தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> அந்நியபாஷை குழப்பம்

அந்நியபாஷை குழப்பம் (பாகம்-1)

அந்நியபாஷையை குறித்து எழுதும்முன் இந்த போலி அந்நியபாஷையை அறிமுகப்படுத்தியதே பெந்தேகோஸ்தேசபைகள் மட்டும்தான். ஆகவே முதலில் பெந்தேகோஸ்தே சபையைப்பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

பெந்தேகோஸ்தே என்றால் என்ன?

யூதர்களின் ஓய்வுநாள் என்பது சனிக்கிழமையாகும். பஸ்கா பண்டிகையிலிருந்து ஏழாவது நாள் வரும் சனிக்கிழமை ஓய்வுநாளுக்கு மறுநாள் ஞாயிற்றுகிழமை பஸ்கா பணடிகையின் 50வது நாளாகும் இந்த நாள் வாரத்தின் முதலாம் நாள் ஆகும். இந்த நாளில் தான் பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கம் எருசலேமில் மேல் அறையில் காத்திருந்த சீஷர்கள் மேல் உண்டானது. இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு கால திருச்சபை தோன்றிய நாளாகும். இதை பழைய ஏற்பாட்டில் வாரங்களின் பண்டிகை என்பார்கள் (யாத் 34:22, லேவி 23:17, உப 16:10). அறுப்புக்கால பண்டிகை என்றும் கூறுவார்கள் (யாத் 23:16). முதல் கனி கர்த்தருக்கு செலுத்தும் நாள் என்றும் கூறுவார்கள் (எண் 28:26).

பெந்தேகோஸ்தே சபை:

உலகத்திலேயே முதல் புதிய ஏற்பாட்டு திருச்சபை உருவான நாள் யூதர்களின் பண்டிகையின் முக்கிய நாளாகிய பெந்தேகோஸ்தே என்ற பெயர் கொண்டநாளில்தான் உருவானது. அப்படி உருவான அந்தக்கால முதல் சபைக்குகூட சீஷர்கள் யாரும் பெந்தேகோஸ்தே சபை என்ற பெயர் வைக்கவில்லை. அந்த காலத்தில் சீஷர்கள் சுவிசேஷம் அறிவித்ததால் புதிய ஏற்பாட்டு சபை உருவானது. பல்வேறு இடங்களில் சீஷர்கள் செய்த ஊழியங்கள் மூலம் யூதர்களும், புறஜாதியினரும் இயேசுகிறிஸ்துவை பிதா அனுப்பிய மேசியாவாக ஏற்றுக்கொண்டு அவர்களை கொண்டு ஆங்காங்கு சபைகளை உருவாக்கினார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் சுவிசேஷம் அறிவித்ததால் முதல் புதிய ஏற்பாட்டு சபை உருவானது. மேலும் சீஷர்கள் எருசலேம் சுற்றியுள்ள ஊர்களில் திரிந்து சுவிசேஷம் அறிவித்ததால் யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியினரும் இயேசுவே மேசியா என்று அறிக்கையிட்டு இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டனர். அதன் மூலம் பல சபைகளை சீஷர்கள் உருவாக்கினார்கள். அந்தியோகியா என்ற துறைமுக பட்டினத்தில் தான் சீஷர்கள் உலகத்திலேயே கிறிஸ்தவர்கள் என்று முதன்முதல் அழைக்கப்பட்டார்கள். அப் 11:26.

சீஷர்கள் பலர் மேலும் சுவிசேஷம் அறிவித்து இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்களை ஒன்றுகூட்டி அவர்களை வைத்து பல சபைகளை உருவாக்கினார்கள். அப்படி ஆரம்பகட்ட சபைகளுக்கு எந்த அப்போஸ்தலர்களின் பெயரையும் வைக்கவில்லை.

இப்பொழுது நம் சபைகளுக்கு St.Stephens Church, St.Peters Church, St.Andrew Chruch, St.Michel Church, St.Paul’s Church என்றும், கத்தோலிக்கரிலிருந்து புரட்சி செய்து பிரிந்து புரோட்டாஸ்டன்ட் சபை உருவாக்கிய மார்டின் லூத்தர் அவர்களின் தன் பெயரில் லுத்தரன் சபை உருவானது. இப்படிப்பட்ட பல பெயர்களை சபைக்கு வைத்து நான் இந்த பெயரில் உள்ள சபையை சேர்ந்தவன் என்று கூறி பெருமைக்கொள்கிறோம். அதைப்போலவே நமக்கு சுவிசேஷம் அறிவித்த மிஷனரிமார்களின் பெயர்களிலும் பலர் சபைகளுக்கு பெயர் வைக்கிறார்கள். இப்படி பல மிஷனரிகளின் ஞாபகர்த்தமாக சபைகளுக்கு பெயர் சூட்டுகிறோம். மேலும் பல இடங்களில் எந்த நாட்டிலிருந்து மிஷனரிகள் புறப்பட்டு வந்து நமக்கு சுவிசேஷம் அறிவித்தார்களோ அந்த நாட்டின் பெயரையே சபைக்கும் வைத்தார்கள். லண்டனிலிருந்து வந்த மிஷனரிகளால் ஆரம்பிக்கபட்ட சபை லண்டன் மிஷன் சபை என்றும், டென்மார்க்கிலிருந்து வந்து மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட சபை டேனிஷ் மிஷன் சபை என்றும் அமெரிக்கன் மிஷன் சபை, பில்தெல்பியா சபை, கொரியன் சபை என்றெல்லாம் பெயர் வைத்தார்கள். வேறு சிலர் கர்த்தரின் பெயரில் சபை தொடங்கினார்கள். இம்மானுவேல் சர்ச், கிறைஸ்ட் சர்ச், சர்ச் ஆப் காட் இப்படி இன்னும் பல பெயர்களில் உலகெங்கும் சபைகள் இயங்குகின்றன.

பவுல் கூறுவதை கவனியுங்கள்: 1 கொரி 3:4-7. ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவன் என்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவை சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாமிசத்துக்குறியவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? (இவர்கள் யாவரும்) நீங்கள் (இயேசுவை) விசுவாசிக்கிறதற்கு காரணமாயிருந்த ஊழியக்காரர்கள்தானே? பவுலாகிய நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினான் - தேவனோ விளைய செய்கிறவர். அப்படியிருக்க நடுகிற (பவுலினாலும்)வனாலும் ஒன்றுமில்லை. நீர் பாய்ச்சுகிறவனாலும் (அப்பொல்லோவினாலும்) ஒன்றுமில்லை. விளைய செய்கிற தேவனாலே எல்லாமாகும். இதன் அர்த்தம் சுவிசேஷம் அறிவித்தவர்களான பவுல், அப்பொல்லோ ஆகிய இவர்களால்தான் நாங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டோம் என்று இவர்கள் பெயர்களை கூறி பெருமைப்பட்டுக்கொள்வதில் ஒரு பிரயோனமும் இல்லை என்று பவுல் கூறுகிறார். அந்த காலத்திலும் சீஷர்களின் பெயரில் சபை பிரிவு உண்டாக இருந்தது. அந்த நோக்கத்தை பவுல் அறிந்து அதை தன் நிருபம்மூலம் சபைகளுக்கு எழுதி அறிவித்து அவர்கள் தவறான எண்ணத்தை உடைத்தெரிந்தார். ஆகவேதான் ஆரம்ப திருச்சபைகள் சீஷர்களின் பெயரில் சபை அழைக்கப்படாமல் சபைகள் ஸ்தாபிக்கப்பட்ட இடத்தின் பெயரில் சபை அறியப்பட்டது. உதாரணமாக எபேசு பட்டணத்து சபைக்கு எபேசுசபை என்றும் தெசலோனிபட்டணத்தின் பெயரிலும் மக்கொதொனியா பட்டணத்து பெயரிலும் சபைகள் ஆரம்பிக்கப்பட்டு தெசலோனி சபை, மக்தொனியா சபை,பெரோயா சபை, எபேசு சபை என்று இடத்தின் பெயரில் சபை அறிவிக்கிப்பட்டது.

புதிய ஏற்பாட்டு சபைகளுக்கு அன்றைய நாட்களில் சபையின் பெயர் எப்படியிருக்க வேண்டும்? எப்படி சபை அழைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்காலத்தில் அவரவர்கள் தங்கள் இஷ்டப்படி சபைகளுக்கு பெயர் வைத்துக் கொண்டார்கள். பிரதரன்சபை, கிறிஸ்துவின் சபை,பேப்டிஸ்ட் சபை, ஸ்டிரிக்ட் பேப்டிஸ்ட் சபை, என்றும் இதில் முதலாவது பேப்டிஸ்ட்சபை நாங்கள் தான் என்று அறிவிக்கும் வகையில் (முதல்) பர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச் என்ற பெயரில் சபைகள் பெருகின. இதோடு நின்றுவிடாமல் பலவித தமாஷான பெயர்களிலும் சபைகளின் பெயர் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

போலியான பெந்தேகோஸ்தே சபைகள்:

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1901ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த முழு இரவு ஜெபக்குழுவில் ஒரு பெண் ஜெபத்தில் உளறினாள். அதை அப்போஸ்தலர்கள் காலத்து அந்நிய பாஷை என்று நம்பி ஏமார்ந்தது ஒரு கூட்டம். இரட்சிக்கப்பட்டு மனந்திரும்பின பல சபைகள் அந்த காலத்தில் ஏராளமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் தங்கள் சபையை மற்ற சபைகளிலிருந்து வித்தியாசப்படுத்தவும் நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று தங்கள் சபையை வேறுப்படுத்தி காண்பிக்கவும் ஒரு முக்கிய அடையாளமாக போலியான அந்நியபாஷையை இந்த சபைகள் அறிமுகப்படுத்தியது. புதிய ஏற்பாட்டு திருச்சபை உருவான பெந்தேகோஸ்தே தினத்தன்று முதல் பரிசுத்தாவி இறக்கத்தின்போது மேலறையில் நின்ற சீஷர்கள் 120பேர்களின் வாய் வழியாக ஆவியானவர் பேசின பற்பல பாஷைகள் அந்த சரித்திர சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி. அந்த பெந்தேகோஸ்தே நாளில் தான் நடந்தது. தங்களின் சபை அந்த ஆரம்பகால சபையலிருந்து தோன்றியது என்று பொய்யாய் இவர்களே கற்பனை செய்து தங்கள் சபைக்கு பெந்தேகோஸ்தே சபை என்று பெயர் வைத்து மற்ற பெயர்களிலுள்ள மற்ற சபைகளிலிருந்து தங்களை வேறுபடுத்தி உலகுக்கு காண்பித்தார்கள்.

இதிலிருந்து பிரிந்து பல பெயர்களில் குட்டிகுட்டி பெந்தேகோஸ்தே சபைகள் தோன்றி பல புது பெயர்களை தங்ளோடு சேர்த்துகொண்டு சிலோன் பெந்தேகோஸ்தே சபை (CPM), இந்தியன் பெந்தேகோஸ்தே சபை, பூரண சுவிசேஷ பெந்தேகோஸ்தே சபை என்றும், அசம்பளிஸ் ஆப் காட் பெந்தேகோஸ்தே சபை என்றும் விதவிதமான பெயர்களில் தங்களை அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் எந்த பெயரில் தங்களை பெந்தேகோஸ்தே சபை என்று அழைத்துக்கொண்டாலும் ஒரே ஒரு விஷயத்தில், ஒரே உபதேசம் கொண்டவர் களாக இருப்பார்கள். அதுதான் பொய்யாய் பேசப்படுகிற அந்நிய பாஷை என்ற பொய் உபதேசம் ஆகும்.

பொய்யில் பிறந்த பெந்தேகோஸ்தே சபை:

உலகில் எந்த சபையும் பொய்யை அஸ்திபார உபதேசமாக்கி உருவாகவில்லை. ஆனால் பெந்தேகோஸ்தே சபைகள் அனைத்திலும் சபையின் அஸ்திபாரமே பொய்யான அந்நிய பாஷைதான். பெந்தேகோஸ்தே சபை ஆரம்பமே பொய்யில் தான் தோன்றியது. சபையின் பாஸ்டர் முதல் சபை ஜனங்கள் வரை அனைவரும் அந்நிய பாஷையில்தான் பகிரங்கமாக துணிந்து பொய் பேசுகிறார்கள்.

சிலர் பரம்பரையாக பெந்தேகோஸ்தே சபையில் வளர்ந்ததால் தாங்கள் பேசுவது பொய் என்று அறியாமல் அந்நியபாஷை பேசுகிறார்கள். ஏன் அப்படி உளருகிறோம், எப்படி நம்மால் இப்படி உளரமுடிகிறது? இதனால் தனக்கு என்ன பிரயோஜனம் ஆண்டவர் இதில் மகிமைப்படுவாரா? ஏன் அந்நியபாஷை பேசினோம் என்றே தெரியாமல் இவைகளின் அர்த்தம் என்ன? வேதத்தில் இதைப்பற்றி என்ன சொல்கிறது என்பதை இவர்கள் ஆராய துணிவதில்லை. இவர்கள் வளர்ந்து பெரிய உயர்ந்த படிப்பு படித்தாலும் படிப்பின் ஞானத்தினால் நாம் பேசும் அந்நியபாஷை தேவைதானா? அர்த்தம் இல்லாமல் ஏன் இப்படி பேசுகிறோம் என்று யோசிக்க முயலுவதில்லை. சிலர் அதைப்பற்றி யோசிக்கவும்,கேள்வி கேட்கவும் பயப்படுகிறார்கள். சபை நடத்தும் பாஸ்டருக்கு தெரியும். தான் பேசும் அந்நியபாஷை பொய் என்று, அதே பொய் உபதேசத்திலேயே சபை மக்களையும் பைத்தியக்காரர்களாக்கி அவர்கள் உளருவதை பார்த்து ரசிக்கிறார்கள். இதனால் தங்களுக்கு நேரபோகும் ஆபத்தை பாஸ்டர்கள் உணருவதில்லை. அந்நியபாஷை என்ற கவர்ச்சியினால் மக்கள் கவரப்படுகிறார்கள். மக்கள் சபைக்கு அதிகம் கூடுகிறார்கள்.

ஆகவே அவர்களை மேலும் மேலும் பைத்தியக்காரர்களாக மேலும் மேலும் முயற்சிக்கிறார்களே தவிர, வேதத்தை வாசித்து இதைக்குறித்து தியானித்து தெளிவுபெற முயலுவதில்லை. முயன்றால் உண்மை விளங்கும். உண்மையை புரிந்துக்கொண்டால் அந்நியபாஷை பேசுவதை நிறுத்தவேண்டிவரும். அப்படி அந்நியபாஷையை பாஸ்டர் நிறுத்திவிட்டால் பாஸ்டர் வேலை போய்விடும். இயேசுகிறிஸ்து கட்டளையிடாதது, சீஷர்கள் யாரும் உபதேசிக்காதது, வேதம் கூறாதது ஆகிய விவரங்கள் அறிந்தும் ஜனங்களை பரவசப்படுத்த ஜனங்களை ஏமாற்ற இவர்கள் பயன்படுத்தும் அந்நியபாஷை என்ற உபதேசம் நூற்றுக்கு நூறு பொய்யானது. ஆகவேதான் பொய்யில் உருவான சபை பெந்தேகோஸ்தே சபை என்கிறேன்.

அந்நியபாஷை பேசவில்லை:

இவர்களும் நாமும் கையில் வைத்திருக்கும் இந்த வேத புத்தகத்தை மொழிபெயர்த்த சீகன்பால்க், வில்லியம்கேரி, Rev.குண்டர் ஆகிய யாவரும் அந்நியபாஷை பேசவில்லையே. இரத்தசாட்சியாய் மரித்தவர்கள் ஒருவரும் அந்நியபாஷை பேசவில்லையே? வேதத்தை மூல பாஷையிலிருந்து ஆராய்ந்து, அதற்கான அர்த்தம் கண்டுபிடித்து ஒவ்வொரு வார்த்தையாய் மொழிபெயர்த்த அந்த அற்புத தேவமனிதர்களாகிய மிஷனரிகளுக்கு அந்நியபாஷை என்பது உண்மையானால் அவர்கள் பேசி அவர்கள் அதை மக்களுக்கும் அறிவித்திருக்கமாட்டார்களா? இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து இந்த உபதேசம் உதித்தது. இதுதான் பிசாசின் உபதேசம் என்பது.

அந்நியபாஷை பேசவில்லையானால் அங்கத்தினன் அல்ல:

இப்படி ஒரு சட்டம் இயற்றி அந்நியபாஷை பேசாதவன் சபையின் அங்கத்தினானாக கருதப்படமாட்டான். அசம்பளிஸ் ஆப் காட் வேதாகம கல்லூரியின் விண்ணப்ப படிவத்தில் அந்நியபாஷை அடையாளம் இருந்தால் மட்டும் அவர்களுடைய வேதாகம பள்ளியில் சேரலாம். AOG சபை தொடங்கிய நாளிலிருந்தே அந்த சபையின் அங்கத்தினராக இருந்த இரண்டு தலைமுறை குடும்பம் ஒன்று எனக்கு தெரியும். அந்த குடும்பத்தில் பிறந்த பையன் ஒருவனுக்கு கீ போர்ட் வாசிக்க விசேஷ பயிற்சியாளரிடம் அனுப்பி கீ போர்ட் வாசிப்பதில் சிறந்தவானகிவிட்டார். உடனே AOG சபை பாஸ்டரிடம் சபையில் பாடல்வேளையில் மகனை கீ போர்ட் வாசிக்க அவனுடைய தகப்பனார் கேட்டுக்கொண்டார்.

இரண்டு வாரங்கள் அந்த வாலிபன் ஆராதனையில் வாசித்தான். யாவருக்கும் அவன் வாசிப்பது பிடித்துவிட்டது. ஒரு நாள் அவனை வாலிபர் கூட்டத்தில் சாட்சி கூற பாஸ்டர் கேட்டுக்கொண்டார். தன் இரட்சிப்பை மனந்திரும்புதலை சாட்சியாக கூறினான். சனிக்கிழமை இரவு அந்த பையன் வீட்டுக்கு பாஸ்டர் வந்து அவன் தகப்பனரிடம் பையனின் சாட்சியில் மனந்திரும்புதலைப்பற்றி சொன்னதை கேட்டேன்.

ஆனால் ஆவியின் அபிஷேகம், அந்நியபாஷை ஆகியவைகளைப்பற்றி அவன் எதையும் கூறவில்லை என்றார். அதற்கு தகப்பனர் ஆம் அவன் இன்னும் அபிஷேகம் பெறவில்லை என்றார். அதாவது அவன் அந்நியபாஷை பேசும் அனுபவம் இல்லை என்றார். உடனே பாஸ்டர் அப்படியானால் நாளை முதல் அவன் சபையில் கீ போர்ட் வாசிக்க வேண்டாம் என்று சொல்வதற்காகவே வந்தேன் என்றார். பையன் நொடிந்துப்போனான். மனதில் வெறுப்பு தோன்றியது. அப்பா, பையனிடம் கூறினார். நீ இன்னும் விளையாட்டுபோக்காகவே வாழ்க்கையை நடத்துகிறாய். சீக்கிரம் நீ அந்நியபாஷையில் பேசவேண்டும் என்று எத்தனைமுறை உன்னிடம்கூறினேன். நீ செவி சாய்க்கவில்லை என்று ஏசினார். இப்போது மகன் உள்ளத்தில் வெறுப்பு உண்டானது. சில வாரங்கள் கடந்தபோது வீட்டில் குடும்ப ஜெபத்தில் எல்லாரும் ஸ்தோத்திரம்கூறி எதிர்பாராத வண்ணம் அந்நியபாஷையில் பேசி முடித்தான். பெற்றோர்களுக்கு மிகுந்த சந்தோஷம். மறு ஞாயிறு ஆராதனை முடிந்தபின் பாஸ்டரிடம் தன் மகனுக்கு அபிஷேகம் கிடைத்துவிட்டது என்று கூறினார். பாஸ்டரும் சந்தோஷப்பட்டார். ஆராதனை முடிந்தபின் எல்லாருக்கும் பாஸ்டர் வழமையாக ஜெபிக்கும்போது இவருடைய மகனுக்காகவும் தலையில் கை வைத்து ஜெபிக்க மகன் சரளமாக அந்நியபாஷை பேசினான். துள்ளவும் செய்தான். மறுவாரமே அவனை கீ போர்ட் வாசிக்க சொல்லிவிட்டார்.

ஏறக்குறைய 7 வருடங்கள் தொடர்ந்து சபையில் கீ போர்ட் வாசித்தான். வெளிநாட்டில் அவனுக்கு வேலை கிடைத்தது. அநேக வருடங்களுக்கு முன் அவன் வேலை செய்த நாட்டிலே என் பிரசங்கம் நடைபெற்றது. அதில் பரிசுத்த ஆவியானவரைப்பற்றியும், போலியான அந்நியபாஷை பற்றியும் பேசினேன். அன்று அவன் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தான். பகல் வேளை ஆலோசனை நேரத்தில் தனிமையில் என்னை சந்தித்தான். நேற்று நீங்கள் பேசிய செய்தியில் நான் மனந்திரும்பினேன். ஆனால் உள்ளத்தில் ஒரு குற்றஉணர்ச்சி உண்டு. நான் AOG சபையை சேர்ந்தவன் என்று தன் சபையில் கீ போர்ட் வாசிக்கவிடாமல் பாஸ்டர் தன்னை ஒதுக்கின விஷயத்தையும்,அதன்பின் அந்நியபாஷை பேசினபின் கீ போர்ட் வாசிக்க அனுமதிக்கப்பட்ட விஷயத்தையும் கூறினான். அப்படி அதைக்குறித்து என்னிடம் விளக்கும்போது அன்று அந்நியபாஷை பேசினது போலியானது பொய்யானது. கீ போர்ட் வாசிக்கும் ஆர்வத்தில் அந்நியபாஷையில் பொய் பேசி நடித்தேன். அப்பா நம்பிவிட்டார். என் சபை பாஸ்டரும் நம்பிவிட்டார். என் ஆசையும் நிறைவேறினது.

ஆனால் நேற்று நீங்கள் பேசின போலி வாழ்க்கை என்ற தலைப்பின் செய்தி என்னை தொட்டது. பரிசுத்த ஆவியானவரை ஏமாற்றும் விதத்தில் கீ போர்ட் வாசிக்கும் ஆர்வத்தில் பாஸ்டரை திருப்திப்படுத்த பேசின அந்நியபாஷையால் இம்மையிலும், மறுமையிலும் மன்னிப்பு கிடைக்காமல் போகும். இப்போதும் நான் என் சபைக்கு போனால் போலியான அந்நியபாஷை பாஷைதான் பேசுகிறேன் என்று வருந்தினான். நான் அவனுக்கு வசனத்தை சுட்டிக்காட்டி உன் பாஸ்டர் பேசும் பாஷையே பொய்யானது. உன் அப்பா பேசுவதும் பொய்யானது என்று உனக்கு தெரியுமா? என்றே தெரியும். எனக்கு மட்டுமல்ல சபைக்கு வரும் என் கல்லூரி நண்பர்களும் பாஸ்டர் பேசும் பாஷையை Tape recorder பதிவுசெய்து வீட்டில் போட்டு சிரிப்போம். அன்றே எங்கள் பாஸ்டர் தன் வாழ்க்கையிலேயே இத்தனை பெரிய பொய் பாஷை பேசி சபை ஜனங்களை பொய்யான பாஷையை பேச வைக்கிறாரே என்று அன்றே நாங்கள் பேசிக்கொள்வோம். அந்நியபாஷை பேசினால்தான் சபை ஆராதனையில் கீ போர்ட் வாசிக்கமுடியும் என்று கூறியபோது என் வாய்க்கு வந்ததை பாஸ்டர் வழக்கமாக உளருவதை மனதில் பதிய வைத்திருந்தேன். அவர் பேசுவதைப்போல நடித்த என் நடிப்பின் உளரலை அவர் நம்பிவிட்டார். அன்றே என் சபையின்மீது இருந்த நம்பிக்கை போய் என் சபையின் பல செயல்பாடுகளில் உள்ள போலியை அறிந்து மனதில் வேதனைக்கொண்டேன் என்றான். அந்த வாலிபன் திருமணமாகி பிள்ளைகளை பெற்றெடுத்து இன்னும் AOG சபைக்கு போகிறான். ஆனால் அவன் சொன்னான், இப்போதெல்லாம் சபை விசுவாசிகள் பார்க்கதக்கதாக அந்நியபாஷைகளை பேசி நடித்துக்கொண்டிருந்தேன். உங்கள் ஆலோசனைக்கு பிறகு நான் AOG சபையை விடவில்லை. ஆனால் இப்போதெல்லாம் நான் யாருக்காகவும் அந்நியபாஷையை பேசி நடிப்பதில்லை. என் பிள்ளைகளுக்கு அந்நியபாஷைகளைக்குறித்து உங்கள் உபதேசத்தைக்குறித்து கூறி வசனத்தில் அதை சுட்டிக்காட்டி அந்நியபாஷை என்பது போலியானது என்று எச்சரித்து வைத்துதான் AOG ஆரானைக்கு குடும்பமாக போகிறோம்.

இதை வாசிக்கிற நீங்கள் பெந்தேகோஸ்தே சபை விசுவாசியாக இருந்தால் Tape recorder மூலம் அன்று அந்த வாலிபன் தன் சபையில் பேசிய அந்நியபாஷையை பதிவு செய்தான். இன்று உங்கள் கையில் செல்லிடப்பேசி உண்டு. முதலில் உங்கள் பாஸ்டர் பேசும் அந்நியபாஷையை தொடர்ந்து பல வாரங்கள் பதிவு செய்யுங்கள். அதன் பின் அதை போட்டு கேட்டுப்பாருங்கள். சொன்னதையே மீண்டும் சொல்லி உளருவதை கேட்கலாம். க்ரபலா...... சுக்கரபலா.... சங்கரபலா இதையே பல வருடமாக அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அறியலாம்.

சகோ.மோகன் சி.லாசரஸ் அந்நியபாஷையில் பிசாசை விரட்டுவதை பதிவு செய்திருக்கிறார்கள். அந்நியபாஷையில் பிசாசை விரட்டி ஜெபிப்போம் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவிட்டு ஷாரா-கிப்ரா என்று என்னென்னவோ உளறிவிட்டு நடுநடுவே புழ போ என்று சத்தமாக பிசாசை விரட்டுவதை அதில் கேட்கலாம். அவர் விரட்டின பிசாசுக்கும் பல பாஷைகள் தெரியும்போலும். இவர் உளருவதையும் அந்த பிசாசு கேட்கிறதாம்; அப்படியே மோகன் சி.லாசரஸ் பேசும் அந்நியாபஷையை பிசாசு விளங்கிக்கொள்கிறதாம். அந்த பிசாசு ஆங்கிலமும் தெரிந்த பிசாசுபோல இருக்கிறது. அதனால் தான் மோகன்.சி.லாசரஸ் புழ - போ என்று ஆங்கில வார்த்தையை அவர் நடுநடுவே உபயோக்கிறார். இதை வாசிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?.

இவர்கள் கள்ள உபதேசத்தின்படி அந்நியபாஷை என்ற பெயரில் இவர்கள் உளருவது ஆண்டவருக்கும் விளங்குகிறது, பிசாசுக்கும் விளங்குகிறது எப்படி? அவர்கள் இப்படி கன்னாபின்னா என்று இஷ்டத்துக்கு உளருவதை கேட்க சகிக்காமல்தான் அந்த பிசாசு ஓடியிருக்க வும் வாய்ப்புண்டு என்று நினைக்க தோன்றுகிறதல்லவா . எத்தனை பெரிய ஏமாற்றுதனம் இது . இதை நம்புவதற்கு படித்த முட்டாள்கள் பெருவிட்டனரே . அதை யோசிக்கும்போது தான் மனதுக்குள் வேதனை உண்டாகிறது.

அந்நியபாஷையின் கிளை கிரியைகள்:

அந்நியபாஷை என்ற பொய்யில் பிறந்தது தான் ஜெபத்தில் பெயர் அழைப்பது. யார் அந்த மனோகரன்? TV-யில் என் முன் சோர்வோடு உட்கார்ந்திருக்கிறதை கர்த்தர் எனக்கு காட்டுகிறரே என்று இவர்கள் கூறியது பொய் என்று உறுதியானது. காரணம் அதே காட்சியை இரண்டு முறை டிவியில் காண்பித்ததால் இவர்கள் 6 மாதத்துக்குமுன் டிவிக்காக பதிவு செய்ததை மறுபடியும் இரண்டு அல்லது மூன்று முறை ஒளிப்பரப்பியதால் இவர்கள் ஜெபத்தில் பெயர் அழைப்பது பொய் என்பது உறுதியானது.

AIDS சுகமாவதை நான் காண்கிறேன் என்றார். மேலும் இவர் என் அருகேயுள்ள இயேசு மேடையிலிருந்து இறங்கி வருகிறார். கோபால் என்ற பெயருள்ள உன் தலையில் இயேசு கை வைப்பதை நான் காண்கிறேன் என்றார். அதோடு AIDS வியாதி கிருமிகள்தலையிலிருந்து கால்வழியே பூமியில் இறங்கிப்போவதை காண்கிறேன். நீ சுகமாகிவிட்டாய் என்று சகோ.மோகன்.சி.லாசரஸ் சொன்ன அந்த சாட்சி பொய் என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. சர்க்கரை வியாதி பூரண சுகம் என்று கர்த்தர் சொல்கிறார் என்று கூறிய பல வியாதியஸ்தர்களைப்பற்றி கூறிய தீர்க்கதரிசனமும் அவர்கள் மேடையில் கூறிய சாட்சியும் பொய் என்பது நூற்றுக்குநூறு உறுதியானது.

கீழே விழுவது - அந்நியபாஷை பேசி சிரிப்பது:

கை நீட்டினால் கீழே விழுவது, விரல் நீட்டினால் கீழே விழுவது, ஊதினால் விழுவது போன்ற பொய்யான காட்சிகள் யாவற்றுக்கும் ஆரம்பம் பொய்யான அந்நியபாஷை தான். ஆவியில் நிறைந்து அந்நியபாஷை பேசி சிரிப்பது போன்ற பைத்தியங்கள் பெரிய ஊழியர்களாக TVயில் காணப்படுகிறார்களே .

இப்படி பல பொய் சாட்சிகளின் ஆரம்பம் பொய்யான அந்நியபாஷை பேசும் பெந்தேகோஸ்தே சபையினரால் உருவானது ஆகும். இப்போது பெந்தேகோஸ்தே சபைகள் வீதிக்கு 10 என்று வகையில் ஈசலைப்போல பெருகிவருகிறது. ஒருவன் சபையில் பாட்டுபாடி ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்த தெரிந்தால் போதும் ஜெபத்தில் மக்களை அழ வைத்தால் போதும். உடனே அவன் அந்த சபையை விட்டு பிரிந்து ஒரு புதிய பெந்தேகோஸ்தே சபை உருவாக்கி அவன் ஒரு பாஸ்டர் ஆகிவிடுகிறான். இவர்களுக்கு வேத ஞானம் வேண்டாம், ஜெபம் நடத்தவும் பாடல் ஆராதனை நடத்தவும் ஒருவனுக்கு தெரிந்தால் போதும். அவர்கள் யாவரும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களாகிவிடுகிறார்கள். அவர்கள் சபை மக்கள் வசனத்தில் வழிநடத்தப்படாமல் பாட்டில் மட்டும் வழி நடத்தப்படுகிறார்கள். பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகளில் உள்ள பாஸ்டர்மார்கள் யாவருக்கும் வேத அறிவு இல்லாதவர்கள். காரணம் இவர்களில் பெரும்பலானவர்கள் வேதகாம கல்லூரியில் வேதம் படிக்காதவர்கள். இவர்கள் சபையில் வெறும் சத்தமும், கூச்சலும், நடனமும், கைதட்டாலும் இருக்குமே தவிர, வசனத்தில் வளர்த்தபடததால் சபை மக்கள் பரிதாபமாக காணப்படுகிறார்கள். கர்த்தரின் வருகைக்கு இப்படிப்பட்ட சபையில் உள்ள இவர்கள் எப்படி ஆயத்தப்படபோகிறார்கள். ஆகவே இன்றைக்கு பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபைகளின் பாஸ்டர்கள் தேவனின் நாமம் தூஷிக்கப்படத்தக்கதாக நடந்து தங்கள் சபைகளையும் சபை மக்களையும் அப்படியே நடத்துகிறார்கள்.

அந்நியபாஷையின் சரித்திரம் ஆரம்பம்:

ஆதியிலேயே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார். அதன்பின் ஆதாமையும்,ஏவாளையும் ஆணும், பெண்ணுமாக சிருஷ்டித்தார் (ஆதி 2:7). இவர்கள் மூலமாக மனுஷ வர்க்கம் பெருகினது. அதன்பின் ஆதாமின் சந்ததியிலிருந்து வந்த நோவாவின் காலத்தில் மக்கள் மிகவும் பாவம் செய்து உலகைப் படைத்த ஆண்டவருக்கு மனவேதனையை உண்டாக்கினார்கள். ஆதி 6:6. மக்களின் பாவம் சகிக்கமுடியாத அளவு பெருகினபடியால் கர்த்தர் தான் படைத்த பூமியை மக்களோடு சேர்த்து அழிக்கும் அளவு கர்த்தர் கோபம் கொண்டார். ஆனால் கர்த்தருக்கு பிரியமாக நடந்துக்கொண்டு தெய்வ பயத்தோடு வாழ்ந்த நோவா என்பவரின் குடும்பத்தை மட்டும் உயிரோடு வைக்க கர்த்தர் சித்தங்கொண்டு ஒரு பெரிய கப்பலை கட்ட சொன்னார். அந்த குடும்பத்தோடு உலகில் உள்ள அனைத்து வகையான பூமியில் வாழ்ந்த மிருகங்களையும், ஊர்வன, பறப்பன போன்ற சகல ஜீவன்களையும் காப்பாற்ற தேவன் திட்டமிட்டு ஒவ்வொரு மிருகத்திலும்,பறவைகளிலும் மற்ற எல்லா ஜீவராசிகளிலும் ஆணும்-பெண்ணுமான ஜோடிகளை மட்டும் காப்பாற்ற சித்தம்கொண்டார். ஒரு பேழையை (கப்பலை) உண்டாக்க சொன்னார். நோவா பேழையை உண்டுபண்ணி முடித்தவுடன் அதில் மேலே குறிப்பிட்ட அனைத்து ஜீவராசிகளோடு நோவா குடும்பத்தையும் கப்பலுக்குள் ஏறிக்கொள்ளும்படிகூறிவிட்டு கப்பலின் கதவை சாத்தினர். அதன்பின் பெரும்மழையை 40 நாட்கள் இரவும்-பகலும் பெய்யவைத்து, பூமி முழுவதையும் பெரு வெள்ளத்தால் அழித்தார். இதுதான் உலகத்தின் முதல் அழிவு.

உலகத்தின் முதல் அழிவு தண்ணீரினால் அழிக்கப்பட்டது. இரண்டாம் அழிவு அக்கினியினால் அழிக்க இருப்பதாக வேத வசனம் தீர்க்கதரிசனமும், இயேசு கிறிஸ்துவும் கூறினார். இரண்டாம் அழிவுக்குப்பின் உலகம் இருக்காது. அதுதான் கடைசி அழிவு ஆகும். இப்போது பேழை என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கப்பல் மூலம் நோவாவின் குடும்பம் மட்டும் காப்பாற்றப்பட்டு அவர்கள்மூலம் மக்கள் பலுகிபெருகி உலகை நிறைத்தார்கள். ஆனாலும் மக்கள் மறுபடியும் கர்த்தருக்கு கீழ்படியாமல் கர்த்தரின் மனதை மேலும் வேதனைப்பட வைத்தார்கள். அப்படி பலுகிபெருகின மக்கள் அன்று பேசின பாஷை ஒரே பாஷையாகத்தான் இருந்தது. ஆதி 11:1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது என்று வேதம் கூறுகிறது.

அந்த காலங்களில்தான் மக்கள் தங்களுக்கு பேர் உண்டாக, பெருமை உண்டாக வானத்தை எட்டும் அளவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தை கட்டுவோம் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து வானளாவிய கோபுரம் பணியும் வேலை தொடங்கினார்கள். வானத்தை தொடும் அளவு கட்டிட வேலை உயர்ந்துவிட்டது. தாங்கள் செய்வதை யாரும் தடை செய்யமுடியாது என்ற இருமாப்பில் அம்மக்கள் இருந்தபோது ஆண்டவர் இவர்களின் முட்டாள்தனத்தையும், தங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற இருமாப்பையும் கண்டு இவர்கள் அனைவரும் ஒரே பாஷை பேசும் மக்களாக இருப்பதால்தானே இந்த இருமாப்பு. ஆகவே அவர்கள் பாஷையை சிதறடிப்போம் என்று ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துக்கொள்ளாதபடி அவர்களின் பாஷையை தாறுமாறு ஆக்குவோம் என்று ஒரேநிமிடத்தில் அவர்கள் வாயில் பேசிய பாஷையை மாறிப்போக செய்துவிட்டார். உடனே மக்கள் பயந்துபோய் யார்?யார்? என்னென்ன பாஷையை பேசினார்களோ அவர்கள் ஒன்றாக இணைந்து உலகெங்கும் சிதறிடிக்கப்பட்டு ஒடிபோய் உலகின் பல பாகங்களில் குடியேறினார்கள்.