வேதாகம வரலாறுகள்

நாளாகமம் (1 மற்றும் 2) 

தலைப்பு

மூல-எபிரேய பிரதிகளில் “காலவரிசை” (அதாவது நிகழ்வுகள் அல்லது சம்பவங்கள்) வரலாறு என்றே தலைப்பிடப்பட்டிருந்தது. கிரேக்க பழைய ஏற்பாடான செப்டுவாஜிண்ட் (கி.மு. 200) முதல் மற்றும் இரண்டாம் நாளாகம புத்தகம் என    பிரிக்கும் வரைக்கும், இது ஒரே புத்தகமாகவே இருந்தது. அந்த வேளையில், 1,2சாமுவேல் மற்றும் 1,2ராஜாக்கள் புத்தகத்தில் விடுபட்டவை என்ற அர்த்தத்தில்  “விடுபட்டவை” என்ற துல்லியமற்ற தலைப்பு இதற்கு தரப்பட்டிருந்தது. இப்பொழுது இருக்கும் ஆங்கிலதலைப்பு - “புனித வரலாற்றின் நாளாகமம்” என்னும் யெரோம்-லத்தீன் வுல்கேட் மொழிபெயர்ப்பின் (கி.பி.400) முழுமையான தலைப்பினை எடுத்துப் பயன்படுத்தியே - நாளாகமம் என்ற தலைப்பு வந்தது.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

யூத பாரம்பரியத்தின்படி ஆசாரியனாகிய எஸ்றா (வரலாற்று ஆசிரியர்) இதனை எழுதி இருக்கலாம் என பலமாக நம்பப்பட்டாலும், (எஸ்றா 7:1-6) முதல் அல்லது இரண்டாம் நாளாகம புத்தகம் எதிலும் இப்புத்தகத்தை எழுதின மனித-எழுத்தாளர் இவர்தான் என்பதற்கான ஆதாரம் இல்லை. இதில் எழுதியுள்ள குறிப்புகள் கி.மு.450-430-வில் பதியப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1நாளா.1-9-ல் காணப்படும் வம்சவழி குறிப்பு கி.மு.450க்கு பின் புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.. புதிய ஏற்பாட்டில் 1 அல்லது 2 நாளாகமத்தில் இருந்து நேரடியாக எந்த மேற்கோளும் இல்லை.

பிண்ணனி மற்றும் அமைப்பு

பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களாக இருந்த யூதர்கள் மூன்று-கட்டங்களில் வாக்குதத்த தேசத்திற்கு திரும்புகின்றனர் என்பதே இப்புத்தகத்தின் வரலாற்று பின்னணி. 1) எஸ்றாவில் இருக்கும் செருபாபேல் (கி.மு.538) 2) எஸ்றாவில் இருக்கும் எஸ்றா 7-10 (கி.மு. 485) மற்றும் 3) நெகேமியா வில் இருக்கும் நெகேமியா 1-13 (கி.மு. 445). இவை முந்தைய வரலாறு.  2ராஜாக்கள், எரேமியா, எசேக்கியேல், தானியேல் மற்றும் ஆபகூக் புத்தகங்களில் நாம் காண்கிற முன்பே கணிக்கப்பட்ட/அறிவிக்கப்பட்ட பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவத்தையும் குறிப்பில் எடுத்துக் கொள்கிறது (கி.மு. 605 – 538). மறுசீரமைப்பின் காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் ஆகாய், சகரியா மற்றும் மல்கியா.

யூதர்கள் தங்களது 70வருட சிறையிருப்பில் இருந்து (கி.மு.538), தாவீதின் காலத்தில் (கி.மு.1011-971) இருந்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தேசத்திற்கு திரும்பி இருந்தார்கள். 1) எபிரேய ராஜா என்று ஒருவர் இல்லை, மாறாக பெர்சிய நாடுகளுக்கு அதிபதியே இருந்தார் (எஸ்றா 5:3; 6:6);  2) எருசலேம் பாதுகாப்பின்றி இருந்தது, அதனால் நெகேமியா அலங்கத்தை திரும்ப எடுத்து கட்ட வேண்டி இருந்தது (நெகேமியா 1-7); 3) தேவாலாயம் என்ற ஒன்று இல்லாதிருந்தது, அதனால் செருபாபேல் சாலமோன் கட்டின தேவாலயத்திற்கு சாயலாக இருக்கும் தேவாலயத்தைக் கட்ட அஸ்திபாரம் போட்டான் (எஸ்றா 3); 4) யூதர்கள் இனிமேலும் அப்பகுதிகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறவர்களாக இல்லாமல், அதனை பாதுகாப்பவர்களாக மட்டுமே வாழ்ந்தனர் (எஸ்றா 4; நெகேமியா 4); 5) அவர்களது தேசத்திற்கு திரும்பினார்கள் என்ற ஆசீர்வாதத்தை தவிர வேறு சில ஆசீர்வாதங்களையும் அவர்கள் பெற்று அனுபவித்தனர். 6) முந்தைய ராஜ்ஜியத்தின் செல்வசெழிப்பில் சிறிதளவே பெற்றிருந்தனர்; மற்றும் 7) தெய்வீக பிரசன்னம் எருசலேமில் நிலைத்திருக்கவில்லை மாறாக, அங்கிருந்து எடுபட்டு போயிருந்தது (கி.மு. 597-591,எசே.8-11).

இயல்பாகச் சொல்வோமானால், தாவீது மற்றும் சாலமோன் அரசாண்ட காலங்களில் கம்பீரமாக இருந்த அவர்களின் கடந்த காலத்துடன் பொருத்தி பார்ப்போமானால், அவர்களது எதிர்காலம் இருண்டதாக இருந்தது. இஸ்ரவேலர் தங்கள் சொந்த தேசத்திற்கு வந்த இந்த சம்பவத்தை கசப்பான-இனிப்பு எனலாம். தற்கால ஏழ்மை அவர்களின் மூதாதையர் செய்த பாவத்தை நினைவுபடுத்துவதாக இருந்தபடியால் அது கசப்பாகவும், 17 நூற்றாண்டுகளுக்கு முன் (ஆதி.12:1-3) ஆபிரகாமுக்கு தேவன் அருளிய வாக்குப்படி தாங்கள் பெற்ற சொந்த தேசத்திற்கு திரும்ப வந்திருப்பது ஓர் இனிப்பான செய்தியாகவும் இருந்தது. வரலாற்று ஆசிரியர் இஸ்ரவேலரின் வம்ச வரலாறு மற்றும் வரலாற்றின் செய்திகளை – ஆதாமில் (1நாளா. 1:1) இருந்து பாபிலோனில் இருந்து திரும்ப வந்தது (2நாளா.26:23) வரை குறிப்பிட்டு, யூதர்களுக்கு தேவனுடைய வாக்குதத்தங்களையும் அவற்றின் நோக்கங்களை 1) இடம் 2) தேசம் 3) தாவீது ராஜா 4) லேவிய ஆசாரியத்துவம் 5) தேவாலயம் மற்றும் 6) மெய்யான ஆராதனை இவகளில் எதுவும் பாபிலோனியரின் சிறையெடுப்பினால் ரத்து செய்யப்படவில்லை என்பதை நினைவுபடுத்துவதற்காக எழுதியிருக்கிறார். அவர்களின் கடினமான வேளையை அவர்கள் சந்தித்த போதிலும் அவர்களுக்கென்று – ஆவிக்குரிய பாரம்பரியம் ஒன்று இருக்கிறது என்பதையும், அவர்களை தேவனிடத்தில் உண்மையுள்ளவர்களாக இருங்கள் என உற்சாகப்படுத்தியும் எழுதுகிறார்.  

வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

முதல் மற்றும் இரண்டாம் நாளாகமம் என்பது ஜெரோம் இட்ட பெயர், இப்புத்தகம் சுருக்கமாக தாவீதின் உடன்படிக்கை மற்றும் தேவாலய ஆராதனை இவைகளுக்கு முக்கியத்துவம் தந்து பழையஏற்பாட்டின் வரலாற்றை மீண்டும் உருவாக்குகிறது. இலக்கிய படைப்பில் இணையொத்த புத்தகங்கள் என்று பார்ப்போமானால், தாவீது ராஜாவின் ஆட்சியை குறித்து விளக்கம் தருவதில் 1நாளாகமம் - 2சாமுவேல் புத்தகத்திற்கு இணையானதாக இருக்கிறது. முதல் நாளாகம புத்தகம் ஆதாம் (1:1) உடன் ஆரம்பித்து, தாவீதின் மரணம் சம்பவித்த கி.மு. 971-வுடன் (29:26-30) முடிவடைகிறது. இரண்டாம் நாளாகம புத்தகம் சாலமோனுடன் (1:1) ஆரம்பித்து   1 மற்றும் 2 ராஜாக்கள் புத்தகத்தில் காணும் வரலாற்று காலங்களை குறித்து பேசுகிறது. குறிப்பாக, தென் தேசத்து யூதா ராஜ்ஜியத்தின் ராஜாக்களை குறித்து பேசுகிறது, வடதேசத்து 10 கோத்திரங்கள் மற்றும் அவர்களை ஆளுகை செய்பவர்கள் அவர்கள் முழுவதும் பொல்லாப்பினால் நிறைந்து, மாய்மாலமான ஆராதனையை செய்தபடியால் அவர்களைக் குறித்து பேசவில்லை. அது கி.மு.971-வில் நடைபெற்ற சாலமோனின் ஆட்சியில் (1:1) ஆரம்பித்து கி.மு. 538-வில் (36:23) பாபிலோனில் இருந்து சொந்த தேசத்திற்கு திரும்பின நாள் வரைக்கும் பேசுகிறது. 55 சதவீதத்திற்கு மேல் நாளாகம புத்தகத்தில் இருக்கும் செய்திகள் தனித்தன்மை வாய்ந்தவை – அதாவது, 2சாமுவேல் அல்லது 1மற்றும்2 ராஜாக்கள் புத்தகத்தில் நாம் இவைகளைக் காணமுடியாது. ”வரலாற்றுஆசிரியர்” எவை எதிர்மறையானவையாக இருந்தனவோ அல்லது தாவீதின் ஆட்சிக்கு விரோதமாக இருந்தனவோ அவற்றை தவிர்க்க முயன்றுள்ளார். மறுபுறத்தில் பார்க்கும் போது, தேவாலய வழிபாடு மற்றும் தாவீதின் வம்ச வழிக்கு முக்கியத்துவம் குறித்து பேசும்போது அவைகளின் தனித்தன்மையை எடுத்துக் காட்டுகிறார். பரிதாபமாக, 2ராஜாக்கள் 25 யூதா தேசத்தினர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட செய்தியுடன் முடிவடைகிறது.  2நாளா 36: 22-23 யூதர் பெர்சியாவில் இருந்து விடுவிக்கப்பட்டதையும் அவர்கள் எருசலேமுக்கு திரும்பினார்கள் என்று  நம்பிக்கையான வார்த்தைகளுடன் முடிவடைகிறது.

நாடுகடத்தப்பட்ட யூதா தேசத்தினர் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பின போது, ஆசீர்வாத்தின் எதிர்கால நோக்கத்தின் நாளாகமமாக இந்த இரண்டு புத்தகங்களும் எழுதப்பட்டன, தேசத்தினர் கடந்த காலத்தில் அவர்கள் ஆவிக்குரிய/ஒழுக்க நெறிமுறைகளில் இருந்து தவறி, தேவ கோபாக்கினைக்கு ஏற்கெனவே உள்ளாகி அதற்குரிய கிரயத்தைச் செலுத்தி இருந்தனர். 

முதல் மற்றும் இரண்டாம் நாளாகம புத்தகத்தின் சாராம்சமாக இவற்றைச் சொல்லலாம்: 

1. இஸ்ரவேலரின் தெரிந்தெடுக்கப்பட்ட வம்சவழியினரின் வரலாறு 1 நாளா.1-9
2. ஒன்றுசேர்ந்திருந்த ராஜ்ஜியத்தில் சவுல் (1நாளா.10), தாவீது (1நாளா.11-29), மற்றும் சாலமோனின் ஆட்சி (2நாளா.1-9). 
3. பிரிக்கப்பட்ட ராஜ்ஜியத்தில் யூதாவின் ஏகாதிபத்திய ஆட்சி (2நாளா.10-36:21).
4. யூதா அதன் எழுபது வருட சிறையிருப்பில் இருந்து விடுவிக்கப்படுதல் (2நாளா. 36:22,23).

வரலாற்றுக் கருப்பொருள் இறையியல் கருப்பொருளுடன் இரண்டற கலந்து, மனுக்குல வரலாற்றின் மேடையில் இஸ்ரவேலரைக் குறித்த தேவனின் தெய்வீக நோக்கம் இதில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நாடு திரும்புதல், யூதர்களுக்கு அவர்களின் பலதரப்பட்ட கடந்தகால நிலை, நிகழ்கால அவலநிலை என  எப்படி இருந்தாலும், தேவன் தாம் உடன்படிக்கை செய்த வாக்குதத்தத்தில் உண்மயுள்ளவராக இருப்பார் என்பதை நிச்சயமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கென்றே இந்த இரண்டு புத்தகங்களும் வடிவமைக்கப்பட்டன. தேவனால் அவர்கள் முதலில் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட தேசத்திற்கு - மோசேயின் பிரமாணசட்டப்படி அவர்கள் தேவனது நியாயதீர்ப்பிற்கு உட்பட்டவர்களாக (உபா.28:15-68) இருந்த போதிலும், அவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தாலும் நாடு கடத்தப்பட்டதால் யூதர்களின் இன அடையாளம் அழிக்கப்படாமல் அவர்களது சொந்த தேசத்திற்கு தேவன் திருப்பி கொண்டுவந்தார். அவர்களது தேசிய அடையாளமும் (இஸ்ரவேல்) பாதுகாக்கப்பட்டது (ஆதி.12;1-3;15:5). எலியேசரின் குமாரன் பினெகாஸ் வழியாக ஆசாரியத்துவமும், லேவியர்களின் வம்சவழியும் தேவாலய ஆராதனைக்கென்று தேவனுடைய பிரசன்னம் ஓர் நாளில் திரும்பும் என்ற நம்பிக்கையில் பாதுகாக்கப்பட்டது (எண்.25:10-13; மல்கியா 3:1). எதிர்காலத்தில் நிறைவேறும் என்றதாக இருப்பினும் தாவீதின் வம்சவழி வரும் ராஜா தோன்றுவார் என்பது இன்றும் உறுதிபடுத்தப்பட்டதாக இருந்தது (2சாமு. 7:8-17; 1நாளா. 17:7-15). அவர்கள் ஒவ்வொரு தனிநபரின் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கை மற்றும் நித்திய காலமும் உரியதாக இருக்கும் தேவனின் ஆசீர்வாதம் மீட்டெடுக்கப்படும் என்பதற்கான நம்பிக்கை - புதிய உடன்படிக்கை ஏற்படுவதின் மீதே சார்ந்து இருந்தது (எரே.31:31-34).

இந்த புத்தகங்கள் தனித்தனியாக குறிப்பிடும் இரண்டு நன்னடத்தை விதிகள் – பழைய ஏற்பாட்டின் ஏனைய புத்தகங்கள் அனைத்திலும் மேலோங்கி நிற்கின்றன. அவை – கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும், கீழ்ப்படியாமை நியாயதீர்ப்பைக் கொண்டுவரும் என்பதே. 

நாளாகமத்தில் நாம் காண்பது, ராஜா கீழ்ப்படிந்து கர்த்தரை நம்பும் பொழுதெல்லாம், தேவன் அவர்களை ஆசீர்வதித்து பாதுகாத்தார். ஆனால் எப்பொழுது ராஜா கீழ்ப்படியாமல், கர்த்தரை விட்டுவிட்டு, உடன் / அல்லது வேற்று ஒருபொருள் மீது அல்லது ஒரு நபர் மீது தன் நம்பிக்கையை வைத்த போது, தேவன் அவர் அளித்திருந்த ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் திரும்ப பெற்றுக் கொண்டார்.

யூத ராஜாக்களின் மூன்று அடிப்படையான தவறுதல்கள் 1) தனிப்பட்ட நபர்களின் பாவம் 2) மாய்மாலமான / உருவ வழிபாடு உடன்/அல்லது 3) தேவனைக் காட்டிலும் மேலாக மனுஷன் மீது நம்பிக்கையை வைத்தல். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

முதல் மற்றும் இரண்டாம் நாளாகம புத்தகங்கள் தெரிந்தெடுக்கப்பட்ட வம்சவழி மற்றும் வரலாற்று குறிப்புகளை தொகுத்து வழங்குகிறது. எங்கேயும் கட்டவிழ்க்க முடியாத சவால்கள் என எதுவும் இந்த இரண்டு புத்தகங்களிலும் இல்லை. சில சிக்கல்கள் எழும்புகின்றன: 1) 1மற்றும்2 நாளாகம புத்தகத்தை எழுதிய ஆசிரியர் யார்? 2) 2 நாளா.36:22-23 எஸ்றா 1:1-3 ஒன்றன்மீது ஒன்று கைகோர்த்துச் செல்வதால் எஸ்றா தான் இதன் ஆசிரியர் எனக் கூறுகிறதா? 3) 1நாளா.1-9 ல் உள்ள வம்சவழிக்கும் ஏனைய பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் காணப்படும் வம்சவரலாற்றுக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி சமன் செய்வது? 4) உபாகமம் 28ல் சொல்லப்பட்டிருக்கும் சாபங்கள், எழுபதுவருட சிறையிருப்பு முடிவுக்கு வந்து விட்டபடியால், இன்னமும் செயல்பாட்டில் உள்ளதா? 5) சாமுவேல் மற்றும் ராஜாக்கள் புத்தகத்தை ஒருவர் ஒப்பிட்டுப் பார்ப்பாரானால், இரண்டுக்கும் இடையில் என்ணிக்கையில் காணப்படும் வித்தியாசத்தைக் குறித்து எப்படி விளக்கம் தருவது?

சுருக்கம்

I.  தெரிந்தெடுக்கப்பட்ட வம்சவரலாறு (1:1-9:34)
அ. ஆதாம் முதல் தாவீதிற்கு முன்புவரை (1:1 – 2:55)
ஆ. தாவீது முதல் சிறைபிடிக்கப்பட்டுப் போனது வரை (3:1-24)
இ. பன்னிரண்டு கோத்திரங்கள் (4:1 -9:1)
ஈ. எருசலேமில் வாசம் செய்பவர்கள் (9:2-34)
 
II. தாவீது அரியணை ஏறுதல் (9:35-12:40)
அ. சவுலின் வம்சவழி மற்றும் மரணம் (9:35-10:14)
ஆ. தாவீது அபிஷேகிக்கப்படுதல் (11:1-3)
இ. எருசலேம் மேற்கொள்ளப்படுதல் (11:4-9)
ஈ. தாவீதின் ஆட்கள் (13:1 - 29:30)
 
III. தாவீதின் ஆட்சி (13:1 -29:30)
அ. உடன்படிக்கையின் பெட்டி (13:1 -16:43)
ஆ தாவீதின் உடன்படிக்கை (17:1-27)
இ. தெரிந்தெடுக்கப்பட்ட சேனையின் வரலாறு (18:1 – 21:30)
ஈ. தேவாலயம் கட்ட ஆயத்தங்கள் செய்தல் (22:1 – 29:20)
உ. சாலமோனுக்கு ஆட்சி மாற்றம் (29:21-30)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.