரைப் பயன்படுத்தினார் (2ராஜா.25). தேவன் அவரின் ஜனங்கள் கல்தேயர் தேசத்தில் 70 வருடங்கள் சிறைப்பட்டுப் போக அனுமதித்து அவர்களைச் சிட்சித்தார்.

யூதர்கள் சிறைப்பட்டிருந்த காலத்தில், பேரரசின் தலைமை கல்தேயர் (பாபிலோனியர்) களிடமிருந்து பெர்சியர்களின் கரங்களில் வந்து சேர்ந்தது (கி.மு.539,  தானியேல் 5). அதற்குப் பின் தானியேல் அனேக தீர்க்கதரின வெளிப்பாடுகளை கண்டார். கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: எருசலேமிலே ஆலயத்தைக் கட்ட எனக்கு கட்டளையிட்டிருக்கிறார் என்ற கட்டளையுடன் (கி.மு. 539) எஸ்றா புத்தகம் தொடங்குகிறது. யூதர்களின் நாட்காட்டியின்படியான பண்டிகை மற்றும் பலிசெலுத்துதல் காலவரிசையை மீண்டும் ஸ்தாபிக்கிறது. செருபாபேலும் யோசுவாவும் முதல் திரும்பிவருதலை வழிநடத்தி, தேவாலயத்தை திரும்ப கட்டினர் (எஸ்றா 1-6). ஆமான் யூதகுலத்தை முற்றும் அழிக்க முற்பட்டபோது, பெர்சியாவில் இருந்து யூதர்கள் வெளியேறிய நிகழ்வை சுருக்கமாக எஸ்தர் புத்தகம் தருகிறது (கி.மு. 483-473). எஸ்றா 7 முதல் 10 அதிகாரங்கள் எஸ்றாவின் தலைமையில் தேசத்திற்கு இரண்டாவது  திரும்பிவருதலை (கி.மு.458) விவரிக்கிறது. எருசலேமைச் சுற்றி இடிபட்டுக் கிடந்த அலங்கத்தைக் கட்ட / மதில்சுவரைக்கட்ட நிகழ்ந்த மூன்றாவது திரும்பிவருதலைக் குறித்து நெகேமியாவின் புத்தகம் விவரிக்கிறது (கி.மு.445).

அந்நாட்களின் யூத வரலாற்றில், அறிப்பட்டிருந்த கிழக்கத்திய ராஜ்ஜியங்கள் அனைத்தின் மீதும் பெர்சியா ஆதிக்கம் செய்து வந்தது. யூதாவின் நிர்வாகம், தளர்ந்த கைகளுடன் நடைபெற்று வந்த போதும், அத்தேசத்து அடிமைகளின் கலகம் அல்லது வேறு இடையூறுகள் வராதபடி பார்த்துக் கொண்டனர். மேற்கொள்ளப்பட்ட தேசங்களின் சுவர்கள் மீண்டும் கட்டப்படுதல் வெளிப்படையான ஓர் அச்சுறுத்தலாக மைய்ய பெர்சிய நிர்வாகத்திற்கு இருந்தது. இதை செய்வதற்கு ராஜாவின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர் கையிலேயே விடப்படவேண்டும். யூதா தேசம் மறுபடியும் புத்துயிர் பெற்றுவரும் முக்கியமான தருணத்தில், ராஜ்ஜியத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய பணியினை மேற்கொள்ள பானபாத்திரக்காரன் மற்றும் ராஜாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெகேமியாவை தேவன் எழுப்பினார். அர்தசஷ்டாவின் (கி.மு. 464-423) ஆதரவு நெகேமியாவிற்கு இருந்தது. எப்படி யோசேப்பு, எஸ்தர், தானியேல் போன்றோர் ராஜாவின் அரண்மனையில் முக்கியமான பொறுப்பை வகித்தனரோ, அப்படி பெர்சியர்களின் கட்டுப்பாட்டிற்குள் பட்டணம் வீழ்ந்து விடாதபடி எருசலேமின் இடிந்த மதில்சுவர்களைக் கட்ட தலைமை ஏற்று நடத்தக்கூடிய பொறுப்பிற்கு நெகேமியாவை தேவன் உயர்த்தினார்.

வரலாற்று குறிப்புகளில் சுவராஸ்யமான விஷயங்கள் அனேகம் இருக்கின்றன. எஸ்தர், அர்தசஷ்டாவின் மாற்றாந் தாய். அர்தசஷ்டா யூதர்களுக்கு தயை செய்யவேண்டி, குறிப்பாக நெகேமியாவிற்கு காட்டும்படி சுலபமாக கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம். இரண்டாவது, தானியேலின் தீர்க்கதரிசனத்தில் வரும் 70 வாரங்கள், அர்தசஷ்டா அலங்கத்தை கட்டும்படிக்கு ஆணை இட்ட கி.மு.445-விலிருந்து தொடங்குகிறது. மூன்றாவது, கி.மு 5-ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த பிக்வாய் என்பவர் எழுதிய  எலிபெண்டைன் பப்ரி என்ற ஓர் எகிப்திய ஆவணம்  (கி.மு.410) நெகேமியா (10:16) நெகேமியா எழுதியது போல, சமாரியாவின் ஊழியக்காரனாகிய சன்பல்லாத்துவை (2:19) நீக்கி விட்டு, யோகனான் (6:18; 12:23) மற்றும் நெகேமியாவை எருசலேமின் தேசாதிபதியாக நியமித்ததை குறித்தக் குறிப்பை காண்கிறோம். கடைசியாக, நியமனத்தின்படி (Canonical) பழையஏற்பாட்டின் காலவரிசையில் எழுதப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதை வைத்துப் பாரக்கும் போது, கடைசி புத்தகங்களாக நெகேமியா மற்றும் மல்கியா என எஸ்றா குறிப்பிட்டு எடுத்துக்காட்டுகிறார். (நெகேமியா 13; மல்கியா 1-4). ஆக, தேவனின் 400 வருட அமைதி கடந்து செல்லும் வரை, யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் பிறப்பின் செய்தி அறிவிக்கப்படும் வரை, இஸ்ரவேலருக்கான செய்திகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை (மத்தேயு 1; லூக்கா 1,2).

கிறிஸ்துவின் அவதரிப்பு முழுமை பெறுவதற்கு முன்னிருந்த இஸ்ரவேலரின் வரலாற்றின் வெளிப்பாடுகள் முழுவதும் பழையஏற்பாட்டில் நிறைந்திருந்த போதிலும், யூதர்கள் தேவனுடைய உடன்படிக்கைகள் மற்றும் வாக்குதத்தங்களின் முழுமையை அந்நாள்வரை அனுபவிக்காமலே இருந்தனர். யூதர்களில் மிச்சமானவர்கள் என இருந்தாலும், ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்ததைப் பார்க்கும் போது (ஆதி.15:7) எண்ணாகமம் 1:46-ல் எகிப்தைவிட்டு வெளியேறிய போது நாம் காணும் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை.  யூதர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கவுமில்லை (ஆதி.15:7) அல்லது இறையாண்மை வெளிப்படுத்தி தேசத்தை ஆளுபவர்களாகவும் (அதி.12:2) மாறவில்லை. பிரதான ஆசாரியர் எலியேசர் மற்றும் பினெகாஸ் வம்சத்தில் வந்தவராக இருந்தபோதிலும் (எண்.25:10-13) புதியஏற்பாட்டின் படியான மீட்பின் திட்டம் நிறைவேற மேசியாவின் பிறப்பு, சிலுவைப்பாடு மற்றும் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

தேவனின் சித்தத்தைச் செய்வதற்காக தேவனுடைய வார்த்தை மிகக்கவனத்துடன் வாசிக்கப்படவேண்டும் என்பதே இப்புத்தகத்தின் தொடர்ச்சியான கருப்பொருள். எஸ்றா “கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவந்து வாசித்த போது” (நெகேமியா 8:1) ஆவிக்குரிய எழுப்புதல் உண்டானது. எஸ்றாவும் சில ஆசாரியர்களும் “தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை” வந்திருந்தவர்களுக்கு விளங்கப் பண்ணினார்கள் (8:8) எனக் காண்கிறோம். மறுநாளில், ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்து கொள்ள வேண்டும்  என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள் (8:13) எனக் காண்கிறோம். ”நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே” (நெகேமியா 10:34,36) என்ற வார்த்தையின்படி, பலிபீடத்தில் பலியிடுதல் திரும்ப மிக கவனத்துடன் செயல்படுத்தப்பட்டது. தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு கீழ்ப்படிவதில் அவர்கள் ஆணையிட்டுப்பிரமாணம் பண்ணினார்கள் (10:29); அவ்வளவு தூரம் கர்த்தருடைய சித்தம் நிறைவேற்றுவதில் கவனமாக இருந்தனர். விவாகம் பண்ணுவதில் சீர்திருத்தம் கொண்டுவருவந்ததில் “மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்” (13:1) என்பதில் இருந்து அதில் சொல்லியிருக்கிறபடி மாற்றங்களைக் கொண்டுவந்தனர் என அறிகிறோம். 

புத்தகத்தில் ஊடுருவிச்செல்லும் இரண்டாவது கருப்பொருள் “நெகேமியாவின் கீழ்ப்படிதல்”  வெளிப்படையாக புத்தகம் முழுவதும் பேசப்படுகிறது. ஏனென்றால் இப்புத்ததகம் நெகேமியாவின் நினைவில் நிற்பவைகளை அடிப்படையாகக் கொண்டு அவரே தன்னைக்குறித்து எழுதுவதுபோல் எழுதப்பட்டுள்ளது. தேவன் நெகேமியாவின் கீழ்ப்படிதலைக் கொண்டு செயல்பட்டார். ஆனாலும், தவறான நோக்கத்துடன், பொல்லாப்பானவைகளை செய்யத் துணிந்த நெகேமியாவின் எதிரிகளின் வழியாகவும் தேவன் செயல்பட்டார். நெகேமியாவின் வெற்றிகரமான செயல்திட்டங்களால் அல்ல, “தேவன், அவர்கள் (எதிரிகள்) ஆலோசனைகளை அபத்தமாக்கினார் (4:15)” என்பதினால் நெகேமியாவின் எதிரிகள் மடங்கடிக்கப்பட்டார்கள். கோரேஸ் ராஜா தேவனுடைய ஜனங்கள் அவர்களின் எருசலேமின் சுவர்களை திரும்ப எடுப்பித்துக் கட்ட, கட்டட வேலைகளுக்கு  பண உதவி செய்து, எப்படி தேவனின் ஜனங்கள் தேசத்திற்கு திரும்பச் செல்ல அனுப்பிவைக்க தயை பாராட்டச் செய்தாரோ, அதே போல, யூதாவின் எதிரிகளால் – தேவன் அவருடைய ஜனத்தாரின் முழங்கால்கள் முடங்கும் அளவிற்கு – கீழ்ப்படிதலைக் கற்றுத்தந்தார், நெகேமியா எருசலேமின் தேவனுடைய ஜனம் எருசலேமில் குடியேற்றப்படவேண்டும் என்பதே வசனம் 7:5-ல் காணும் “தேவன் என் மனதிலே ஓர் எண்ணத்தை உண்டாக்கினார்” என்பது. அதை தேவன் தாமே நிறைவேற்றினார்.

எஸ்றாவில் காண்பது போல, நெகேமியாவில் காணும் மற்றொரு கருப்பொருள் – “எதிர்ப்பு”. பெர்சியா தேசத்திற்கு விரோதமாக தேவனுடைய ஜனத்தார் எழும்பினார்கள் என யூதாவின் சத்துருக்கள் வதந்தியைக் கிளப்பிவிட்டனர். எருசலேமின் மதில்சுவர் கட்டப்படுவதை தடுக்க அவர்களை பயமுத்துவதே அதன் நோக்கம். வெளியில் இருந்து எதிர்ப்பு, உள்ளத்தை உடைக்கும் அளவிற்கு ஊழல், உள்ளுக்குள் காணப்பட்ட கருத்து வேறுபாடு என பல அவலநிலைகள் இருந்த போதிலும், யூதா தேசத்தார் எருசலேமின் மதில்களை 52 நாட்களில் கட்டி முடித்தனர் (6:15). வேதபாரகனாகிய எஸ்றா “கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகத்தைக்” கொண்டுவந்து வாசித்து எழுப்புதல் பெற்றனர். “ஏழாம் மாதத்தில் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்” என்று எழுதியிருக்கிறபடி கூடாரபண்டிகையைக் கொண்டாடினார்கள் (8:14, கி.மு.445). “சர்வ வல்ல தேவனின் கரம்” என்ற கருப்பொருளும் அத்துடன் தேவன், அவரது ஜனங்களுடனும் அவர் ஜனத்தாரின் எதிரிகளுடன் இடைபடுகிறார் மற்றும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்ற அடிப்படைச் செய்தி புத்தகத்தின் ஊடாக கடந்து செல்கிறது; ஆனால், நெகேமியா என்னும் தனிநபரின் எண்ணங்கள், குறிக்கோள்கள், அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்து இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதை நாம் வாசிக்கும் போது இந்த மேற்சொன்ன கருப்பொருளைக் காண்பதற்கும் மேலாக வாசிப்பவரை நெகேமியாவுடன் எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ளச் செய்கிறது. பானபாத்திரக்காரனாகிய நெகேமியாவின் மிகச்சிறப்பான, முன்மாதிரியான நடவடிக்கைகள், எருசலேமின் மதில்சுவரை மீண்டும் எடுத்துக் கட்ட வேண்டும் என தேவன் சகல எதிர்ப்புகள் மற்றும் பின்னடைவுகளுக்கு மத்தியிலும் தீர்மானித்து, நெகேமியாவை எடுத்துப் பயன்படுத்தி பண் இசைப்பதில் அழகாக செயல்பாடுகள் ஒன்றுசேர்ந்து இசை எழுப்புவது போல, ஒன்றுசேர்த்த தேவகரத்தின் செயல்களை மறைக்கிறது. “தேவனுடைய தயவுள்ள கரம்” நெகேமியா புத்தகம் முழுவதும் பாய்ந்து செல்கிறது (நெகேமியா-1:10; 2:8,18).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

முதலில், எருசலேம் மதில்களுடன் சம்பந்தபடுத்தியே நெகேமியா புத்தகத்தின் அனேகமான பகுதிகள் சொல்லப்பட்டிருப்பதால் நீங்கள் நெகேமியவின் காலத்தில் எருசலேம் எனும் வரைபடத்தை பார்த்தல் நன்று. இரண்டாவது, அதிகாரங்கள் 1-12 காலகட்டம் ஒரேவருடம் (கி.மு. 445 ); அதிகாரம் 12க்கும் 13 க்கும் இடையில் அதிக கால இடைவெளி இருக்கிறது (ஏறக்குறைய 20 வருடங்கள்). கடைசியாக, ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நெகேமியா எருசலேமின் இரண்டு தேசாதிபதிகளின் ஆட்சி காலத்தில் வேலை செய்தார். முதலாவது கி.மு. 445-433 வரை; இரண்டாவது கி.மு. 424-ல் ஆரம்பித்து கி.மு.410-ற்கு மேல் சென்றிருக்க முடியாது.

சுருக்கம்

I நெகேமியா அதிபதியாக முதல் முறை பணியாற்றியது (1:1-12:47)

அ. நெகேமியா திரும்பவருதல் மற்றும் அலங்கம் திரும்ப கட்டப்படுதல் (1:1 - 7:73முதல்பாகம் வரை)

 1. நெகேமியா எருசலேம் செல்லல் (1:1 -2:20)

 2. நெகேமியாவும் ஜனங்களும் சேர்ந்து மதில்சுவர்களை திரும்ப கட்டுதல் (3:1-7:3)

 3. நெகேமியா முதல் முறை தேசத்திற்கு ஜனங்களை செருபாபேல் தலைமையின் கீழ் அழைத்து வருதல் (7:4 -73 முன்பாகம் வரை).

 

ஆ. எஸ்றாவின் எழுப்புதல் மற்றும் புதுப்பித்தல் (7:73 பின்பக்கம் முதல் – 10:39)

  1. எஸ்றா நியாயப்பிரமாணத்தை விளக்குகிறார் (7:73 பின்பக்கம் முதல்-8:12)

  2. ஜனங்கள் ஆராதித்தலும் மனந்திரும்புதலும் (8:13 – 9:37)

  3. எஸ்றா வும் ஆசாரியர்களும் உடன்படிக்கையை புதுப்பித்தல் (9:38-10:39)

 இ. நெகேமியா மீண்டும் குடியேறுதலும் மகிழ்தலும் (11:1 -12:47)

  1. எருசலேம் மீண்டும் குடியமர்த்தப்படுதல் (11:1-12:26)

  2. ஜனங்கள் மதில்களை பிரதிஷ்டைச் செய்தல் (12:27-47)

 

II. நெகேமியா அதிபதியாக இரண்டாம் முறை பணியாற்றியது (13:1-31)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.