இணைந்திடுங்கள்

தமிழில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் சுவிஷேசத்தை அறிவிக்கவும், கிறிஸ்தவர்களின் ஆவிக்குறிய வாழ்க்கைக்கு பங்களிக்கவும் முனையும் தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தின் பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ள அழைக்கிறோம்.

மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக நடத்தும் அல்லது மற்றவர்களது ஆவிக்குறிய வாழ்க்கைக்கு உதவும் தமிழ் கிறிஸ்தவ செய்திகள், கட்டுரைகள், புத்தகங்களை உங்கள் சொந்த படைப்பையோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எழுதிய படைப்பையோ (எழுதியவரின் முழு அனுமதியுடன்) எங்களுக்கு அனுப்பினால், அது சம நிலையான போதனையுடன் இருக்கும்பட்சத்தில் அதை தமிழ் கிறிஸ்தவ களஞ்சியத்தில் இலவசமாக வெளியிட ஆயத்தமாயிருக்கிறோம்.

தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியம் குறிப்பாக சீர்திருத்த போதனைகளையும், அதனுடன் ஒத்துப்போகும் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட முன்னுரிமை அளிக்கிறது. பரவச பெந்தேகோஸ்தே கிறிஸ்தவத்தின் அனுபவங்களான அந்நியபாஷை பேசுதல், தீர்க்கதரிசனம் சொல்லுதல், செழிப்பு உபதேசங்கள், அற்புத அடையாளங்கள், தரிசனங்கள் அல்லது சொந்த அனுபவங்களை மையப்படுத்தும் படைப்புகளைத் தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தில் வெளியிடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கும் எமது வெளியீட்டுக்கொள்கையைக் காணவும். தமிழ் கிறிஸ்தவக் களஞ்சியத்தை மேம்படுத்த உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.