வெளியீட்டுக்கொள்கை

தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தின் வெளியீட்டுக்கொள்கை

தமிழ் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தேவையான கட்டுரைகளையும், புத்தகங்களையும், செய்திகளையும் வழங்கும் முயற்சியில் முன்னொக்கிச் செல்கிறது தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம்.

உலக அளவிலும், குறிப்பாக தமிழ் கிறிஸ்தவ வட்டத்திலும் இன்று மலிந்து கிடக்கும் கள்ள உபதேசங்களுக்கு மத்தியில், சரியான உபதேசத்தை அடையாளம் காட்டி, ஆழமான கிறிஸ்தவ சத்தியங்களை தமிழில் வழங்குவதும் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தின் உன்னத நோக்கங்களில் ஒன்றாகும்.

தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தின் இந்த தேவனுடைய ராஜ்ஜியத்தின் கட்டுமானப் பணிகளில் உங்களையும் இணைத்துக்கொளுங்கள்.

நீங்கள் கிறிஸ்தவ எழுத்தாளராக இருப்பின் உங்கள் ஆவிக்குறிய தமிழ் கிறிஸ்தவப் புத்தகங்கள், கட்டுரைகள், செய்திகள் மற்றும் படைப்புகளை இலவசமாக தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடலாம்.

படைப்புகள், ஆசிரியரின் முழு ஒப்புதலுடன் info[at]truthintamil[dot]com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆசிரியரின் பெயர் (ஆசிரியர் விரும்பினால்) புத்தகத்தின் அறிமுகப் பக்கத்திலோ அல்லது கட்டுரையில் அடிக்குறிப்பாகவோ வெளியிடப்படும்.

கீழ்க்கண்ட நிபந்தனைகள் எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும்

✔ வேத வசன அடிப்படையில் சமநிலையான உபதேசத்தில் இருத்தல் அவசியம்.

✔ மற்றவர்களின் ஆவிக்குறிய வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 

✔ கண்டிப்பாக தமிழில் இருக்க வேண்டும்.

✔ வாசகர்களை சலிப்படைய செய்யாதவிதத்தில் நல்ல மொழி நடையில், ஆங்கிலம் கலவா தமிழில் இருத்தல் சிறப்பு.

✔ தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிட, உங்கள் படைப்பின் பதிப்புரிமையை நாங்கள் கோருவதில்லை. ஆகவே நீங்கள் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிட்டாலும், படைப்பின் பதிப்புரிமை அதன் ஆசிரியரிடமே இருப்பதால், படைப்புகளை அதன் ஆசிரியர் விரும்பும் எவ்விடத்திலும் மீண்டும் வெளியிட எங்களிடத்திலிருந்து எந்த அனுமதியும் பெறதேவையில்லை.

✔ உங்கள் புத்தகத்தையோ அல்லது படைப்புகளையோ ஏற்கனவே வேறொரு புத்தக வெளியீட்டாளர் மூலம் வெளியிட்டிருப்பீர்கள் என்றால், தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதற்கு முன் அந்த புத்தக பதிப்பாளர்/வெளியீட்டாளரிடமிருந்து அனுமதி பெறுதல் அவசியம்.

கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் உங்கள் படைப்புகள் இருக்கலாம்

✔ அவிசுவாசிகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தும் உபதேசமாயிருக்க வேண்டும்.

✔ வேத ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட படைப்புகள்.

✔ வேதாகம மற்றும் கிறிஸ்தவ வரலாறுகள்.

✔ வேத வினா-விடை.

✔ வாலிபர், சிறுவர், பெரியவர் மற்றும் முதியவர்களை மையப்படுத்தும், ஆவிக்குறிய வாழ்க்கைக்கு உற்சாகப்படுத்தும் படைப்புகள்.

கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் உள்ள படைப்புகள் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதில்லை.

 பரவச பெந்தேகோஸ்தே போதனைகளை மையப்படுத்தும் செய்திகள் மற்றும் படைப்புகள்.

 கள்ள உபதேசங்கள், வேதத்திற்கு எதிராக உள்ள போதனைகள்.

 சொந்த அனுபவங்களை மையப்படுத்தும் போதனைகள்.

 ஜெபத்தில் பெயர் அழைத்தல், தீர்க்கதரிசனம் சொல்லுதல், அந்நிய பாஷை மற்றும் அற்புத சுகமளிக்கும் செய்திகள் மற்றும் படைப்புகளை தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதில்லை. (நாங்கள் தேவன் அளிக்கும் அற்புத சுகத்தை விசுவாசிப்பவர்கள்தான் என்றாலும், இன்றைய நாட்களில் கள்ள உபதேசிகள் நடத்தும் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களையும் செய்திகளையும் நம்புவதில்லை!)

Summary in English: Publish your Tamil Christian books, articles, messages, literature freely online in Tamil Christian Resources.

மேலும் விவரங்களுக்கு எங்களை info[at]truthintamil[dot]com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக்கொள்ளலாம்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.