வேதாகம வரலாறுகள்

உபாகமம் – என்று அழைக்கப்படும் மோசேயின் ஐந்தாம் புத்தகம்

தலைப்பு:

Deuteronomy என்னும் ஆங்கில தலைப்பு தமிழ் உபாகமம் 17:20 வசனத்தில்  “நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒர் பிரதியை எடுத்து” என்று வரும் வார்த்தைகள் “இரண்டாம் நியாயப்பிரமாணம்” என கிரேக்க செப்டுவகஜிண்டில் (LXX) தவறாக மொழிபெயர்த்ததினால், அதற்கு “Deuteronomium” என்ற பெயரை - லத்தீனின் பதிப்பு (வுல்கேட்) வழங்கியது. முதல் இரண்டு வார்த்தைகளான, “சொல்லப்பட்ட வார்த்தைகள்” என்பதில் இருந்து எபிரேய புத்தகத்தின் தலைப்பு பெறப்பட்டது. இது இரண்டாம் நியாயப்பிரமானமாக இல்லாமல், நியாயப்பிரமாணத்தைக் குறித்து மோசே பேசிய வார்த்தைகளை - குறிப்பெடுத்து வைத்த புத்தகமாக இருக்கிறபடியால், எபிரேயத் தலைப்பு இப்புத்தகத்திற்கு சிறப்பான தலைப்பாக அமைந்துள்ளது. இலக்கிய அமைப்பில் ஐந்து பாகங்களாக அமையப்பெற்ற ஐந்து-ஆகம (Pentateuch) புத்தகங்களை நிறைவு செய்வதாக உபாகமம் புத்தகம் இருக்கிறது. 

ஆசிரியர் மற்றும் தேதி:

மோசே தான் இப்புத்தகத்தை எழுதினார் என்பதற்கு இந்த புத்தகமே சாட்சியாக நிற்கிறது (1:15; 31:9; 22:24). பழைய ஏற்பாடும் (1ராஜா.2:3; 8:53; 2ராஜா. 14:6; 18:12) புதிய ஏற்பாடும் (அப்.3:22,23; ரோமர் 10:19) மோசே தான் இதன் ஆசிரியர் என்னும் உரிமை பாரட்டுதலை ஆதரிக்கின்றன. உபாகமம் 32:48 -34:12 வசனங்கள் மோசே மரித்த பிறகு (ஒருவேளை யோசுவா சேர்த்திருப்பார் எனக் கருதப்படுகிறது), புத்தகத்தின் ஏனைய பகுதிகள் மோசேயின் கைகளினால் கி.மு. 1405-ல் அவர் மரிப்பதற்கு முன்பு எழுதப்பட்டது.

எகிப்தில் இருந்து இஸ்ரவேல் ஜனங்கள் வெளியேறிய - 40-வது வருஷம் 11-வது மாதம் முதல் தேதியில் (1:4) இருந்து ஆரம்பித்து, இஸ்ரவேல் ஜனத்தாரிடம் மோசே 120 வயதில் விடைபெறுவதற்கு முன் பேசின பேச்சுக்களின் தொகுப்பாகவே இப்புத்தகத்தின் பெரும்பான்மையான பகுதி இருக்கிறது. இந்த பேச்சுக்களின் நிகழ்வு ஜனவரி-பிப்ரவரி, கி.மு.1405 எனத் தேதியிடப்படலாம். மோசேயின் வாழ்க்கையின் இறுதிகால கட்டத்தில் இப்பேச்சுக்களுக்கு எழுத்துவடிவம் தந்து, இஸ்ரவேலின் வருங்கால சந்ததியினரிடம் சென்று அடையும்படிக்கு ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்கள் கரங்களில் தரப்பட்டது.

பிண்ணனி மற்றும் அமைப்பு:

வரலாற்றின் காலகட்டத்தில் லேவியராகம புத்தகம் செல்வதைப் போல் இப்புத்தகம் முன்னேறிச் செல்லவில்லை. முழுவதும் ஒரே இடத்தில் ஏறக்குறைய ஒரு மாத கால அவகாசத்தில் இப்புத்தகத்தில் உள்ள சமபவங்கள் அனைத்தும் நிறைவேறின. (உபா.1:3, உபா 34:8 மற்றும் யோசுவா 5:6-12). யோர்தானின் இக்கரையான வனாந்திரத்தின் சமனான வெளியிலே கூடாரமிட்டு (உபா.1:1) இருந்த வேளை அது. எண்ணாகமம் 36:13-ல் இந்த இடம் – அர்னோன் நதியின் கிழக்குபகுதி – எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள “மோவாபின் சமனானவெளியில்” கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வெளியேறிய வருடத்தில் இருந்து ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.

உபாகமம் புத்தகம் மோசேயின் வாழ்க்கையின் இறுதி வாரங்களில் நிறைவேறின சம்பவங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. முக்கியச் சம்பவமாக - இஸ்ரவேல் ஜனங்களுக்கு தெய்வீக வெளிப்பாடாக – கர்த்தர் மோசேயின் மூலமாக பேசின வசனங்களைச் சொல்லலாம் (1:1-30:20; 31:30-32:47; 33:1-29). இதைத் தவிர இப்புத்தகத்தில் காணப்படும் இதர சம்பவங்கள்: 1) மோசே நியாயப்பிரமாணத்தை புத்தகமாக குறித்து வைப்பதும், யோசுவாவை புதிய தலைவனாக நியமிப்பதும் (31:1-29); 2) நேபோ பர்வதத்தில் இருந்து மோசே கானான் தேசத்தைப் பார்த்தல் (32:48-52; 34:1-4); மற்றும் 3) மோசே மரித்தல் (34:5-12). 

வாய்வழியாகவும் எழுத்து ஆக்கமாகவும் மூலமுதலான உபாகமம் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் - இஸ்ரவேல் தேசத்தின் இரண்டாம் தலைமுறையினர். அந்த தலைமுறையினரின் 40-ல் முதல் 60 வயது வரை இருந்தவர்கள் - எகிப்தில் பிறந்தவர்கள்; 40 வயதைக்காட்டிலும் குறைவாக இருந்தவர்கள் எகிப்தில் இருந்து வெளியேறின போது குழந்தைகளாக அல்லது பதின்ம வயதினராக இருந்தவர்கள். (யோசுவாவும் காலேபும் தவிர, அவர்கள் வயதில் மூத்தவர்கள்). 40 வயதிற்கும் குறைவான வயதில் இருந்தவர்கள், வனாந்திரத்தில் பிறந்து அதில் வளர்ந்தவர்கள். அனைவரையும் சேர்த்து பார்க்கும் போது, எகிப்தை விட்டு வெளியேறிய 40-வது வருடத்திற்கு பிறகு, இவர்கள் யாவரும் யோசுவாவின் தலைமையின்கீழ் கானான் தேசத்தை சுதந்தரிக்க இருந்த தலைமுறையினர் என்பதில் அடங்கும் (1:34-39).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்:

லேவியராகமத்தைப் போல, உபாகமபுத்தகம் சட்டப்படியான விபரங்களை உள்ளடக்கியது, ஆனால் இப்புத்தகத்தில் சொல்லழுத்தம் ஆசாரியர்களுக்கு அளிக்கப்படுவதைக் காட்டிலும் மக்களுக்கு அதிகம் தரப்பட்டுள்ளது. இஸ்ரவேலின் இரண்டாம் தலைமுறையினரிடம் - கர்த்தரை விசுவாசித்து, ஓரேப் (சீனாய்) மலையில் தேவன் செய்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படியுங்கள் என்று அழைப்பு விடுத்த போது, இஸ்ரவேலின் கடந்த கால வரலாற்றில் நடைபெற்ற சில சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அவரது கருத்திற்கு மோசே விளக்கம் அளித்தார். ஒரேபில் (9:7-10:11) காதேஸில் (1:26-46) இஸ்ரவேல் கர்த்தருக்கு விரோதமாக கலகம் செய்தது - அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தினது என்பதை நினைப்பூட்டினார். கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களின் மீது ஜெயம் பெறச்செய்து எவ்வளவு தூரம் சொல்லுறுதி உடையவராக இருந்தார் என்பதையும் நினைவுபடுத்தினார் (2:24 – 3:11; 29:2,7,8). மிக முக்கியமாக, அவர்களின் முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுக்கு தேவன் வாக்குபண்ணியிருந்த தேசத்தை, ஜனங்கள் சுதந்தரித்துக் கொள்ள அழைப்பு விடுத்தார் (1:8; 6:10;9:5;29:13;30:20; 34:4; உறுதிபடுத்த, ஆதியாகமம் 15:18-21;26:3-5; 35:12 பார்க்கவும்). மோசே கடந்த காலத்தை திரும்பி பார்த்ததும்       அல்லாமல், அவர் இஸ்ரவேலின் எதிர்காலத்தையும் கண்டு – அதில் இஸ்ரவேல் தேவனுக்கு கீழ்ப்படியாமல் போவது - இஸ்ரவேல் தேசங்களின் நடுவில், கர்த்தர் அவர்களின் முற்பிதாக்களுக்குச் செய்த உடன்படிக்கை நிறைவேறுவதற்கு முன்பதாக - எப்படி சிதறுண்டு செல்லும் என்பதையும் மோசே கண்டார் (4:25-31; 29:22-30:10; 31:26-29).

உபாகமம் புத்தகம் சங்கீதம் மற்றும் ஏசாயா உடன் இணைந்து, தேவனின் பண்புகளை அதிகமாக வெளிப்படுத்துகிறது. இதினால், இப்புத்தகம் புதிய ஏற்பாட்டில் 40 தடவைக்கும் மேலாக புதிய ஏற்பாட்டில் உள்ள உள்ளடக்கத்திற்கு நேரடி உதவியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது (சங்கீதம் மற்றும் ஏசாயா இதனிலும் அதிகம்). உபாகமம் கர்த்தர் ஒருவரே தேவன் (4:39;6:4) என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், அவர் எரிச்சலுள்ள தேவன் (4:24) உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் (7:9), அன்பு வைப்பவர்  (7:13), இரக்கமுள்ளவர் (4:31) ஆனாலும் பாவத்தைக்கண்டு எரிச்சலடைகிறவர் (6:15). இந்த தேவனே இஸ்ரவேல் தேசத்தை தம்மிடம் வரும்படி அழைத்தவர். “உன் தேவனாகிய கர்த்தர்” என்னும் வாக்கியத்தினை இஸ்ரவேலரிடம் மோசே 250 தடவைக்கும் மேலாக மீண்டும் மீண்டும் கூறுகிறார். 

இஸ்ரவேலர் கீழ்ப்படியும்படிக்கு அழைப்பைப் பெற்றனர் (28:2), இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பயந்து (10:12), அவர் வழிகளில் நடந்து, அவர் கற்பிக்கிற கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்வதினால் - இஸ்ரவேல் தன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து (10:12), சேவிக்க (10:12) அழைக்கப்பட்டனர் (10:12,13). அவருக்கு கீழ்ப்படிவதினால், இஸ்ரவேல் அவரது ஆசீர்வாதங்களைப் (28:1-14) பெறும். கீழ்ப்படிதலும், தனிப்பட்ட வாழ்க்கையின் பரிசுத்தத்தை காத்துக் கொள்வதும் – எப்பொழுதும் தேவனுடைய குணாதிசயத்தினை அடிப்படையாகக் கொண்டது. அவர் யாராக இருக்கிறாரோ, அவ்வண்ணமே அவருடைய ஜனங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் (7:6-11; 8:6;11,18; 10:12,16,17; 11:13; 13:3,4; 14:1,2).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்:

உபாகமத்தை வாசிப்பவருக்கு, விளக்கம் அளிப்பதில் மூன்று சவால்கள் நிற்கின்றன. முதலாவது, உபாகம புத்தகம் தனிப்பட்ட புத்தகமா அல்லது ஐந்து ஆகம புத்தகங்களில் ஒன்றா? என்ற கேள்வி. வேதாகமத்தின் தோரா என்னும் தோல்சுருள் - ஆகமபுத்தகங்களான, ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், மற்றும் உபாகமம் என்னும் இந்த ஐந்து புத்தகங்களை உள்ளடக்கியது. வேதாகமத்தின் மற்ற புத்தகங்கள் இந்த ஐந்து புத்தகங்களை ஒரே தொகுப்பாக காண்கின்றன. ஐந்து ஆகம புத்தகங்களின் (Pentateuch) பிண்ணனி/சூழலை விட்டு பிரித்து, உபாகமத்தின் ஒட்டுமொத்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. வாசிப்பவர் உபாகம புத்தகத்திற்கு முன் உள்ள நான்கு ஆகம புத்தகங்களில் பழக்கமானவராக இருக்கிறார் என்று கருத்தில் எடுத்துக்கொள்கிறது. ஆதியாகமத்தில் இருந்து எண்ணாகமம் வரை வெளிப்படுத்தப் பட்டவை அனைத்தையும் உபாகமம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மட்டுமல்ல, தேசத்தில் பிரவேசித்ததும், வெளிப்பாடுகளின் நோக்கத்தை மக்களின் கவனத்திற்கு கொண்டுவரவும் செய்கிறது. கிடைக்கப்பெறும் ஒவ்வொரு எபிரேய கையெழுத்துப் பிரதியும், ஐந்து ஆகம புத்தகங்கள் எப்படி பிரிக்கப்பட்டு இருக்கின்றனவோ அதேவரிசையில் – இன்றைய நாட்களிலும் ஐந்து புத்தகங்களையும் பிரித்து வரிசைப்படுத்தி இருப்பதன் மூலம் – அந்த வரிசையில் இந்த புத்தகம் இஸ்ரவேலுக்கு மோசே இறுதி நாட்களில் பேசின பேச்சுக்கள் ஒன்று சேர்த்த  கட்டாக இருக்கிறது. அதே வேளையில், உபாகமம் - தனித்து மோசேயின் பேச்சுக்கள்-பதிவுகளின் தொகுதியாகவும் பார்க்கலாம்.

இரண்டாவது சவால், உபாகம புத்தகத்தின் வடிவமைப்பு மோசேயின் காலத்தில் இருந்த மதச்சார்பற்ற ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதா? என்பது. வேதாகம வல்லுனர்கள் கடந்த 35 வருடங்களில், ஏறக்குறைய மோசே வாழ்ந்த காலத்தில், கிழக்கத்திய தேசங்களை ஆண்ட மன்னர்கள்  மேற்கொண்ட ஒப்பந்தங்களுக்கும் உபாகம புத்தகத்தில் வடிவமைப்பிற்கும் ஒருமைப்பாடு இருப்பதால், அவற்றின் அடிப்படையாக கொண்டு மோசே எழுதியவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என குறிப்பிடுகின்றனர். மதச்சார்பற்ற ஆதிக்கம் செலுத்தும் மன்னர்களின் ஒப்பந்தங்கள் (மன்னன் தன் அடிமைகளுக்கு தன் விருப்பங்களை எழுதுவது) கிறிஸ்துவுக்கு முன், மத்திய முதல் புத்தாயிரம் ஆண்டில்  எழுதப்பட்ட மாதிரி வடிவங்களை பின்பற்றவில்லை. இந்த ஒப்பந்தங்களில் கீழ்க்காணும் பிரிவுகளைக் காணலாம். 1) முன்னுரை – நிபந்தனைகளுக்கு உட்படுவோரின் அடையாளம் 2) வரலாற்றுப்படியான முன்னுரை - மன்னர் தன் அடிமைகளைக் கையாள்வதின் வரலாறு 3) பொதுவான மற்றும் குறிப்பான நிபந்தனைகள் 4) சாட்சிகள் 5) ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் மேலும் 6) உறுதிமொழிகள் மற்றும் உடன்படிக்கை ஒப்புதல்கள். உபாகமம் இதே வடிவமைப்பை பின்பற்றுகிறது என நம்புகின்றனர்.  உபாகமம் 1:1-5 ஓர் முன்னுரை என்பதினை ஏற்றுக்கொள்கின்றனர். 1:5 - 4:43-ல் வரலாற்று முன்னுரை, 27,28 அதிகாரங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்களை முன்வைக்கின்றன. இந்த வடிவமைப்பின் ஏனைய அதிகாரங்கள் எப்படி பொருந்துகின்றன என்பது தெரியவில்லை. மோவாபின் சமனான வெளிகளில் உடன்படிக்கை புதுப்பித்தல் ஏற்பட்டிருக்கலாம் என இருந்தாலும், இது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ உபாகமத்தில் காணப்படவில்லை. உபாகம புத்தகம் புதிய தலைமுறையினருக்கு மோசே அளித்த நியாயபிரமாணங்களின் விளக்கம் என உரிமை பாராட்டுகிறதே அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது நலம். மோசே உரையின் வடிவமைப்பை இந்த ஆகமம் பின்பற்றுகிறது.

மூன்றாவது சவால், மோவாப் தேசத்திலே மேற்கொண்ட உடன்படிக்கை (29:1). இந்த உடன்படிக்கை சீனாய் மலையில் 40 வருடங்களுக்கு முன் முதல் தலைமுறையினருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் புதுப்பித்தல் தான் என்பது அனேகரின் கருத்து. இங்கே மோசே அதே உடன்படிக்கையை மேம்படுத்தி இஸ்ரவேலின் இரண்டாம் தலைமுறையினருடன் புதுப்பித்தார் என்று கருதப்படுகிறது. மற்றொரு பார்வை – இஸ்ரவேல் தேசத்தாருக்கு தேசத்தின் உரிமைக்கு உத்திரவாதம் அந்நாட்களுக்கும், எதிர்காலத்திற்கும் அளித்த பாலஸ்தீன உடன்படிக்கையே இந்த இரண்டாம் உடன்படிக்கை என்கின்றனர். மூன்றாவது நிலைப்பாடு - மோசே, சீனாய் உடன்படிக்கையை இஸ்ரவேல் நிச்சயம் கைக்கொள்ளாது என்பதை அறிந்திருந்தபடியால், அதிகாரம் 29,30-ல் புதிய உடன்படிக்கையினை எதிர்பார்த்தார் என்கிறது. மூன்றாம் கருத்தே மிகச்சிறப்பான கருத்து ஆக காணப்படுகிறது. 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.