முகப்பு
images/banners/slider/john3-16.jpg

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற சொற்கள் ஊழிய வட்டாரங்களில் பரவலாய் பயன்படுத்தபட்டு வருகிறது. பரிசுத்த ஆவியின் நிரப்புதலுக்காக நடத்தப்படும் காத்திருப்புக் கூட்டங்களை அபிஷேகக் கூட்டங்கள் என்று அழைக்கின்றனர். ஒருவர் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுவிட்டால், அபிஷேகம் பெற்றுவிட்டார் என்கிறார்கள். இதற்குப் பைபிளில் எந்தவித ஆதாரமுமில்லை.

பழைய ஏற்பட்டுகால பல இடங்களில் அபிஷேகம் என்ற சொல்லைக் காண்கிறோம். அரசர்கள், ஆசாரியர்கள் மட்டுமல்ல, தேவலாயத்தின் பணிமூட்டுகளும் எண்ணெயினால் தைலத்தினால் அபிஷேக்கப்பட்டதாகக் காண்கிறோம். எதற்காக? அவர்கள் அவைகள் இறைப்பணிக்கென்று தெரிந்துக்கொள்ளப்பட்டு பிரித்தெடுக்கப்பட்டதை அந்த அபிஷேகம் உறுதிப்படுத்தியது.

புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்களில் ஒரே ஒரு வசனத்தில் மட்டும் அபிஷேகம் என்ற சொல்லைக் காண்கிறோம். "கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார். தரித்திருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அனுக்கிரக வருஷத்தைப் பிரசித்திப்படுத்தவும், என்னை அனுப்பினார் என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு வாசித்து, புத்தகத்தை சுருட்டி பணிவிடைக்காரானித்தில் கொடுத்து உட்கார்ந்தார்" லூக்4:18-20.

இறை இயேசு ஏசாயா61:1-3ல் தம்மைப்பற்றி முன்னுரைத்திருப்பதைத்தான் வாசித்துகாட்டினார். தாம் எப்பணிக்காக அபிஷேகம் பெற்றார். அதாவது பிரித்தெடுக்கப்பட்டார் அல்லது நியமிக்கப்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்து என்ற பெயரின் பொருளே அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்பது ஆகும். அப் 4:28, 10:38 எபிரெயர் 1:9 ஆகிய வசனங்களிலும் ஆண்டவரைக்குறித்தே அபிஷேகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி அபிஷேகம் என்ற சொல் 2 கொரி 1:21லும், 1யோவ 21:20-27லும் மட்டுந்தான் காணப்படுகிறது. இந்த வசனங்களிலும் அபிஷேகம் என்ற சொல் அடியார் திருப்பணிக்கென்று பிரிக்கப்பட்டதையே குறிக்கும். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற வார்த்தை பைபிளுக்கு சற்றும் ஒவ்வாத முற்றும் தவறானதொன்று.

அபிஷேகம் என்ற சொல் பரிசுத்தாவியின் திருமுழுக்குக்கும், நிறைவுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல்லின் சரியான பொருள் எண்ணெய் பூசுதல் அல்லது ஊற்றுதல் என்பது. இதைக்குறித்து பார்ன்ஸ் என்ற திருமறை விரிவுரையாளர் பின்வருமாறு விளக்கியிருக்கிறார். மன்னர்களையும், ஆசாரியர்களையும் எண்ணெய் ஊற்றி, அவர்களை முடிசூட்டியதையும், பதவி நியமனம் செய்ததற்காகவுமே இச்சொல் குறிக்கிறது. தங்கள் பதவிக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்ய பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அருளும், ஈவுகளுக்கும், கிருபைகளுக்கும் எண்ணெய் சின்னமாய் இருந்ததாகத் தெரிகிறது. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் ராஜாக்களும், ஆசாரியர்களும் என்றும் (வெளி 1:6,5:10) ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாக இருக்கிறார்கள் என்றும் (1 பேதுரு 2:9). விவரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள் எனப்படுகின்றனர். அதாவது பரிசுத்தாவியின் கிருபைகளைப் பெற்றவர்கள் என்பதற்கு அபிஷேகம் சின்னமாக இருந்தது.

1யோவான் 2:20ம் வசனத்தில் பரிசுத்தர் என்று அழைக்கப்படுகிறவர் பரிசுத்த ஆவியனாவரே. பரிசுத்தாவியானவர் இறை மக்களுக்கு தம் செல்வாக்குகளை அருளி, அறிவூட்டி, தூய்மைப்படுத்தி, அவர்களுடைய துன்பங்களில் அவர்களைத் தேற்றுகிறவர் 20ம் வசனத்திலும், 27ம் வசனத்திலும் பரிசுத்தராலே, அவராலே என்றுதான் உள்ளது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று கூறப்படவில்லை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.