தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்
இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்

முகப்பு> களஞ்சியம்> புத்தகங்கள்> அத்தேனே பட்டணத்தில் பவுல்

அறிமுக வரிகள்...

அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். (அப் 17: 16,17)

ஒருவேளை இந்த செய்தியைப் படித்துக்கொண்டிருப்பவர் ஒரு நகரத்தில் வசிக்கலாம், ஆகவே பசுமையான புல்வெளிகளைவிட, செங்களையும் கட்டுமான பொருட்களையும் அதிகம் பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் ஆழமாக நேசிக்கும் உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ ஒரு பட்டணத்தில் வசிக்கலாம். இரண்டில் உங்கள் நிலை எதுவாக இருந்தாலும், இக்கட்டுரையின் முகப்பில் உள்ள வேதவாக்கியங்கள் உங்கள் கவனத்தை நாடுகின்றன. இந்த வேதப்பகுதிகள் கற்றுக்கொடுக்கும் பாடங்களை நான் உங்களுக்கு காட்டும்படியாக சில நிமிடங்கள் உங்கள் கவனத்தை இங்கே திருப்புங்கள்.

இது மிகவும் பிரபலமான அத்தேனே பட்டணம் – அந்நாட்களில் அத்தேனே பட்டணமானது அதன் நிபுணத்துவத்துக்கும், தத்துவஞானிகளுக்கும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஓவியர்களுக்கும், கட்டிடக் கலைஞர்களுக்கும் பிரசித்தி பெற்ற நகரமாகும். உலகத்தாருக்கு பண்டைய கிரேக்க நாடு கண்களாக இருந்ததுபோல, அத்தேனே பட்டணம் கிரேக்க நாட்டின் கண்களாயிருந்தன.

இந்த மனிதன் புறஜாதியாருக்கு அப்போஸ்தலனாயிருந்தான், உலகம் இதுவரைக் கண்டதிலேயே கடின உழைப்பிலும் ஊழியத்திலும் வெற்றிக் கண்டவன் பவுல். தன்னுடைய ஆவிக்குறிய போதகரைத் தவிர, ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரில், தன்னுடைய எழுதுகோலாலும் பேச்சாலும் மனுகுலத்தின் மீது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பவுல்.

அத்தேனேயும் பவுலும், கிறிஸ்துவின் உன்னத ஊழியக்காரனும் புறஜாதியாரின் உன்னத கோட்டையும் நம்முன் நேருக்கு நேர் நிற்கிறார்கள். முடிவு நமக்கு சொல்லப்படிருக்கிறது – நிகழ்வுகள் கவனமாக விளக்கப்பட்டுள்ளது. நான் சிந்தித்துக்கொண்டிருக்கும் காரியம், நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நாட்களுக்கும், தற்கால இந்தியாவின் மாநகரங்களில் வசிப்பவர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.

இந்த பகுதியில் நாம் கீழ்க்காணும் மூன்று தலைப்புகளின் கீழ் தொடர்ந்து சிந்திக்கப்போகிறோம்.

பொருளடக்கம்

    அறிமுகம்

  1. அத்தேனே பட்டணத்தில் பவுல் பார்த்தது
  2. அத்தேனே பட்டணத்தில் பவுல் உணர்ந்தது
  3. அத்தேனே பட்டணத்தில் பவுல் செய்தது
  4. பவுலிடம் கற்றுக்கொள்ள வேண்டியது
  5. சிந்திக்க சில கேள்விகள்
  6. முடிவுரை