வேதாகம வரலாறுகள்

ஆதியாகமம் – என்று அழைக்கப்படும் மோசேயின் முதல் புத்தகம்

ஆதியாகமம் (Genesis) என்னும் தலைப்பு, “தோற்றம்” என்று பொருள் தரும் கிரேக்க மொழிபெயர்ப்பில் இருந்து வருகிறது (செப்டுவஜிண்ட் LXX); வேதாகமத்தின் முதல் வார்த்தை “ஆதியிலே” என்பதில் இருந்து எபிரேய தலைப்பு பெறப்பட்டது. பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள், வேதாமகத்தின் ஐந்து ஆகமங்களையும், முழு வேதாகமத்தினையும் அறிமுகம் செய்திட ஆதியாகமம் உதவுகிறது. புதிய ஏற்பாட்டில் 35 இடங்களுக்கும் மேலாக குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்தும், இரு ஏற்பாட்டுகளிலும் நூற்றுக்கும் மேலான இடங்களில் இதன் மறைமுக குறிப்புகள் பயன்பட்டிருப்பதே - வேத வாக்கியங்களில் ஆதியாகமத்தின் தாக்கத்தை நிரூபிக்கும் சான்று. ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்தில் தொடங்கும் இரட்சிப்பின் கருத்துத் தொடர், வெளிப்படுத்தல் 21, 22 ஆம் அதிகாரங்களில், மீட்கப்பட்ட விசுவாசிகளால் ஆன நித்திய ராஜ்யத்தினை மகிமையாக, தத்ரூபமாக சித்தரிக்கும் வரை அது முடிவடையவில்லை.

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

  1. ஆதியாகமத்தில் ஆசிரியர் தன்னைத்தான் அடையாளம் காட்டவில்லை.             
  2. ஏறக்குறைய மோசே பிறந்ததற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன் ஆதியாகமம் முடிவடைகிறது, பழைய ஏற்பாடு (யாத்.17:14; எண். 33:2; யோசுவா 8:31; 1ராஜா.2:3;          2 ராஜா. 14:6; எஸ்ரா 6:18; நெகேமியா13:1; தானி.9:11; மல்கியா 4:4) மற்றும் புதிய ஏற்பாடு (மத்.8:4; மாற்கு 12:26; லூக்கா 16:29; 24:27, 44; யோவான் 5:46;7:22; அப்.15:1; ரோமர்10:19; 1கொரி.9:9; 2கொரி.3:15) மேற்காணும் வசனங்களின் அடிப்படையிலும் அவருடைய படிப்பின் பிண்ணனியையும் (அப்.7:22) வைத்துப் பார்க்கும் போது இதனை தொகுத்து எழுதுவதற்குப் பொருத்தமான ஆசிரியர் மோசே தான் எனக் கூறுகின்றனர். வேறு மோசே தான் ஆசிரியர் என்பதை எதிர்த்து வலிந்து தீர்க்க்ககூடிய எந்தவொருக் காரணமும் எழவில்லை. ஆதியாகமம், யாத்திராகமம் (கிமு. 1445) புத்தகத்திற்குப் பின், ஆனால் மோசேயின் மரணத்திற்கு முன் எழுதப்பட்டது (கிமு. 1405). மோசேயின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றின் குறிப்பினை யாத்திராகமம் 1-6ல் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். 

பிண்ணனி மற்றும் அமைப்பு

ஆதியாகமத்தின் தொடக்கத்தின் அமைப்பு - நித்திய கடந்தகாலம். தேவன், தமது விருப்பமான செயல் மற்றும் தெய்வீக வார்த்தையினால், சர்வ சிருஷ்டிகளையும் வார்த்தையால் சிருஷ்டித்தார், அலங்கரித்தார், இறுதியில், தேவனாகிய கர்த்தர் ஆதாமைப் பூமியின் மண்ணினாலே தமது சாயலில் வடித்து ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதி சிருஷ்டித்தார். தேவன் தமது சிருஷ்டிப்பின் கிரீடமாக மனுக்குலத்தை உண்டாக்கினார். அதாவது, அவருடைய உறவினைக் கொண்டாடி, அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்க்கும் தோழர்களாக வைத்தார்.

ஆதியாகமத்தில் காணும் ஆரம்ப சம்பவங்களின் வரலாற்றுப் பிண்ணனி,  மெசொப்பொத்தாமியாவைச் சேர்ந்தது. இந்த புத்தகம் எந்த வரலாற்று காலகட்டத்திற்காக எழுதப்பட்டது என்பதை துல்லியமாக கூறுவது கடினமாக இருந்தாலும், இஸ்ரவேல் ஜனங்கள் ஆதியாகமத்தை யோர்தான் நதியைக் கடந்து வாக்குதத்தம் செய்யப்பட்டிருந்த தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் வாசிக்கக் கேட்டிருந்தனர் (கிமு. 1405).

புவியியல் ரீதியில் ஆதியாகமம் 3 தெளிவான, தொடர்ச்சியான அமைப்பைக் கொண்டுள்ளது: 1) மெசொப்பொத்தாமியா (அதிகாரங்கள் 1-11) 

2) வாக்குதத்தம் செய்து தரப்பட்ட தேசம் (அதிகாரங்கள் 12-36) மற்றும் எகிப்து (அதிகாரங்கள் 37-50). இந்த மூன்று பிரிவுகளின் கால அளவுகள்; 1) சிருஷ்டிப்பில் இருந்து 2090 கிமு, 2) 2090 கிமு – 1897 கிமு, மற்றும் 3) 1897-1804 கிமு வேதாகமத்தின் ஏனைய புத்தகங்களின் கால இடைவெளியை ஒன்றுசேர்த்தாலும் அதைக் காட்டிலும் - அதிக கால இடைவெளியை ஆதியாகமம் கடந்து செல்கிறது.

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

இந்த தொடக்கங்கள் (ஆதியாகமம்)-இன் புத்தகத்தில் தேவன் தம்மை வெளிப்படுத்தி, இஸ்ரவேலுக்கு உலகத்தை குறித்த ஓர் பார்வையை தந்தார். அது இஸ்ரவேலுக்கு அண்டை தேசத்தாரின் உலகப்பார்வைக்கு, பல காலகட்டங்களில் முற்றிலும் முரணானதாக இருந்தது. தேவன் இருக்கிறார் என்பதையோ அல்லது அவரின் ஆள்தத்துவத்தையோ அவரின் செயல்பாடுகளையோ முன்வைத்து தற்காத்துக்கொள்ள - ஆசிரியர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேலின் அண்டை தேசத்தாரின் தேவர்கள் என்றுச் சொல்லப்பட்டவர்களில் இருந்து - தான் முற்றிலும் மாறுபட்டவர் என்பதை தெளிவாக காட்டி, தன்னைத்தான் வேறுபடுத்திக் கொள்கிறார். பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன், மனுஷன், பாவம், மீட்பு, உடன்படிக்கை, வாக்குதத்தம், சாத்தான் மற்றும் தேவதூதர்கள், இராஜ்ஜியம், வெளிப்படுத்தல், இஸ்ரவேல், நியாயத்தீர்ப்பு, மற்றும் ஆசீர்வாதம் உள்ளடக்கிய இறையியலின் அடிப்படை கருப்பொருட்கள் வெளிப்படுத்தப்படுகிறது.

ஆதியாகமம் 1-11 (முதன்மை/ பழமையின் வரலாறு) பிரபஞ்சத்தின் தோற்றங்களைக் குறித்து வெளிப்படுத்துகிறது. அதாவது, காலம், இடம் போன்றவற்றின் ஆரம்பம், மனிதனின் அனுபவத்தில் - திருமணம், குடும்பம், வீழ்ச்சி, பாவம், மீட்பு, நியாயத் தீர்ப்பு மற்றும் தேசங்கள் போன்ற அனேக முதல்-அனுபவங்கள் தொடங்கின. ஆதியாகமம் 12 முதல் 50ம் அதிகாரம் வரை (கோத்திரத்தலைவர்களின் வரலாறு) இஸ்ரவேலர்கள் எப்படி குடும்பமாக வாழ ஆரம்பித்தனர், அவர்கள் சந்ததியை ஏபேர் (அதினால் தான் ”எபிரேயர்”; அதியாகமம் 10:24,25) வரை கண்டறிய முடியும் என்பது இஸ்ரவேலர்களுக்கு விளக்கப்பட்டது. இன்னும் தூர உறவான சேம், நோவாவின் மகன் வரையும் கூட அவர்கள் சந்ததி ஆறியப்பட்டிருந்தது. (சேமுடைய சந்ததியார்; ஆதியாகமம் 10:21). 

தேவனுடைய ஜனங்கள் தங்கள் சந்ததி மற்றும் குடும்ப வரலாற்றினை அறிந்துகொள்ள முடிந்தது மட்டுமல்ல, அவர்கள் குடும்ப அமைப்பு, பழக்க வழக்கங்கள், மொழிகள், வேறுபட்ட கலாச்சாரங்கள் இவைகளின் தோற்றத்தினையும் அறிந்திருந்தனர். விசேஷமாக, மனிதனின் அடிப்படை அனுபவமான பாவம் மற்றும் மரணம் குறித்த புரிந்துகொள்ளுதல் அவர்களிடம் இருந்தது.

தேவனுடைய ஜனங்கள் கானானைச் சுதந்தரித்து, கானானியரை துரத்தி விட்டு அவர்களது வீடு மற்றும் உடைமைகளை சுதந்தரிக்க இருந்ததால், தேவன் இஸ்ரவேலரின் சத்துருக்களின் பிண்ணனி குறித்து அவர்களுக்கு முன்னறிவித்தார். இதனுடன், கொலையின் அழியாத்தன்மையின் வெளிச்சத்தில் அவர்கள் அறிவிக்க இருக்கும் யுத்தத்தின் உண்மையான அடிப்படையை மோசே எழுதிக் கொண்டிருந்த ஏனைய 4 புத்தகங்களுடன் இணக்கமாக (யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம்) அவர்கள் புரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இறுதியில், யூத தேசம் முந்தைய உலகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியின் வரலாற்றையும், இஸ்ரவேல் தேச தொடக்கத்தின் பிண்ணனியையும் அறிந்திருப்பதை அடிப்படையாகக் கொண்டு, யோசுவாவின் தலைமையின் கீழ் அவர்களது மூலமுதலான கோத்திரப்பிதா, ஆபிரகாமுக்கு வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தில் அவர்கள் தங்கள் புதிய தொடக்கத்தை தொடங்கி வாழ்வார்கள். 

ஆதியாகமம் 12: 1-3 தேவன் ஆபிரகாமுக்குத் தந்த வாக்குதத்தங்கள் மீது முதன்மையான கவனத்தை கொண்டுவந்தது. இது அவர்களின் பார்வை முழு உலகத்தில் உள்ள மக்கள் மீது இருந்ததை சுருக்கி, ஆதியாகமம் 1-11 ல் இஸ்ரவேல் என்னும் ஒரு சிறிய தேசத்தின் மீது அதாவது, அவர்கள் மூலமாக தேவன் அவரது மீட்பின் திட்டத்தை தொடர்ச்சியாக நிறைவேற்றும்படிக்குக் கவனத்தை கொண்டு வந்து நிறுத்தியது. “ஜாதிகளுக்கு ஒளியாக” (ஏசாயா 42:6) இருப்பதே இஸ்ரவேல் தேசத்தின் பணி என்பதை அடிக்கோடிட்டது. தேசம், வழித்தோன்றல்கள் (விதை) மற்றும் ஆசீர்வாதத்தினை தேவன் வாக்குத்தத்தம் செய்தார். இந்த மும்முனை ஆசீர்வாதம்தான் பின்வரும் நாட்களில் ஆபிரகாமுடன் (ஆதியாகமம்: 15:1-20) செய்த உடன்படிக்கைக்கு அடிப்படையாக மாறியது. அதற்குப்பின் வரும் வேத வாக்கியங்கள் யாவும் இந்த வாக்குதத்தங்களின் நிறைவேறுதலைக் குறித்துப் பேசுகின்றன.

பெரிய அளவில், ஆதியாகமம் 1-11 அதிகாரங்கள் தேவனுடைய குணாதிசயம் மற்றும் செயல்கள் என்னும் ஒரே செய்தியைக் குறித்துத்தான் பேசுகின்றன. இந்த வேதவசனங்கள் அடங்கிய அதிகாரங்களில் - நிகழ்வேறிய சம்பவங்களை தொகுத்துப் பார்க்கும் போது, மனுக்குலம் சுயவிருப்பத்தோடு கீழ்ப்படியாமல் சென்ற போது அவனுக்கு எவ்விதத்தில் தேவன் பதில் அளித்தார் என்பதில் இருந்து தேவனின் பரிபூரண கிருபையின் செயல்பாடு  வெளிப்படுகிறது. விதிவிலக்கு இல்லாமல், ஒவ்வொரு இடத்திலும் தேவன் அவருடைய கிருபையின் வெளிப்பாட்டை அதிகரித்தார். அதேவேளையில், எந்தவொரு விதிவிலக்கும் இல்லாமல், மனிதன் அதிகரிக்கும் பாவம் என்னும் மீறுதலினாலேயே பதிலளித்தான். வேதாகமத்தின் வார்த்தைகளின்படி, பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று  (ரோமர் 5:20).

இறுதியாக, வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய முக்கிய கருப்பொருள் இப்புத்தகத்தை ஏனைய புத்தகங்களில் இருந்து வேறுபிரிக்கிறது. அது வேதவசனங்களின் முதல் புத்தகம் கடைசிபுத்தகத்துடன் மிக நெருக்கமாக தொடர்பில் இருக்கிறது என்பதே. வெளிப்படுத்தல் புத்தகத்தில், ஆதியாகமத்தில் இழந்த பரதீசு மீட்டெடுக்கப்படும். ஆதியாகமம் 3-ல் காணும் சாபத்தின் விளைவினால் உண்டான பிரச்சினைகளுக்கு தனது புத்தகத்தில் யோவான் எதிர்காலத் தீர்வாக இருக்கும் சம்பவங்களை தெளிவாக விவரிக்கிறார். மனிதனின் வீழ்ச்சியினால் படைப்பிற்கு சாபத்தினால் உண்டான அழிவில் தேவன் எப்படி அவருடைய சிருஷ்டிகளை விலக்கி காக்கிறார் என்பதில் அவரது கவனத்தைச் செலுத்துகிறார். யோவானின் சொந்த வார்த்தைகளில் சொல்வோமானால், ”இனி ஒரு சாபமுமிராது” (வெளி.22:3). தேவனுடைய வார்த்தையின் கடைசி அதிகாரத்தில், விசுவாசிகள் மீண்டும் ஏதேன் தோட்டத்தில் “ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதையும்” (வெளி.22-14) தாங்கள் நகரத்திற்குள் பிரவேசிக்கவும் காண்கிறார்கள், அப்பொழுது, அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே தோய்த்து வெளுத்தவர்கள் (வெளி.7:14).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

இந்த புத்தகத்தின் ஒட்டுமொத்த மற்றும் தனிப்பட்ட செய்தி - விசுவாசம் மற்றும் கிரியைகளுக்கு முக்கிய பாடங்களைக் கற்றுத் தருவதாக இருக்கிறது என்பதால், ஆதியாகமத்தில் தனிப்பட்ட செய்திகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பது இப்புத்தகத்தின் பெரிய திட்டமும் நோக்கமுமாக இருப்பது என்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. ஆதியாகமம் சிருஷ்டிப்பு “ஒன்றும் இல்லாமையில் இருந்து”, “ex nihilo” என்னும் தெய்வீக கட்டளையில் இருந்து சிருஷ்டிக்கப்பட்டது எனக் கூறுகிறது. மனிதனின் வீழ்ச்சி, உலகம் முழுவதும் வெள்ளம், தேசங்கள் பகிர்ந்து அளிக்கப்படுதல் என்னும் மூன்று அதிர்ச்சிகரமான சம்பவங்களை நாம் உலக சரித்திரத்தை புரிந்து கொள்ள நமக்கு பிண்ணனியாக தரப்பட்டுள்ளது. பின்னர் ஆபிரகாமில் இருந்து, தேவனின் மீட்பு மற்றும் ஆசீர்வாத்தில் கவனம் செலுத்துகிறது.

ஆதியாகம-நாட்களில் காணப்பட்ட பழக்கவழக்கங்கள் இன்றைய நம்முடைய நாகரீக உலகில் காணப்படும் பழக்கவழக்கங்களுக்கு மிகவும் வேறுபட்டவை. கிழக்கத்திய தேசங்களின் பழங்காலத்து  பிண்ணனியில் வைத்து அவற்றுக்கு விளக்கம் தரவேண்டும். பழக்கவழக்கங்களைக் குறித்து விளக்கம் அளிக்க வெளி குறிப்புகளையோ அல்லது வேதாகமத்தின் வேறு வசனங்களைக் கொண்டு விளக்கம் தருவதற்கு முன் அந்த குறிப்பிட்ட பத்தியில் உடனடியாக காணப்படும் சூழ்நிலையைக் கொண்டே முதலில் விளக்கம் அளிக்க வேண்டும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.